உள்ளடக்கத்துக்குச் செல்

ஜுதாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜுதாய்
இயக்கம்ராஜ் கன்வர்
தயாரிப்புசுரிந்தர் கபூர்
போனி கபூர்
கதைபிரகாஷ் ராஜ்
எஸ். வி. கிருஷ்ணா ரெட்டி
ஜைனேந்திர ஜெயின்
கதைசொல்லிஅமிதாப் பச்சன்
இசைநதீம்-ஸ்ரவண்
நடிப்புஅனில் கபூர்
ஸ்ரீதேவி
ஊர்மிளா மடோன்கர்
பரேஷ் ராவல்
ஒளிப்பதிவுஹர்மீத் சிங்
படத்தொகுப்புவாமன் போஸ்லே
விநியோகம்எஸ்.கே. ஃபிலிம் எண்டர்பிரைசஸ்
ஈரோஸ் இண்டர்நேஷனல்
வெளியீடு28 பெப்பிரவரி 1997 (1997-02-28)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு₹6.30 கோடி[1]
மொத்த வருவாய்₹48.77 கோடி[2]

ஜூதாய் (Judaai; மொ.பெ. பிரிவு) என்பது 1997 ஆம் ஆண்டில் வெளியான ஓர் இந்திய இந்தி மொழிக் காதல் நாடகத் திரைப்படமாகும். ராஜ் கன்வர் இயக்கத்தில், சுரிந்தர் கபூர் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் அனில் கபூர், ஸ்ரீதேவி மற்றும் ஊர்மிளா மடோன்கர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் காதர் கான், ஃபரிதா ஜலால், ஜானி லிவர், பரேஷ் ராவல் மற்றும் சயீத் ஜாஃப்ரி ஆகியோர் துணைக்கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை பூனம் தில்லான் இதில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் 1994 இல் வெளியான சுபலக்னம் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கமாகும். பேராசை பிடித்த மனைவியான காஜல் (ஸ்ரீதேவி), பணத்தின் மீதான மோகத்தால் தனது கணவனை (அனில் கபூர்) இரண்டாவது திருமணம் செய்து கொள்ள சம்மதிக்க வைக்கும் குடும்பக் கதையை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதைக்களம்.[3]

இத்திரைப்படத்தின் சில பகுதிகள் சுவிட்சர்லாந்தின் துன் நகரில் படமாக்கப்பட்டன. வெளியான பிறகு, ₹6.30 கோடி வரவுசெலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் உலகளவில் ₹48.77 கோடி வசூல் செய்து வணிக ரீதியாகப் பெருவெற்றி பெற்றது. மேலும், 1997 ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவது இடத்தைப் பிடித்தது. இத்திரைப்படத்தில் நடித்த முதன்மை பெண் ஆளுமைகளான ஸ்ரீதேவி மற்றும் ஊர்மிளாவின் நடிப்பு விமர்சகர்களாலும் பார்வையாளர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.[4][5]

வரவேற்பு

[தொகு]

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இதழின் விமர்சகர் ஒருவர், இத்திரைப்படம் நகைச்சுவை மற்றும் குடும்ப நாடகக் கூறுகளைக் கச்சிதமாகக் கொண்டுள்ளதோடு, ஒரு நல்ல நன்னெறிப் பாடத்தையும் பார்வையாளர்களுக்கு வழங்குவதால் ஒரு தகுதியான பொழுதுபோக்குத் திரைப்படம் என்று பாராட்டியுள்ளார்.[6]

விருதுகள்

[தொகு]
விழாபிரிவுபரிந்துரைக்கப்பட்டவர்முடிவு
43-ஆவது பிலிம்பேர் விருதுகள் ஆண்டின் சிறந்த காட்சி ஜூதாய் வெற்றி
சிறந்த நடிகை ஸ்ரீதேவி பரிந்துரை
சிறந்த துணை நடிகைஊர்மிளா மடோன்கர் பரிந்துரை
சிறந்த நகைச்சுவை நடிகர்ஜானி லிவர் பரிந்துரை
ஸ்கிரீன் விருதுகள் சிறந்த நடிகை ஸ்ரீதேவி
சிறந்த துணை நடிகைஊர்மிளா மடோன்கர் பரிந்துரை
சீ சினி விருதுகள் சிறந்த நடிகைஸ்ரீதேவி பரிந்துரை
சிறந்த துணை நடிகைஊர்மிளா மடோன்கர் பரிந்துரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Judaai". boxofficeindia. BOI. Retrieved 7 April 2017. Budget: ₹6,00,00,000
  2. ↑ "Judaai". boxofficeindia. BOI. Retrieved 7 April 2017. Worldwide Gross: 48,04,75,000
  3. ↑ "New Straits Times - Google News Archive Search".
  4. ↑ "Images '97". Screen. 2 January 1998 இம் மூலத்தில் இருந்து 10 January 1998 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19980110140731/http://www.expressindia.com/screen/jan02/films1.htm.
  5. ↑ "Judaai: How Jitendra, Rekha, Anil Kapoor, Sridevi films with the same title became Bollywood blockbusters". The Times of India (in ஆங்கிலம்). 25 April 2026. Retrieved 30 July 2026.
  6. ↑ Vijiyan, K. N. (12 April 1997). "'Judaai' full of comedy and drama". New Straits Times: pp. Arts 4. https://news.google.com/newspapers?id=B81QAAAAIBAJ&sjid=LxUEAAAAIBAJ&pg=5398%2C4058215.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜுதாய்&oldid=4647273" இலிருந்து மீள்விக்கப்பட்டது