உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீலானி பானு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீலானி பானு
1999 இல் பானு
பிறப்பு(1936-07-14)14 சூலை 1936
பதாவுன், உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1 மார்ச்சு 2026(2026-03-01) (அகவை 89)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
பணிஎழுத்தாளர்
அறியப்படுவதுசிறுகதைகள், புதினங்கள்
விருதுகள்பத்மசிறீ
ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாடமி விருது
சோவியத் நாட்டின் நேரு விருது
குவாமி ஹாலி விருது
என்.டி.ஆர் தேசிய இலக்கிய விருது

ஜீலானி பானு (Jeelani Bano, 14 சூலை 1936 – 2 மார்ச் 2026[1]) இந்திய எழுத்தாளரும் புதின ஆசிரியரும் ஆவார். உருது, இந்தி, குசராத்தி, தெலுங்கு மொழிகளில் எழுதியவர். 2001-ஆம் ஆண்டில் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருதைப் பெற்றார்.

ஜீலானி பானு 1936 சூலை 14 அன்று இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள பதாவுனில், பிரபல உருதுக் கவிஞரான ஹேரத் பதாவுனுக்குப் மகளாகப் பிறந்தார்.[2][3][4] தனது பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, புகழ்பெற்ற கவிஞரும் உசுமானியா பல்கலைக்கழகத்தில் இசுலாமிய ஆய்வுகள் துறையின் முன்னாள் தலைவருமான அன்வர் மொசாம் என்பவரை மணந்து ஐதராபாத்திற்குக் குடிபெயர்ந்தபோது இடைநிலைப் படிப்பில் சேர்ந்தார்.[5] பின்னர், உருது மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[2][6]

தொழில் வாழ்க்கை

[தொகு]

பானு தனது எட்டு வயதில் எழுதத் தொடங்கினார். இவரது முதல் கதையான, ஏக் நாசர் இதர் பி 1952-இல் வெளியிடப்பட்டது.[4] ரோசினி கே மினார் தொடங்கி தொகுப்புகள் மற்றும் ஐவான்-இ-கசல் தொடங்கி புதினங்கள் உட்பட 22 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது புத்தகங்களின் பட்டியலில் சுயசரிதை, அஃப்சேன் மற்றும் பிற எழுத்தாளர்களுடனான இவரது கடிதத் தொகுப்பான தூர் கி ஆவாசென் ஆகியவை அடங்கும்.[7] இவரது கதைகளில் ஒன்றான நரசய்யா கி பாவ்டி, 2009 ஆம் ஆண்டு புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சியாம் பெனகலால் வெல் டன் அப்பா என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டது.[5][8] இவரது பல புத்தகங்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[5][6][9][10]

அஸ்மிதா என்கிற பெண்கள் உரிமைகளுக்கான அரசு சாரா அமைப்பின் முன்னாள் தலைவரான ஜீலானி பானு, ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் வசித்து வந்தார்.[5] இவர் யூத் பார் ஆக்சன் என்ற இளைஞர்களுக்கான செயல்பாட்டிலும் தொடர்புடையவர். அந்த அமைப்பின் முன்னாள் தலைவராகவும், இந்திய சர்வதேச மனித உரிமைகள் சங்கத்தின் ஒரு மன்றமான குழந்தை மற்றும் பெண்கள் மனித உரிமைகள் அமைப்பின் முதன்மை ஆலோசகராகவும் பணியாற்றினார். மேலும் வானொலி மற்றும் தொலைக்காட்சியுடன் தொடர்புகளையும் கொண்டிருந்தார்.

விருதுகளும் அங்கீகாரங்களும்

[தொகு]

பானு 1960 இல் ஆந்திரப் பிரதேச சாகித்ய அகாதமி விருதையும், 1985 இல் சோவியத் நாட்டின் நேரு விருதையும் பெற்றார்.[4][6]

1989ஆம் ஆண்டில் அரியானா உருது அகாதமியிலிருந்து குவாமி ஹாலி விருதைப் பெற்றார்.[4]

இந்திய அரசு 2001ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது வழங்கி இவரைக் கௌரவித்தது.[11]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

[தொகு]

இவர் 1954 முதல் இந்தி, உருது, குஜராத்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் எழுதியவர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Renowned Urdu writer Jeelani Bano passes away at 90
  2. 1 2 "Urdu Youth Forum". Urdu Youth Forum. 2014. Retrieved 12 January 2015.
  3. Rashīduddīn (1979). Allamah Hairat Badayuni: hayat aur adabi khidmat. Adabi Markaz. p. 125.
  4. 1 2 3 4 "Yalaburi". Yalaburi. 2014. Archived from the original on 4 மார்ச் 2016. Retrieved 12 January 2015.
  5. 1 2 3 4 "The Hindu". தி இந்து. 19 January 2012. Retrieved 12 January 2015.
  6. 1 2 3 "Muse India". Muse India. 2014. Archived from the original on 4 March 2016. Retrieved 12 January 2015.
  7. "Autobiography". Urdu Youth Forum. 2014. Retrieved 12 January 2015.
  8. "Well Done Abba". IMDB. 2014. Retrieved 12 January 2015.
  9. Jeelani Bano (1988). A Hail of Stones. Sterling Publishers. ISBN 978-8120718371.
  10. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. Archived from the original (PDF) on 15 October 2015. Retrieved 11 November 2014.

நூல் ஆதாரங்கள்

[தொகு]

மேலும் வாசிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீலானி_பானு&oldid=4591074" இலிருந்து மீள்விக்கப்பட்டது