சியுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜீயஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சியுசு
Jupiter Smyrna Louvre Ma13.jpg
சியுசு
இடம் ஒலிம்பசு மலைச்சிகரம்
துணை எரா மற்றும் பலர்
பெற்றோர்கள் குரோனசு மற்றும் ரியா
சகோதரன்/சகோதரி எசுடியா, ஏடிசு, ஈரா, பொசைடன், டிமடர்
குழந்தைகள் ஏசசு, ஏரிசு, ஏதெனா, அப்போலோ, ஆர்ட்டெமிசு, அப்ரோடிட், டார்டானசு, டயோனைசசு, எய்லெய்தியா, என்யோ, எரிசு, எபே, எர்மிசு, எராகில்சு, டிராயின் எலன், எஃபீசுடசு, பெர்சியுசு, மினாசு, மூசுகள், ஓரேக்கள், மொய்ரய்கள், கிரேசுகள்

சியுசு என்பவர் கிரேக்க பழங்கதைகளில் வரும் வானம் மற்றும் இடியின் கடவுள் ஆவார். இவர் ரோமப் பழங்கதைகளில் வரும் யூபிடருக்கு சமமானவர். ஒலிம்பிய மலையில் இருக்கும் சியுசு அனைத்து கிரேக்கக் கடவுள்களுக்கும் அரசர் ஆவார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைடன்களின் கடைசி மகன் ஆவார். இவருக்கு பல மனைவிகள் இருந்தாலும் அவர்களுள் ஈரா முதன்மையானவராகக் கருதப்படுகிறார். சியுசு பல பெண்கள் மேல் மோகம் கொண்டு அவர்களுடன் பலவிதங்களில் உறவாடினார். அதன் மூலம் அவருக்குப் புகழ்பெற்ற பல கடவுள்கள் மற்றும் வீரர்கள் பிறந்தனர். சியுசு பெரும்பாலும் நின்ற கோலத்தில் உயர்த்திய வலது கையில் இடி ஆயுதத்தை தாங்கியவாறும் அல்லது சிம்மாசனத்தில் அமர்ந்தவாறும் வர்ணிக்கப்படுகிறார்.

பிறப்பு[தொகு]

"சியுசின் குகை", இடா மலைச்சிகரம் (க்ரீட்).

தன் தந்தை யுரேனசை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த குரோனசு அதேபோன்று தனக்கும் நேரும் என்று தன் பெற்றோர் மூலம் அறிந்து கொண்டார். அதனால் தனக்குப் பிறந்த ஈரா, இசுடியா, டிமிடர், பொசைடன் மற்றும் ஏடிசு ஆகிய ஐந்து குழந்தைகளையும் விழுங்கி விட்டார். ஆறாவது குழந்தையான சியுசை ரேயா காப்பாற்ற நினைத்தார். அதற்காக கையா ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி ரேயா ஒரு கல்லில் துணியைச் சுற்றி குழந்தை என்று கூறி குரோனசை ஏமாற்றிவிடுகிறார். பிறகு க்ரீட் தீவில் உள்ள இடா மலைச்சிகரத்தின் குகையில் சியுசை மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் ரேயா. அதன் பிறகு சியுசை கயா வளர்த்ததாகக் கூறப்படுகிறது.

கடவுள்களின் அரசன்[தொகு]

சீயசின் தேர்.

சியுசு ஆடவனாக வளர்ந்ததும் தன் தந்தை குரோனசின் வயிற்றை கிழித்து தன் சகோதரர்களை விடுவித்தார். சில கதைகளில் ஓசனசின் மகள் மெட்டிசு குரோனசிற்கு மருந்து கலந்த பானத்தை கொடுத்ததாகவும் அதனால் அவருக்கு வாந்தி ஏற்பட்டு அதன் மூலம் சியுசின் சகோதரர்கள் விடுபட்டதாகவும் கூறப்படுகிறது. பிறகு சியுசு பாதாள உலகமான டார்டரசுக்குச் சென்றார். அங்கு காவலன் கேம்பேயை கொன்று, குரோனசின் சகோதரர்களான கைகான்ட்சுகள், எகாடோஞ்சிர்கள் மற்றும் சைக்ளோப்சுகள் ஆகியவர்களை விடுவித்தார்.

இதற்கு பரிசாக சைக்ளோப்சுகள் இடி ஆயுதத்தை சியுசிற்கு வழங்கினர். பிறகு சியுசு தன் சகோதரர்கள் மற்றும் குரோனசின் சகோதரர்களுடன் சேர்ந்து குரோனசையும் மற்ற டைட்டன்களையும் வீழ்த்தினான். இவர்களிடையே நடந்த போர் டைடனோமாச்சி என அழைக்கப்படுகிறது. பிறகு தோற்ற டைட்டன்கள் அனைவரும் டார்டரசுக்கு சென்றுவிட்டனர். அட்லசு என்ற டைட்டனுக்கு மட்டும் வானத்தைத் தன் தோளில் தாங்கும் தண்டனை கொடுக்கப்பட்டது.

போருக்குப் பிறகு சியுசு தன் அண்ணன்களுடன் உலகை பகிர்ந்து கொண்டார். அதன்படி வானம் சியுசுக்கும், கடல் பொசைடனுக்கும் பாதாளம் ஏடிசுக்கும் கிடைத்தது.

பிறகு கயாவின் அரக்கப் பிள்ளைகளான டைஃபோன் மற்றும் எச்சிட்னாவுடன் சியுசு போரிட்டார். டைஃபோனை வீழ்த்திய பிறகு அவரை ஏட்னா மலைச்சிகரத்தின் கீழ் அடைத்து வைத்தார். ஆனால் எசிட்னா மற்றும் அவர் பிள்ளைகளை சியுசு உயிருடன் விட்டுவிட்டார்.

சியுசின் காம விளையாட்டுக்கள்[தொகு]

பன்னிரு டைட்டன்களில் ஒருவரான கோயசு மற்றும் ஃபோபே ஆகியோரின் மகள் லெடோ. அவள் அழகில் மயங்கிய சியுசு அவளுடன் உறவாடினான். லெடோ மூலம் அப்போலோ மற்றும் ஆர்டமீசு ஆகிய இரட்டை குழந்தைகளின் தந்தையானார் சியுசு. இவர்கள் பிற்காலத்தில் கதிரவன் மற்றும் நிலா கடவுள்களாயினர்.

அரசன் தெசிதியுசின் மகள் லெடா. அவள் மீது காமம் கொண்ட சியுசு அன்னம் உருவில் வந்து அவளுடன் உறவாடினார். லெடா மூலம் எலன், கிளைடெம்னெசுட்ரா, கேசுடர், போலக்சு ஆகிய குழந்தைகளின் தந்தையானார் சியுசு. பிற்காலத்தில் சியுசு காசுடர் மற்றும் போலக்சு ஆகிய இருவரையும் சேர்த்து வானத்தில் மிதுனம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.

சியுசு(அன்னம்) மற்றும் லெடா

அரசன் ஆக்ரீசியசின் மகள் தானே. அவள் மீது காமம் கொண்டார் சியுசு. அவள் சிறையில் இருந்ததால் அவள் மீது தங்க மழையாக பொழிந்து சியுசு உறவாடினார். அதன் மூலம் தானேவிற்கு மாவீரன் பெர்சியுசு பிறந்தான். இவன் பிற்காலத்தில் கார்கன் சகோதரிகளுள் ஒருவரான மெடுசாவின் தலையைக் கொய்தான்.

எலக்ட்ரியோனின் மகள் அல்கிமி மேல் காமம் கொண்ட சியுசு அவள் கணவனான அம்ஃபிட்ரியோனின் உருவத்தில் வந்து அவளுடன் உறவாடினார். அதன் மூலம் மாவீரன் ஈராகில்சு பிறந்தான். இவன் பின்னாளில் பல சாகசங்கள் புரிந்தான்.

லைகாவோனின் மகள் காலிசுடோ. அவள் மீது காமம் கொண்ட சியுசு ஈராவின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக சந்திர கடவுள் ஆர்டமீசின் உருவெடுத்தார். பிறகு காலிசுடோ குளித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த சியுசு தன் உண்மையான உருவிற்கு மாறி அவருடன் உறவாடினார். அதன் மூலம் ஆர்கசு என்பவன் பிறந்தான். பிறகு நடந்த உண்மைகளை அறிந்த ஈரா காலிசுடோவை கரடியாக மாறும்படி சாபமிடுகிறார். இறுதியாக சியுசு காலிசுடோ மற்றும் ஆர்கசை வானத்தில் விண்மீன் கூட்டமாக வைக்கிறார்.

ஏக்னோர் என்னும் அரசனின் மகள் யூரோப்பா. அவள் மீது காமம் கொண்ட சியுசு வெள்ளைக் காளையாக மாறி அவளை சுமந்துக் கொண்டு கிரீட் தீவிற்கு சென்றார். பிறகு தன் உண்மையான உருவிற்கு மாறி யூரோப்பாவுடன் உறவாடினார். அதன் மூலம் மினோசு, ரடமந்தைசு மற்றும் சர்பெடான் ஆகியோர் பிறந்தனர். இவர்கள் மூவரும் பிற்காலத்தில் இறப்பின் நீதிபதிகளாயினர்.

சிறு கடவுள் எக்கோவுடன் சியுசு உறவாடிக்கொண்டிருந்தார். அதையறிந்த ஈரா சியுசை வருமாறு அழைத்தார். ஆனால் எக்கோ சியுசை செல்லவிடாமல் தொடர்ந்து அவருடன் பேசிக்கொண்டே இருந்தார். இதனால் கோபப்படும் ஈரா எக்கோவை மற்றவர்கள் கூறும் இறுதிச்சொற்களை மீண்டும் எதிரொலிக்குமாறு சாபம் வழங்கினார்.

டிரோசு மற்றும் கெல்லிர்வோயேவின் மகன் கானிமிடெ. அவன்மீது காமம் கொண்ட சியுசு கழுகு உருவம் கொண்டு அவனை ஒலிம்பிய மலைக்கு கடத்திச் சென்று உறவாடினார். பிறகு அவனுக்கு சாகா வரம் மற்றும் என்றும் இளமையாக இருக்கும் வரத்தை சியுசு அருளினார். பிறகு அவனை வானத்தில் கும்பம் என்னும் விண்மீன் கூட்டமாக அமர்த்தினார்.


சியுசு மற்றும் பிற கடவுள்கள் ஒற்றுமை[தொகு]

சியுசு ரோமக் கடவுளான யூபிடர், எகிப்திய கடவுள் அம்மோன், இந்துக் கடவுள் தேவேந்திரன் ஆகியோருடன் ஒப்பிடப்படுகிறார். மேலும் கிறித்தவ புனித நூலான விவிலியத்தில் வரும் பார்னபாசு என்பவர் சியுசுடன் ஒப்பிடப்படுகிறார்.

வம்சாவளி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. This chart is based upon Hesiod's Theogony, unless otherwise noted.
  2. According to Homer, Iliad 1.570–579, 14.338, Odyssey 8.312, Hephaestus was apparently the son of Hera and Zeus, see Gantz, p. 74.
  3. According to Hesiod, Theogony 927–929, Hephaestus was produced by Hera alone, with no father, see Gantz, p. 74.
  4. According to Hesiod, Theogony 886–890, of Zeus' children by his seven wives, Athena was the first to be conceived, but the last to be born; Zeus impregnated Metis then swallowed her, later Zeus himself gave birth to Athena "from his head", see Gantz, pp. 51–52, 83–84.
  5. According to Hesiod, Theogony 183–200, Aphrodite was born from Uranus' severed genitals, see Gantz, pp. 99–100.
  6. According to Homer, Aphrodite was the daughter of Zeus (Iliad 3.374, 20.105; Odyssey 8.308, 320) and Dione (Iliad 5.370–71), see Gantz, pp. 99–100.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சியுசு&oldid=2371487" இருந்து மீள்விக்கப்பட்டது