ஜீனத் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Zeenat Begum
தாய்மொழியில் பெயர்زینت بيگم
பிறப்புஷமிம் அக்தர்[1]
(1931-11-11)11 நவம்பர் 1931
மலெர்கோட்ட, பஞாப், பிரித்தானியாவின் இந்தியா
இறப்பு11 திசம்பர் 2007(2007-12-11) (அகவை 76)
லாகூர், பாகிஸ்தான்
மற்ற பெயர்கள்கடந்த கால ராணி[2]
பணி
  • பிண்ணனிப் பாடகர்
  • நடிகை
  • தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1942 – 2007
வாழ்க்கைத்
துணை
அப்துல் ஜப்பார்
(தி. 1949; ம.மு. 1955)

சாக்லேய்ன் ரிஸ்வி
பிள்ளைகள்1

ஜீனத் பேகம் (பிறப்பு ஷமிம் அக்தர் ; 11 நவம்பர் 1931 – 11 டிசம்பர் 2007), ஒரு பாகிஸ்தானிய பாடகி ஆவார்.[3] இவர் திரைப்படங்கள் மற்றும் வானொலியில் பாடல்களைப் பாடியதற்காக அவர் ’கடந்த கால ராணி ’என்று அழைக்கப்பட்டுகிறார்.[4]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜீனத் பேகம், 1931 - நவம்பர் 11 ஆம் தேதி, பிரித்தானியாவின் இந்தியாவின் பஞ்சாபில் உள்ள மலேர்கோட்லாவில் ஷமிம் அக்தர் என்ற பெயரில் பிறந்தார்.[5]

இசை வாழ்க்கை[தொகு]

ஜீனத் பேகம் ஒரு பரத்தை (கோதேவாலி) மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய பாடகி ஆவார்.[1] அவர் 1937 இல் பண்டிட் அமர்நாத்தால் கண்டுபிடிக்கப்பட்டார்.[1][6] 1942 ஆம் ஆண்டு கோவிந்த் ராமின் பஞ்சாபி திரைப்படமான மங்தியில் (1942) பாடியபோது பின்னணிப் பாடகியாக அவரது முதல் வெற்றி கிடைத்தது. மேலும் அப்படத்தில் நடிகையாகவும் அறிமுகமானார்.[2] இப்படம் லாகூரில் தயாரிக்கப்பட்ட முதல் பொன்விழா படமாக குறிக்கப்பட்டது.[1][7]

அவரது முதல் இந்தி படம் நிஷானி யாகும்(1942).[8] அதன் பின், பாஞ்சி (1944), ஷாலிமார் (1946), ஷெஹர் சே டூர் (1946) மற்றும் தாசி (1944) உள்ளிட்ட பிற குறிப்பிடத்தக்க படங்களுக்காக அவர் பாடினார்.[9][10]

ஜீனத் பேகம் 1944 இல் லாகூரிலிருந்து பம்பாய்க்கு குடிபெயர்ந்தார் [1] பம்பாயில் உள்ள பல இசை இயக்குனர்களுக்காக அவர் பாடியுள்ளார். இதில் பண்டிட் அமர்நாத்தின் இளைய சகோதரர்கள் - பண்டிட் ஹுஸ்னல் பகத்ராம், மாஸ்டர் குலாம் ஹைதர், பண்டிட் கோபிந்த் ராம் போன்றவர்கள் அடங்குவர்.[1] இந்தியாவில் அவர் கடைசியாகப் பாடிய படம் முக்தா (1951).[1] அவர் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்து லாகூர் வானொலி நிலையத்தில் சேர்ந்து 1950களின் பிற்பகுதி வரை அங்கு பணியாற்றினார்.[1] 1947 இல் பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, பல புதிய பின்னணி பாடகர்கள் பாகிஸ்தானுக்கு வந்தனர். இது ஜீனத் பேகத்தின் பின்னணி பாடல் வாழ்க்கையை பாதித்தது.[1] இருந்தபோதிலும் 1950கள் மற்றும் 1960களில் அவர் வானொலி லாகூரில் ஒரு முக்கிய பாடகியாக இருந்தார்.[1][11]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஜீனத் அப்துல் ஜப்பாரை மணந்து பின்னர் அவர்கள் 1955 இல் விவாகரத்து செய்தார். பின்னர் அவர் சக்லைன் ரிஸ்வியை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது.

இறப்பு[தொகு]

அவர் டிசம்பர் 11, 2007 அன்று பாகிஸ்தானின் லாகூரில் இறந்தார்.[1][12]

திரைப்படவியல்[தொகு]

திரைப்படம்[தொகு]

ஆண்டு திரைப்படம் மொழி
1942 நிஷானி ஹிந்தி
1942 மங்டி பஞ்சாபி [13]
1943 சஹாரா இந்தி [14]
1944 தாசி ஹிந்தி
1944 சந்த் ஹிந்தி
1944 பஞ்சி ஹிந்தி
1944 குல் பலோச் பஞ்சாபி [15][16]
1945 சம்பா ஹிந்தி
1946 கஹான் கயே ஹிந்தி
1946 ஷெஹர் சே டோர் ஹிந்தி
1946 ரெஹானா உருது
1946 ஷாலிமார் ஹிந்தி
1946 குஷ் நசீப் ஹிந்தி
1948 தெரி யாத் உருது
1949 ஏக் தி லார்கி ஹிந்தி
1949 கனீஸ் இந்தி [17]
1949 பெரே உருது [18]
1950 ஜஹாத் உருது
1950 ஹமாரி பஸ்தி உருது
1950 2 அன்சூ உருது
1950 ஷம்மி பஞ்சாபி
1951 முக்தா ஹிந்தி
1951 ஈத் உருது
1951 கைராத் உருது
1951 பில்லோ பஞ்சாபி
1952 ஷோலா உருது
1952 நாத் பஞ்சாபி
1953 சைலப் உருது
1953 இல்ஜாம் உருது
1963 இக் தேரா சஹாரா உருது
1970 நயா சவேரா உருது
1975 மொஹபத் ஜிந்தகி ஹை உருது

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Zeenat Begum profile". cineplot.com website. 2 நவம்பர் 2010. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2019."Zeenat Begum profile". cineplot.com website. 2 November 2010. Archived from the original on 1 November 2011. Retrieved 19 April 2019.
  2. 2.0 2.1 "Mallikas of yesteryear". Himal Southasian. 14 சனவரி 2022."Mallikas of yesteryear". Himal Southasian. 14 January 2022.
  3. name="cineplot">"Zeenat Begum profile". cineplot.com website. 2 நவம்பர் 2010. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2019.
  4. name="HimalSouthasian">"Mallikas of yesteryear". Himal Southasian. 14 சனவரி 2022.
  5. "زینت بیگم: فلمی صنعت کی ایک بھولی بسری آواز". ARY News. 23 சனவரி 2022.
  6. "Spotlight: World's greatest mums". Dawn News. 8 சூன் 2021.
  7. "Mohammad Rafi remembered". Dawn News. 26 பெப்பிரவரி 2022.
  8. "Zeenat Begum's Song List – (1942–1951)". Cineplot.com. 21 மே 2011. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2019.
  9. "Zeenat Begum". Cineplot.com. Archived from the original on 1 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்பிரல் 2020.
  10. Cinema Vision India Volume 2. 
  11. Sangeet Natak, Issues 99-102. 
  12. Profile of Zeenat Begum on pakmag.net website Retrieved 19 April 2019
  13. Routledge Handbook of Indian Cinemas. 
  14. A Woman of Substance: The Memoirs of Begum Khurshid Mirza, 1918-1989. 
  15. "Punjab's Rafi, Rafi's Punjab — a bond of love". Tribune India. 26 திசம்பர் 2021.
  16. Remembering Mohammed Rafi. 
  17. Encyclopaedia of Indian cinema. British Film Institute. https://archive.org/details/encyclopaediaofi0000raja. 
  18. Swami ji (26 மே 2020). "Pheray (1949 film) - a film review (scroll down to read this title)". Hot Spot Online website. Archived from the original on 13 சூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 4 பெப்பிரவரி 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீனத்_பேகம்&oldid=3845121" இலிருந்து மீள்விக்கப்பட்டது