ஜீதன் ராம் மாஞ்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bihar CM meets PM Modi.jpg
23வது பீகார் முன்னால் முதலமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 மே 2014[1]
முன்னவர் நிதிஷ் குமார்
தனிநபர் தகவல்
பிறப்பு 6 அக்டோபர் 1944 (1944-10-06) (அகவை 75)
மகாகர், கயை மாவட்டம், பீகார்
அரசியல் கட்சி ஐக்கிய ஜனதா தளம்,
(முன்னதாக இந்திய தேசிய காங்கிரசு, ஜனதா தளம் மற்றும் இராச்டிரிய ஜனதா தளம்)
வாழ்க்கை துணைவர்(கள்) சாந்தி தேவி
பிள்ளைகள் 2 மகன்கள், 5 மகள்கள்
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து
இணையம் http://cm.bih.nic.in/

ஜீதன் ராம் மாஞ்சி (Jitan Ram Manjhi, பி: 6 அக்டோபர் 1944) இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் ஒன்றான பீகார் மாநில அரசியல்வாதியும் அம்மாநிலத்தின் 23ஆவது முதலமைச்சரும் ஆவார். ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் முன்னாள் முதல்வருமான நிதிஷ் குமாரின் பதவி விலகலை அடுத்து இப்பொறுப்பை ஏற்றார் . முன்னதாக குமாரின் அமைச்சரவையில் ஆதி திராவிடர், ஆதி திராவிடப் பழங்குடியினர் நலவாழ்வு அமைச்சராகப் பணியாற்றி உள்ளார்.

ஐக்கிய சனதா தளத்தில் இணைவதற்கு முன்னதாக மாஞ்சி இந்திய தேசிய காங்கிரசு (1990 வரை), ஜனதா தளம் (1996 வரை) மற்றும் இராச்டிரிய ஜனதா தளம் (2005 வரை) கட்சிகளில் பங்காற்றி உள்ளார். அடிக்கடி கட்சி மாறும் மூத்த அரசியல்வாதியாக, 1980 முதல் 1990 வரை காங்கிரசு கட்சியிலிருந்தும் 1996இலிருந்து 2005 வரை இராச்டிரிய ஜனதா தளத்தின் சார்பாகவும் 2005 முதல் நிகழ்காலம் வரை ஐக்கிய சனதா தளக் கட்சியிலிருந்தும் பீகார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில அமைச்சராக பல்வேறு முதலமைச்சர்களின் கீழ் பொறுப்பாற்றி உள்ளார்.

முதல்வர்[தொகு]

2014ஆம் ஆண்டு பொது தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியடைந்ததால் அந்த கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமாகிய நிதீஸ்குமார் பதவி விலகினார்.[1][2] அப்போது அந்த அமைச்சரவையில் தாழ்த்தப்பட்டோர் துறை அமைச்சரும் நிதிஷ்குமாருக்கு நெருக்கமானவருமான மூத்த அரசியல்வாதியான இவரை பீகார் முதல்வராக நியமித்தார். இதன் மூலம் இவர் பீகாரின் 23ஆவது முதல்வராகப் பதவியேற்றார்.[3] இவரை நிதிஸ்குமார் பொம்மை முதல்வர்போல் ஆட்சி செய்ய நியமித்தார். ஆனால் இவர் அதை ஏற்கவில்லை. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஏழைமக்களுக்காக ஆட்சி செய்ததால் இவரைத் தூக்கிவிட்டு நிதீஸ்குமாரே ஆட்சியைப் பிடிக்க முற்பட்டர். இதற்கு இந்திய உச்ச நீதிமன்றம், அம்மாநில ஆளுநரும் ஒத்துக்கொள்ளவில்லை. இவரே இன்னொரு தடவை பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். ஆனால் இவர் தனது பதவியை 2015ஆம் ஆண்டு 2ஆம் தேதி அன்று துறந்தார்.[4]

புது கட்சி[தொகு]

2015 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி அன்று இவர் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் துவங்கினார்.[5] இவர் பாஜகவில் சேர்ந்து போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.[6]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீதன்_ராம்_மாஞ்சி&oldid=2721288" இருந்து மீள்விக்கப்பட்டது