உள்ளடக்கத்துக்குச் செல்

ஜீசு சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Gland of Zeis
உடற்கூற்றியல்

ஜீசு சுரப்பி (Gland of Zeis) என்பது கண் இமையின் விளிம்பில் அமைந்துள்ள ஒற்றை கதுப்புடன் கூடிய சரும மெழுகுச் சுரப்பிகள் ஆகும். ஜீசு சுரப்பிகள் கண் இமைக்குச் சேவை செய்கின்றன. இந்தச் சுரப்பிகள் ஒருவகையான எண்ணெய் பொருளை உற்பத்தி செய்கின்றன. இது மயிர்க்கால்களின் நடுப் பகுதிக்குள் மெழுகு கதுப்பின் வெளியேற்ற நுண்குழல் வழியாக வெளியிடப்படுகிறது. இச்சுரப்பிகள் அமைந்துள்ள கண் இமைப் பகுதியில், கண் இமைகளின் அடிப்பகுதிக்கு அருகில் "மோல் சுரப்பிகள்" என்று அழைக்கப்படும் அப்போகிரைன் சுரப்பிகள் உள்ளன.[1][2][3]

கண் இமைகளைச் சுத்தமாக வைத்திருக்காவிட்டால், குழிப்பையழற்சி போன்ற நிலைமைகள் ஏற்படலாம். மேலும் சரும சுரப்பி பாதிக்கப்பட்டால், புண் மற்றும் சீழ்க்கட்டிகளுக்கு வழிவகுக்கும். ஜீசு சுரப்பிகள் செருமன் கண் மருத்துவ நிபுணர் எட்வர்ட் ஜீசு (′1807-1868) என்பவரின் பெயரால் அழைக்கப்படுகின்றன.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Anthony J. Bron; Eugene Wolff; Rama C. Tripathi; Brenda J. Tripathi, eds. (1997). Wolff's Anatomy of the Eye and Orbit (8th, illustrated ed.). Chapman & Hall. ISBN 978-0-412-41010-9.
  2. "Gland of Zeis - an overview". www.sciencedirect.com. 2024-12-12. Retrieved 2024-12-12.
  3. https://www.coavision.org/files/100-%20Sindt%20Dont%20overlook%20the%20lids%202016.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீசு_சுரப்பி&oldid=4208271" இலிருந்து மீள்விக்கப்பட்டது