ஜி. வாகீசம் பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. வாகீசம் பிள்ளை (G. Vagheesam Pillai) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் 1952 மற்றும் 1957 தேர்தல்களில் சிதம்பரம் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகத் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுவாமி சகஜானந்தா சரசுவதி இரண்டாவதாக வெற்றி பெற்றார்.[1][2]

1915 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 அன்று ஒரு விவசாய குடும்பத்தில் சிதம்பரத்தில் பிறந்த இவருக்கு நான்கு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிதம்பரம் நடராசப் பெருமான் கோயில் கும்பாபிஷேகம் 1988 பிப்ரவரியில் இவரது தலைமையில் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வாகீசம்_பிள்ளை&oldid=3388552" இலிருந்து மீள்விக்கப்பட்டது