ஜி. லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி. லட்சுமணன் தமிழகத்தைச் சேர்ந்த தடகள ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 2017 ஆம் ஆண்டு நடந்த 22 ஆவது ஆசிய தடகளப் போட்டியில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயப் பிரிவுகளில் தங்கம் வென்றவர்.[1][2]

22 ஆவது ஆசிய தடகளப் போட்டி[தொகு]

  • 5,000 மீட்டர் போட்டியில் பந்தய தூரத்தை 14 நிமிடங்கள் 54.48 விநாடிகளில் கடந்து வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் காரணமாக, 2017 ஆம் ஆண்டின் ஆகத்து மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்சிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.[3]
  • ஆசிய தடகளப் போட்டிகளில் 5,000 மீட்டர், 10,000 மீட்டர் ஆகிய இரு ஓட்டப் பந்தயப் பிரிவுகளிலும் தங்கம் வென்ற ஒரே இந்தியர் எனும் பெருமையும் இவருக்குக் கிடைத்தது.[4]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த இவர் தனது இளம் வயதில் புதுக்கோட்டை நகரத்துச் சாலைகளில் வெறுங்காலில் ஓடி பயிற்சி பெற்றார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணன், இந்திய இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._லட்சுமணன்&oldid=2382127" இருந்து மீள்விக்கப்பட்டது