ஜி. பி. சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. பி. சோப்ரா
பிறப்பு1920
இந்தியா
இறப்புசெப்டம்பர் 23
புது தில்லி
பணிகல்வியாளர்
விருதுகள்பத்ம பூசண்
பத்மசிறீ
தில்லி இரத்னா
கிம்பிரோ பிளாட்டினம் தரநிலை
வலைத்தளம்
Official web site of DAV Network

ஞான பிரகாசு சோப்ரா (Gyan Prakash Chopra) இவர் ஓர் இந்திய கல்வியாளரும், இந்தியாவில் பல கல்வி நிறுவனங்களை நிறுவிய பெருமைக்குரியவருமாவார்.[1] இவர் 1999 ஆம் ஆண்டில் பத்மசிறீ விருது பெற்ற்றுள்ளார்.[2] கல்வித்துறையில் இவர் செய்த சேவைகளுக்காக 2010 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தால் மீண்டும் பத்ம பூசண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[3]

சுயசரிதை[தொகு]

ஜி. பி. சோப்ரா 1920 இல் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற பிறகு, இன்றைய பாக்கித்தானின் சியால்கோட்டிலுள்ள முர்ரே கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்தார். இந்திய சுதந்திரம் மற்றும் பிரிவினைக்குப் பிறகு, இவர் புதுடெல்லிக்குச் சென்று தில்லி பல்கலைக்கழகத்தின் ஆன்சு ராசு கல்லூரியில் சேர்ந்தார். கற்பித்தல் சேவையில் இருந்து ஓய்வு பெறும் வரை கல்லூரியில் கற்பித்தார்.[4]

ஞான பிரகாசு சோப்ரா 123 ஆண்டுகள் பழமையான அரசு சாரா அமைப்பான தயானந்த் ஆங்கிலோ-வேத கல்வி மையங்களின் வலையமைப்பின் நிறுவனங்களின் தலைவராக இருந்தார். இவரது காலகட்டத்தில், இமாச்சலப் பிரதேசம், சார்க்கண்ட் மற்றும் ஒரிசாவின் கிராமப்புற மற்றும் பழங்குடிப் பகுதிகள் உட்பட நாடு முழுவதும் பல தயானந்த் ஆங்கிலோ-வேத குழுமங்களின் கல்வி நிறுவனங்களை நிறுவுவதில் இவர் வெற்றி பெற்றார்.[1][5]

தயானந்த் ஆங்கிலோ-வேத குழுமங்களின் வலையமைப்பு[தொகு]

தயானந்த் ஆங்கிலோ-வேத குழுமங்களின் வலையமைப்பு கல்வியை மையமாகக் கொண்ட ஒரு குழு ஆகும். இது 1886 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 700 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது. இதன் மாணவர் எண்ணிக்கை சுமார் ஒரு மில்லியன் ஆகும். இதன் நிர்வாகக் குழுவின் தலைவராக சோப்ராவின் ஆட்சிக் காலத்தில் இந்த குழுமம் வளர்ச்சியைக் கண்டது.[6][7] தயானந்த் ஆங்கிலோ-வேத குழுமங்களின் பள்ளிகளில் முதலாவது 1885 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வருடம் கழித்து தயானந்த் ஆங்கிலோ-வேத குழுமங்களின் அறக்கட்டளை மற்றும் மேலாண்மை சங்கம் நிறுவப்பட்டது. தயானந்த் சரஸ்வதி அவர்களால் நிறுவப்பட்ட இந்த இயக்கத்தில், அன்ஸ் ராஜ் அன்ஸ், மெகர் சந்த், இலாலா பால்ராஜ், நீதிபதி மெகர் சந்த் மகாசன், மருத்துவர் ஜி. எல். தத்தா, இலாலா சூரஜ் பன், பேராசிரியர் வேதி வியாசு, தர்பாரி லால், தி. ஆர். துலி, ஜி. பி. சோப்ரா மற்றும் புனம் சூரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

  • பத்ம பூஷண் - 2010 [3]
  • பத்மஸ்ரீ - 1999 [8][9]
  • கிம்பிரோ பிளாட்டினம் தரநிலை - 2009 [5]
  • தில்லி இரத்னா   - அறிவுஜீவிகளின் அகில இந்திய மாநாடு [10]
  • புகழ்பெற்ற சக   - மதங்களின் ஒற்றுமை மற்றும் அறிவொளி குடியுரிமைக்கான அறக்கட்டளை (FUREC)

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Zoom info bio". Archived from the original on 9 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Padma Shri". பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  3. 3.0 3.1 "Padma announcement". பார்க்கப்பட்ட நாள் 7 August 2014.
  4. "Educationist G.P. Chopra no more". The Hindu. 23 September 2011. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/educationist-gp-chopra-no-more/article2478281.ece. பார்த்த நாள்: 16 July 2019. 
  5. 5.0 5.1 "Qimpro award". பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  6. "DAV". Archived from the original on 9 August 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  7. "DAV web site". Archived from the original on 19 July 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  8. "Padma 1999". Archived from the original on 10 August 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  9. "Padma shri". பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  10. "Delhi Ratna" (PDF). Archived from the original (PDF) on 9 August 2014. பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  11. "New Year message". பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
  12. "Documentary". பார்க்கப்பட்ட நாள் 8 August 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._பி._சோப்ரா&oldid=3930423" இலிருந்து மீள்விக்கப்பட்டது