ஜி. டி. அகர்வால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. டி. அகர்வால்
G. D. Agrawal
பிறப்புகுரு தாஸ் அகர்வால்
(1932-07-20)சூலை 20, 1932
பிரித்தானிய இந்தியா,
உத்திரப் பிரதேசம்,
முசாபர்நகர் மாவட்டம்,
கந்தலா
இறப்பு11 அக்டோபர் 2018(2018-10-11) (அகவை 86)
உத்தரகண்ட்,
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், ரிஷிகேஷ்
இறப்பிற்கான
காரணம்
உண்ணா நோண்பு இறப்பு
கல்லறைமத்தியப் பிரதேசம்,
சித்திரக்கூடம்
இருப்பிடம்மத்தியப் பிரதேசம்,
சித்திரக்கூடம்
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்சந்த் சுவாமி சனந்த்,
சுவாமி கியான் ஸ்வரூப் சந்த்
குடியுரிமைஇந்தியர்
கல்விகுடிமைப் பொறியியல்
சுற்றுச்சூழல் பொறியியல்
படித்த கல்வி நிறுவனங்கள்பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கி, கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)
பணிசுற்றுச்சூழல் பொறியியாளர்
பணியகம்இந்திய அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இந்திய தொழில்நுட்பக் கழகம் ரூர்க்கியில் பேராசிரியர்
அறியப்படுவது2009 ஆண்டு பாகிதி ஆற்றின் குறுக்கே நீர்மின் திட்டத்துக்கு அணை கட்டும் திட்டத்தை நிறுத்தியது
பட்டம்முதல் உறுப்பினர் செயலர் (CPCB), முன்னாள் துறைத் தலைவர் (ஐஐடி)
பதவிக்காலம்இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூரில் 17 ஆண்டுகள்

குரு தாஸ் அகர்வால் இவர் சந்த் சுவாமி சனந்த் என்றும் அழைக்கப்படுகிறார்  (Guru das Agrawal also known as Sant Swami Sanand, Sant Swami Gyan Swaroop Sanand (20 சூலை 1932 – 11 அக்டோபர் 2018) இவர் ஒரு இந்திய சுற்றுச்சூழல் பொறியாளர், சமயத் தலைவர், துறவி, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், பேராசிரியர் ஆவார். மேலும் இவர் மதன் மோகன் மாளவியாவால்  1905 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கங்கை மகாசபையின் புரவலர் ஆவார்.

கங்கை ஆற்றைக் காக்க பல உண்ண நோண்பு போராட்டங்களில் ஈடுப்படு பல திட்டங்களை நிறுத்தியதற்காக இவர் அறியப்படுகிறார்.   2009 ஆம் ஆண்டில் இவரது உண்ணா விரதமானது பாகிதி ஆற்றின் குறுக்கே நீர்மின் அணை கட்டும் திட்டத்தை நிறுத்த வழிவகுத்தது.[1]

கங்கையை தூய்மைப்படுத்துவதாகவும், காப்பதாகவும் இந்திய அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி, 2018 சூன் 22 முதல்  அக்டோபர்  11 வரை  112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஜி. டி. அகர்வால் உயிரிழந்தார்.[2]

முன் வாழ்கை[தொகு]

1932ஆம் ஆண்டு, பிரித்தானிய இந்தியாவில், உத்திரப் பிரதேசத்தின், முசாபர்நகர் மாவட்டம், கந்தலாவில் விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தார் ஜி.டி. அகர்வால் எனும் குரு தாஸ் அகர்வால். சுற்றுச்சூழல் பொறியாளரான இவர், இந்திய தொழில்நுட்பக் கழகம் கான்பூரில் 17 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 2011 சூலை மாதம் தன் 79ஆவது வயதில் சுவாமி கயன்ஸ்வோரோப் சானந்த் என்ற பெயரில் இவர் துறவரம் பூண்டார்.[3]

கங்கைக் காப்புப் போராட்டங்கள்[தொகு]

கங்கை ஆற்றை மீட்பதற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த இவர் 2008, 2009, 2010, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் கங்கையைக் காக்க உண்ணாவிரதம் இருந்து, அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான அரசை அவருடைய கோரிக்கைகளுக்கு ஓரளவுக்கு செவிசாய்க்கவைத்தார்.

நரேந்திர மோதி பிரதமரான பிறகு, கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்காகத் தனி அமைச்சரகத்தை அமைத்து, உமா பாரதியை அதற்கான அமைச்சராக நியமித்தார். கங்கையை தூய்மைபடுத்தும் திட்டத்துக்கு சுமார் 4,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இருந்தும், கங்கையின் நிலை முன்பைவிட மோசமடைந்ததாக தரவுகள் வெளியாயின.

இதைக்கண்டு வேதனைக்கு ஆளான ஜி. டி. அகர்வால் 2018 பிப்ரவரி 24ஆம் நாள், பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பினார் அகர்வால். அதில், தான் முன்வைக்கும் ஆக்கப்பூர்வமான திட்டங்களை 2018 சூன் 22ஆம் தேதிக்குள் தொடங்க வேண்டும். இது ஏற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில், தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பதாக, தெரிவித்திருந்தார். பிரதமரிடம் இருந்து எந்த நடவடிக்கையோ அல்லது பதில் கடிதமோ கிடைக்காததால், சூன் 22 முதல் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

ஆகத்து மூன்றாம் நாளன்று அமைச்சர் உமா பாரதி அகர்வாலை சந்தித்தபோது அவரிடம் பிரதமருக்கு ஒரு கடித்தைக் கொடுத்து அனுப்பினார். அதில், கங்கை ஆற்றுக்கென தனி அமைச்சரவையை உருவாக்கிய நீங்கள், அதை மீட்டெடுக்க இரண்டு அடிகள் முன் செல்வீர்கள் என நம்பினேன். ஆனால், என்னுடைய இத்தனை வருடச் சூழலியல் அனுபவத்தில் சொல்கிறேன்… நீங்கள் கங்கையை மீட்டெடுப்பதற்காக, இந்த நான்கு ஆண்டுகளில், உருப்படியான ஒரு நல்ல நடவடிக்கைகூட எடுக்கவில்லை. நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் நிறுவனங்களுக்குப் பயனளிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தன. நான் மீண்டும் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன். தயவு கூர்ந்து கங்கையை மீட்டெடுங்கள்’ என எழுதியிருந்தார்.[4] அவருடைய அந்தக் கடிதத்தம் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் அக்டோபர் 11ஆம் நாள் அகர்வால் தன் 112 நாட்கள் உண்ணாவிரதத்தின் முடிவில் உயிர் இழந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dying for the Ganges: A Scientist Turned Swami Risks All". National Geographic Blog.
  2. "'Ganga Activist' GD Agrawal, On Fast From About 4 Months For Clean Ganga, Dies At 87 - HeadLines Today". headlinestoday.org. Headlines Today. 11 October 2018. https://headlinestoday.org/national/3681/ganga-activist-gd-agrawal-on-fast-from-about-4-months-for-clean-ganga-dies-at-87/. பார்த்த நாள்: 11 October 2018. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. Noted environmentalist embraces sanyas Times of India – 4 July 2011
  4. முகமது ஹுசைன் (27 அக்டோபர் 2018). "நதியில் கரைந்த மாமனிதர்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 30 அக்டோபர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._டி._அகர்வால்&oldid=3578339" இலிருந்து மீள்விக்கப்பட்டது