ஜி. சி. அனுபமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி.சி. அனுபமா இந்திய வானவியலாளர் ஆவர். பெங்களூரில் உள்ள இந்திய வானியல் மையத்தின் (IIA) தலைமை மற்றும் மூத்த பேராசிரியர் ஆவார். தற்போது இவர் (2019-2022 ) இந்தியாவின் வானியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியாவில் தொழில்முறை வானியலாளர்கள் சங்த்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முதல் பெண்மணியாவார் [1] ஐக்கிய அமெரிக்காவின் ஹவாலியில், பன்னாட்டு அளவிலான முப்பது மீட்டர் தொலைநோக்கி (TMT) அமைக்கும் முயற்சிக்கான திட்டத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.[2] உலகின் ஒன்பதாவது மிக உயர்ந்த தளமான லடாக் பகுதியில் லெஹ் அருகிலுள்ள ஹேனலில் அமைந்துள்ள உலகின் ஒளியியல், அகச்சிவப்பு மற்றும் காமா கதிர் தொலைநோக்கியான ஹிமாலயன் தொலைநோக்கியின் [3] வடிவமைப்பு மற்றும் நிறுவனப் பொறுப்பாளராகவும் அனுபமா இருந்துள்ளார்.

அனுபமா வானியல் துறை குறித்த பல்வேறுஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், ஒரு மீயொளிர் விண்மீன் வெடிப்புக்குப் பிறகான இயற்பியல் நிலைகள் குறித்து இவரது ஆய்வுகள் அமைந்த்ள்ளன. மேலும் இவர் ஏ.எஸ்.ஐ. இதழின் ஆசிரியரும் ஆவார். அவர் 'டிரான்சிஸ்டர்கள்' படிக்கிறார் - விண்வெளியில் இருண்டு போவதற்கு முன்னர் சிறிது காலத்திற்கு பிரகாசமாக இருக்கும் பொருட்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்[தொகு]

2001 இல் தேசிய அறிவியல் அகாடமி வழங்கும் சர் சி.வி.ராமன் இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார் [4] . 1991 ஆம் ஆண்டில் ஐ.ஏ.இ.இலிருந்து தனது இளநிலை முனைவர் பட்டத்தை முடித்து 1994 வரை அதன் ஆசிரிய உறுப்பினராக இருந்துள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சி._அனுபமா&oldid=2791579" இருந்து மீள்விக்கப்பட்டது