ஜி. சங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜி. சங்கர்

ஜி. சங்கர் (G. Shankar) [1] Arusha, East Africa[2]) என்பவர்  கேரளத்தைச் சேர்ந்த ஒரு கட்டிடக் கலைஞர் ஆவார். இவரது முழு பெயரானது கோபாலன் நாயர் சங்கர் என்பதாகும். இவர் உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு, குறைந்த செலவில் நிலைத்தன்மை வாய்ந்த கட்டுமானத்தில் பசுமை வீடுகள் கட்டுவதை வலியுறுத்துகிறார். இவர் 1987ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ‘ஹேபிடட் டெக்னாலஜி குருப்’ என்ற அமைப்பை நிறுவினார்.

இந்த அமைப்பானது 2012 வரை,  பல பலகைகளில் குறைந்த செலவில் வீடுகள் கட்ட உதவிவருகிறது.[3] இவர் பசுமைக் கட்டிடக்கலை, சேரி மக்களை மீள்குடியேற்றம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிவமைப்பு ஆகியவற்றிற்கான மூன்று தேசிய விருதுகளை வென்றிருக்கிறார்.    "பசுமைக் கட்டடக்கலை" பற்றிய இவரது அணுகுமுறையானது இவருக்கு "மக்களின் கட்டிடக்கலைஞர்" என்ற புகழைப் பெற்றுத் தந்துள்ளது.[4] இவரது பணிகளைப் பாராட்டும் விதமாக இந்திய அரசால் இவருக்கு 2011 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". மூல முகவரியிலிருந்து 26 April 2012 அன்று பரணிடப்பட்டது.CS1 maint: Archived copy as title (link) "Archived copy". மூல முகவரியிலிருந்து 26 April 2012 அன்று பரணிடப்பட்டது.
  2. Kerala Celebrity - G. Shankar[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Habitat Group Profile
  4. R, Anupama (14 May 2004). "People's Architect". The Hindu Business Line. https://www.thehindubusinessline.com/life/2004/05/14/stories/2004051400180400.htm. பார்த்த நாள்: 22 May 2018. 
  5. Padma Awards Announced
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._சங்கர்&oldid=2956685" இருந்து மீள்விக்கப்பட்டது