உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. கோவிந்தராயுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. கோவிந்தராஜுலு நாயுடு (G. Govindarajulu Naidu) பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோருக்கு முன்னவராக திரையிசையுலகில் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர்.

இவரின் இசையமைப்பில் திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, சி. எஸ். ஜெயராமன், பி. லீலா, ஜிக்கி, டி. வி. ரத்தினம், ஏ. பி. கோமளா, ஏ. எம். ராஜா, கண்டசாலா ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர்.

இசையமைத்த சில பாடல்கள்

[தொகு]

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

[தொகு]

கோவிந்தராஜுலு இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:[1]

  1. சதி அனுசுயா (1937)
  2. ராஜபக்தி (1937)
  3. வேணுகானம் (1941)
  4. விஜயலட்சுமி (1946)
  5. நம் நாடு (1949)
  6. அந்தமான் கைதி (1951)
  7. மனிதனும் மிருகமும் (1953)
  8. கள்வனின் காதலி (1955 திரைப்படம்)
  9. மாய மனிதன் (1958)
  10. பத்தரைமாத்து தங்கம் (1959)
  11. பாக்தாத் திருடன் (1960)
  12. சிறீ கந்த லீலா
  13. சந்திரிகா

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Music by Govindarajulu Naidu". www.indian-heritage.org. பார்க்கப்பட்ட நாள் 9 செப்டம்பர் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._கோவிந்தராயுலு&oldid=3930422" இலிருந்து மீள்விக்கப்பட்டது