ஜி. கே. ஷெட்டி இந்து வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜி.கே.ஷெட்டி இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ( GK SHETTY HINDU VIDYALAYA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL) என்பது தமிழ்நாடு மாநிலம்,சென்னை புறநகரில் உள்ள ஆதம்பாக்கத்தில் உள்ளது.

வரலாறு[தொகு]

ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் உறுப்பினர் ஸ்ரீ.எஸ்.ஜே.போத்தி என்பவரின் உதவியுடன் 1979 ஆம் ஆண்டு இந்த பள்ளி துவங்கப்பட்டது.ஜி.கே.ஷெட்டி அளித்த நிதி உதவியுடன் பள்ளிக்குத் தேவையான பிற வசதிகளை நிவர்த்தி செய்தனர். இந்தப்பள்ளி 2006 ஆம் ஆண்டு ISO-9001-2000 சான்றிதழைப் பெற்றது.[1]

விருதுகள்[தொகு]

தேசிய நல்லாசிரியர் விருது குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் அவர்களினால் பெறப்பட்டது.[தெளிவுபடுத்துக]

கல்வி முறை[தொகு]

தமிழ்நாடு மாநில சமச்சீர் கல்வி முறைகளை பின்பற்றுகிறது. மழலையர் பள்ளி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்கு கற்பிக்கப்படுகிறது. கல்வி இணைச்செயல்பாடுகளாக புல்லாங்குழல், மிருதங்கம், வயலின் போன்ற இசைக்கருவிகள் வாசிப்பதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பரதநாட்டியம் மற்றும் சிலம்பாட்டம் போன்ற கலைகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

விளையாட்டு[தொகு]

வாரத்திற்கு ஐந்து மணி நேரம் விளையாடுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பல மாணவர்கள் குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

http://hinduvidyalaya.org/ http://www.hindu.com/yw/2003/10/04/stories/2003100401060300.htm