ஜி. குப்புசாமி
ஜி. குப்புசாமி | |
---|---|
பிறப்பு | ஆரணி |
தொழில் | மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் கட்டுரையாளர் |
செயற்பட்ட ஆண்டுகள் | 2002-தற்போது |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சின்ன விஷயங்களின் கடவுள் என் பெயர் சிவப்பு 2009 பனி 2013 இஸ்தான்புல் 2014 |
துணைவர் | நர்மதா |
இணையதளம் | |
https://gkwrites.wixsite.com/welcome |
ஜி.குப்புசாமி (G. Kuppuswamy) (ஆகஸ்ட் 4, 1962) இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஓர் இலக்கிய மொழிபெயர்ப்பாளரும் கட்டுரை எழுத்தாளர். ஆங்கிலம் வழியாகத் தமிழில் ஐரோப்பிய இலக்கியங்களையும் இந்திய-ஆங்கில எழுத்துக்களையும் மொழியாக்கம் செய்து வருகிறார். ஓரான் பாமுக், அருந்ததி ராய் ஆகியோரது படைப்புகளில் இவரது மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. மொழிபெயர்ப்பு மட்டுமின்றி அதுகுறித்த ஆழமான கட்டுரைகள், விமர்சனங்கள், கலந்தாய்வுகள் மற்றும் விவாதங்களையும் தொடங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
இந்து தமிழ் திசை[1], காலச்சுவடு[2], ஆனந்த விகடன்[3], புது எழுத்து[4], கனலி[5] போன்ற அச்சு மற்றும் இணைய இதழ்களில் இவரது படைப்புகளும், தூர்தர்ஷன் தமிழ்[6], அனைத்திந்திய வானொலி போன்ற ஊடகங்களில் இவரது நேர்காணல்களும் வெளியாகியுள்ளன.
பிறப்பு, வாழ்க்கை
[தொகு]ஜி.குப்புசாமி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், ஆகஸ்ட் 4, 1962 அன்று எம்.கணேசன் - விஜயலட்சுமி இணையருக்கு பிறந்தார். பள்ளிப்படிப்பு ஆரணியில் நிறைவுற்றபின் கல்லூரி படிப்பை வேலூரிலும், பின்பு சென்னையிலும் முடித்தார்.
ஜி.குப்புசாமி 2005-ம் ஆண்டு நர்மதா அவர்களை மணந்தார். நர்மதா குப்புசாமி ஓர் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். தஸ்தயெவ்ஸ்கியின் நாவல் ‘நிரந்தரக் கணவன்’ எனும் பெயரிலும், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் ‘சின்ட்ரெல்லா நடனம்’ எனும் பெயரிலும் வெளியானது. ‘இமையாள்[7]’ எனும் பெயரில் கவிதை எழுதிவரும் இவர், ‘ஆண்கள் இல்லாத வீடு’ எனும் கவிதைத்தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.
மொழிபெயர்ப்பு
[தொகு]ஜி.குப்புசாமி அவர்களின் முதல் மொழியாக்கமாக குஜராத் மதக் கலவரம் பற்றிய அருந்ததி ராயின் கட்டுரை, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் (தற்போதைய த.மு.எ.க.ச) ஒத்துழைப்புடன் [8]மே மாதம் 2002-ம் ஆண்டு வெளியானது.[9] அருந்ததி ராய், துருக்கிய எழுத்தாளர் ஓரான் பாமுக் இருவரின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்ததில் ஜி.குப்புசாமியின் பங்களிப்பு முக்கியமானது. ’அயல் மகரந்தச் சேர்க்கை’[10] என்ற மொழிபெயர்க்கப்பட்ட நேர்காணல்கள் மற்றும் சிறுகதைகள் தொகுப்பில் பல்வேறு நாட்டின் சிறுகதை எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தார். தன் மொழியில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.[11] தொடர்ந்து மொழிபெயர்ப்பு குறித்தும், மொழிபெயர்ப்பாளர்கள் குறித்தும் கட்டுரைகள், நேர்காணல் அளித்துவரும் ஜி.குப்புசாமி, நடிகர் கமல்ஹாசன் அவர்களின் கமல் பண்பாட்டு மையத்துடன் இணைந்து 2024-ம் ஆண்டு செப் 26, 27 ஆகிய இரு நாட்களில் மொழிபெயர்ப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளார்.[12]
அங்கீகாரங்கள்
[தொகு]- ஜான் பான்வில்லிபன் கடல் நாவலை தமிழுக்கு மொழிபெயர்த்தன் வழியே தமிழ் இலக்கிய உலகில் தீவிர வாசகர் பரப்பை அடைந்தார்[13]. கடல் நாவலைப் படித்த விமர்சகர்கள், மூலப்பிரதிக்கு மிகவும் நெருக்கமான மொழிபெயர்ப்பு இவருக்கு சாத்தியமாகியுள்ளதாக பாராட்டியுள்ளனர்.[14]
- அருந்ததி ராயின் ’சின்ன விஷயங்களின் கடவுள்’[15] நூலில், அருந்ததியின் குரலைத் தமிழில் ஒலிக்க விட ஜி.குப்புசாமி அதிக சிரத்தை எடுத்து அதில் வெற்றியும் பெற்றிருப்பதாகவும், ஓரான் பாமுக்கின் 'என் பெயர் சிவப்பு’[16][17], ’பனி’[18], ’இஸ்தான்புல்’[19], ’வெண்ணிறக் கோட்டை’[20] ஆகிய நாவல்கள் மூலம் தமிழ் வாசகர்ளை துருக்கி சூழலை நேரடியாக உணரவைத்திருப்பதாக நூல் விமர்சனக் கட்டுரைகளில் வாசகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.[21][22]
- ’இஸ்தான்புல்’ நூலில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பைப் பற்றி குறிப்பிடும் எழுத்தாளர் சாரு நிவேதிதா, ”இஸ்தான்புல்லை படித்துவிட்டு துருக்கிக்கே சென்று வந்துவிட்டேன்” என்று தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.[23]
- ஜி.குப்புசாமி அவர்களின் மொழிபெயர்ப்பு குறித்தும், அது தொடர்பான அவரது கட்டுரைகள் குறித்தும் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது இணையதள கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.[24][25]
- ”தமிழுக்குப் பெரும் பங்களிப்பாற்றியிருக்கும் மொழிபெயர்ப்பாளர்கள் வரிசையில் வைக்கவேண்டிய முக்கியமான மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி” என எழுத்தாளர் ஜெயமோகன் தனது கட்டுரையில் வாழ்த்தியுள்ளார்.[26]
- ’சின்ன விஷயங்களின் கடவுள்’ நூல் வெளியீட்டில், "இன்று நமக்கிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களில், நம்பகமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் ஜி.குப்புசாமி" என காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர் கவிஞர் சுகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.[27]
- டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் 'சமயம்’ இணையதளத்தில், தமிழின் சிறந்த ஆறு மொழிபெயர்ப்பாளர்களில் ஜி.குப்புசாமி அவர்களையும் குறிப்பிட்டுள்ளது.[28]
சர்வதேச அங்கீகாரங்கள்
[தொகு]
அயர்லாந்து எழுத்தாளர் ‘ஜான் பான்வில்’ அவர்களின் 'கடல்’ நாவலின் மொழிபெயர்ப்பு பணிக்காக, அந்நாட்டின் இலக்கிய வளர்ச்சித்துறையினால் (Ireland Literature Exchange) 2009-ம் ஆண்டு டப்ளின் நகரில் ஒரு மாத காலத்திற்கு (ஏப்ரல் 28 - மே 28) சிறப்பு விருந்தினராக ஜி.குப்புசாமி அழைக்கப்பட்டார்.
பெல்ஜிய அரசின் கீழ் (AISBL) ஐரோப்பிய நாடுகளின் மொழிபெயர்ப்பாளர்களுக்காக இயங்கிவரும் CEATL (European Council of Literary Translators' Associations) அமைப்பிலிருந்து வெளியாகும் Counter Point எனும் மின்னிதழின் பொறுப்பாசிரியரும், மொழிபெயர்ப்பாளரும், அயர்லாந்து நாட்டின் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ATII (Association of Translators and Interpreters Ireland) எனும் அமைப்பின் செயற்குழு உறுப்பினருமான 'அன்னா லார்செட்’ (Anne Larchet) 2019 ஆம் ஆண்டு Counter Point இதழில் மொழிபெயர்ப்பு குறித்த தனது கட்டுரையில் ’கடல்’ நாவலை சிறப்பாக மொழிபெயர்த்த ஜி.குப்புசாமி அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.[29]
ஸ்காட்லாந்து எழுத்தாளர் 'டக்ளஸ் ஸ்டூவர்ட்’ அவர்களின் புக்கர் பரிசு பெற்ற 'ஷகி பெய்ன்' நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு பணிகளுக்காக, அந்நாட்டின் கிளாஸ்கோ நகரில் உள்ள 'கோவ் பார்க்’ எனும் சர்வதேச எழுத்தாளர் உறைவிட முகாமிற்கு 2023-ம் ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களுக்கு விருந்தினராக அழைக்கப்பட்டார்.[30][31]
விருதுகள்
[தொகு]- 2009 - Literature Ireland Bursary
- 2012 - ஜி. யூ. போப் மொழிபெயர்ப்பு விருது (SRM பல்கலைக்கழகம் தமிழ்ப்பேராயம்)[32]
- 2012 - டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் விருது (கனடா)[33]
- 2018 - தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது
நேர்காணல்கள்
[தொகு]- தி ஹிந்து (ஆங்கிலம்)[34]
- இந்து தமிழ் திசை[35][36]
- ஆனந்த விகடன்[3]
- காலச்சுவடு[37][38]
- சாகித்ய அகாடமி[39]
- கனலி[40][41]
- தூர்தர்ஷன் தமிழ்[6]
- அனைத்திந்திய வானொலி[42][43]
- வாசகசாலை[44]
- மதிமுகம்[45]
- கிழக்கு பதிப்பகம் (கருத்தரங்கம்)[46]
மொழியாக்க நாவல்கள்
[தொகு]- சின்ன விஷயங்களின் கடவுள் (2012)
- பெருமகிழ்வின் பேரவை (2021)[47]
- என் பெயர் சிவப்பு (2009)
- பனி (2013)
- இஸ்தான்புல் (2014)
- வெண்ணிறக் கோட்டை (2015)
மற்ற நாவல்கள்
[தொகு]- கடல் - ஜான் பான்வில் (2014)
- உடைந்த குடை - தாக் ஸூல்ஸ்தாத் (2017)
மொழியாக்க சிறுகதைத் தொகுப்புகள்
[தொகு]- நூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் காலையில் பார்த்தபோது (2014)
- பூனைகள் நகரம் (2016)
மற்ற தொகுப்புகள்
[தொகு]- நாளை வெகுதூரம் (2007)
- வணக்கத்துக்குரிய எலும்புத் துண்டுகள் - பெர் லாகர்குவிஸ்ட் (2016)
- அந்திராகம் - இஷிகுரோ, குந்தர் கிராஸ் & காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (2021)
- இருட்டியபின் ஒரு கிராமம் (2022)
மொழியாக்க கட்டுரைத் தொகுப்புகள்
[தொகு]- ஆஸாதி (அருந்ததி ராய், 2022)[48]
- அயல் மகரந்தச் சேர்க்கை (நேர்காணல்கள் & சிறுகதைகள், 2016)
- கனவுகளுடன் பகடையாடுபவர் (நேர்காணல்கள், சிறுகதைகள் & கட்டுரைகள், 2011)
பயணக்குறிப்பு நூல்
[தொகு]- சே குவேரா என்ற புரட்சிக்காரன் உருவான கதை - அல்பெர்தோ கிரனாடோ (2016)[49]
நேரடி கட்டுரைத் தொகுப்புகள்
[தொகு]- மூன்றாவது கண் (2022)
- காலத்தை இசைத்த கலைஞன்: இளையராஜா 80 (2022)
- கண்ணாடிச் சொற்கள் (2023)
அடிக்குறிப்புகள்
[தொகு]- காலச்சுவடு இணையதளம் - மொழிபெயர்ப்பாளர்கள் பட்டியல் - ஜி.குப்புசாமி
- Purple Pencil Project (Website) - The White Castle by Orhan Pamuk (Tr. to Tamil by G. Kuppuswamy, Oct 2022)
- புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள் ஓர் உதாரணச் செம்பதிப்பு (காலச்சுவடு இதழ் - ஆக 2007)
- க. நா. சுவின் மொழிபெயர்ப்புகள் (அழியாச் சுடர்கள் - 2012)
- என் பெயர் சிவப்பு - விமர்சனம் (வலைப்பூ, 04.02.2021)
- புதுமைப்பித்தன் நினைவு விருது (ஷ்ருதி டீவி காணொளி - 2015)
- அழகுகளில் உறைந்தவர் (காலச்சுவடு இதழ் - மே 2019)
- கண்ணாடிச் சொற்கள் (காலச்சுவடு இதழ் - ஜன 2019)
- க்ளைமேட் மாத இதழ் அறிமுகம் (இந்து தமிழ் திசை - ஜுன் 2019)
- காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும் (காலச்சுவடு இதழ் - ஜனவரி 2021)
- குறுகத் தரித்தவரா கார்வர்? (அருஞ்சொல் இணையதளம் - 30.09.21)
- பூனைகள் நகரம் - நூல் விமர்சனம் (மின்குரல் இணையதளம் - அக் 2021)
- எப்படி இருக்கப்போகிறது எதிர்காலம்? (காலச்சுவடு இதழ் - ஜன 2022)
- ஜி.குப்புசாமி – வாசகர்களுக்கு தெரிவிக்க விரும்பும் சில நூல்கள் (விமர்சனம் - இணையதளம், 24.02.2022)
- காலத்தை இசைத்த கலைஞன்- நூல் விமர்சனம் (சரவணன் மாணிக்கம் - செப் 2022)
- நூல் அறிமுகம்: ‘மரண வீட்டின் நினைவுக் குறிப்புகள்’ (Book Day - பாரதி புத்தகாலயம் - 17.03.23)
- லண்டன் மனிதர்கள் (காலச்சுவடு இதழ் - நவ. 2023)
- பயணத்தின் சுவடுகள் (காலச்சுவடு இதழ் - செப். 2024)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஜி.குப்புசாமி | Hindutamil.in". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "காலச்சுவடு | January 2025". kalachuvadu.com. Retrieved 2025-01-02.
- ↑ 3.0 3.1 "என் ஊர்: குற்றங்கள் இல்லாத குறையில்லா பூமி! (ஆனந்த விகடன்)". விகடன்.காம். 2012.
- ↑ "Puthu Ezhuthu | G.Kuppusamy | Wolff | Short story". web.archive.org. 2010-01-11. Retrieved 2025-01-02.
- ↑ "ஜி.குப்புசாமி - கனலி". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ 6.0 6.1 DD Tamil (2023-07-15), ஜி.குப்புசாமி - மொழிபெயர்ப்பாளர் | Nam Virundhinar, retrieved 2025-01-02
- ↑ "இமையாள் கவிதைகள் » Nutpam". web.archive.org. 2025-01-02. Retrieved 2025-01-02.
- ↑ "காலச்சுவடு | காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-20.
- ↑ ஜி.குப்புசாமி (2002). இந்தியாவில் ஜனநாயகம் என்னவாக இருக்கிறது - அருந்ததி ராய் - தமிழில்: ஜி. குப்புசாமி. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
- ↑ "அயல் மகரந்தச்சேர்க்கை - நூல் விற்பனை நிலையம்". அயல் மகரந்தச் சேர்க்கை - ஆசிரியர்: ஜி. குப்புசாமி.
- ↑ "கரோனா காலத்தில் என்னென்ன வாசிக்கலாம்?". Hindu Tamil Thisai. 2020-04-12. Retrieved 2025-01-20.
- ↑ "இலவச மொழிபெயர்ப்பு பயிற்சி முகாம்; விண்ணப்பிக்க கமல்ஹாசன் அழைப்பு". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ Chandramohan (2015-07-11). "சந்தனார்: நான் நாவல் எழுத மாட்டேன்: மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி நேர்காணல்". சந்தனார். Retrieved 2025-01-02.
- ↑ "இரண்டாவது இதயமாகத் துடிக்கும் கடந்தகாலம் | சாபக்காடு". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "சின்ன விஷயங்களின் கடவுள்- அருந்ததி ராய்- தமிழில் ஜி. குப்புசாமி: – Saravanan Manickavasagam". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ முருகன், விநாயக (2010-08-26). "NBlog - என் வலை: என் பெயர் சிவப்பு". NBlog - என் வலை. Retrieved 2025-01-02.
- ↑ "என் பெயர் சிவப்பு - விமர்சனம்". என் பெயர் சிவப்பு - விமர்சனம். Retrieved 2025-01-02.
- ↑ "ஓரான் பாமுக்கின் "பனி" விமர்சனம். » Vimarsanam Web". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ மீனாட்சி (2019-04-22). "இயற்கையின் மொழி: (77) இஸ்தான்புல் - ஓரான் பாமுக்". இயற்கையின் மொழி. Retrieved 2025-01-02.
- ↑ "வெண்ணிறக் கோட்டை". சாது (in ஆங்கிலம்). 2016-03-04. Retrieved 2025-01-02.
- ↑ "ஓரான் பாமுக் படைப்புகள் – ஓர் அறிமுகம் | சாபக்காடு". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை – திண்ணை". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ "முராகாமியின் 'விநோத நூலகம்' – Charu Nivedita". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "பிடித்த பத்து: சென்னைக்கு ஆயிரம் கதவுகள்". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "புத்தகப் பரிந்துரை – எஸ். ராமகிருஷ்ணன்". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "மேற்கின் புகைப்படம் | எழுத்தாளர் ஜெயமோகன்". web.archive.org. 2024-03-01. Retrieved 2025-01-02.
- ↑ ஜி.குப்புசாமி (2012). சின்ன விஷயங்களின் கடவுள் நூல் குறித்து கவிஞர் சுகுமாரன் - காலச்சுவடு செப் 2012.
- ↑ "அயல் இலக்கியமும் ஆறு மொழிபெயர்ப்பாளர்களும்". Samayam Tamil. Retrieved 2025-01-02.
- ↑ Counterpoint Magazine (2019). G.Kuppuswamy in Counterpoint Magazine (2019 Vol. 2).
- ↑ "Awarded Residency – Cove Park". web.archive.org. 2024-12-26. Retrieved 2025-01-02.
- ↑ "Why Give? – Cove Park". web.archive.org. 2024-12-26. Retrieved 2025-01-02.
- ↑ "The Tamizh Academy Awards, instituted by SRM University - SRM Institute of Science and Technology". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ "இயல் விருது விழா 2011, தமிழ் இலக்கியத் தோட்டம் (விருது பெறும் எழுத்தாளர் விபரங்கள்)" (PDF). இயல் விருது விழா 2011, தமிழ் இலக்கியத் தோட்டம். 2012.
- ↑ "Translation is a challenge, as more works are made into Tamil with a boom in publishing - The Hindu". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ "நான் நாவல் எழுத மாட்டேன்: மொழிபெயர்ப்பாளர் ஜி. குப்புசாமி நேர்காணல் - hindutamil.in". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "வாசிப்பில்தான் புத்தகத்தின் வெற்றி முழுமையடைகிறது!- மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி பேட்டி - hindutamil.in". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "நேர்காணல்: கண்ணாடியைப் பார்ப்போம் | காலச்சுவடு |". web.archive.org. 2013-11-07. Retrieved 2025-01-02.
- ↑ ஜி.குப்புசாமி (2022). மூலமும் மொழிபெயர்ப்பும், ஜி.குப்புசாமி & சா.தேவதாஸ் - காலச்சுவடு ஏப் 2022.
- ↑ Sahitya Akademi (2020-06-13), Panel Discussion on Tamil Translation Scenario on 13 June 2020, retrieved 2025-01-02
- ↑ "எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 1 - கனலி". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ "எழுத்தாளர்களை Hero worship செய்யாதீர்கள்…! – பகுதி 2 - கனலி". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ All India Radio Chennai (2023-08-21), "இலக்கியம் பேசுவோம்" - தனது மொழிபெயர்ப்புகள் குறித்து பேசுகிறார் மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி, retrieved 2025-01-02
- ↑ Akashvani Puducherry (2020-01-03), மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி புதுவை வானொலியில் பங்கேற்ற நேர்முகம், retrieved 2025-01-02
- ↑ "தொடுவானத்தைத் தீண்டத் துடிக்கும் ஆர்வம் - வாசகசாலை | இலக்கிய அமைப்பு | சென்னை, தமிழ்நாடு". web.archive.org. 2024-12-17. Retrieved 2025-01-02.
- ↑ Madhimugam TV (2021-11-20), நான் பார்த்து வியந்த சேகுவேரா...Writer G Kuppusamy Exclusive Interview | MadhimugamTV, retrieved 2025-01-02
- ↑ Badri Seshadri (2014-07-04), Kizhakku Translation Workshop: G. Kuppuswamy, 31st May 2014, retrieved 2025-01-02
- ↑ ""பெருமகிழ்வின் பேரவை" - நூலறிமுகம் - Book Day". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ "வதைக்கப்பட்ட நகரங்களின் மீது எந்த மொழியில் மழை பொழிகிறது? | அருஞ்சொல்". web.archive.org. 2024-12-19. Retrieved 2025-01-02.
- ↑ "மணி செந்தில்..: சேகுவேரா-என்ற கனவு மானுடன் -பாகம் 2". மணி செந்தில்.. Retrieved 2025-01-02.