ஜி. காளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. காளன் (G. Kalan) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார்.

இவர் துவக்கத்தில் ஐ.டி. மிதிவண்டி தொழிற்சாலையில் தொழிலாளியாக பணியாற்றம் துவங்கினார். அங்கு தொழிற்சங்க அமைப்பைத் துவக்கியவர். அதன்பிறகு இந்திய தேசிய இஞ்சியனியரிங் பணியாளர் சங்கத்தைத் துவக்கினார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (ஐ.என்.டி,யு.சி) தமிழ்நாடு மாநிலத் தலைவராக 16 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தவர். மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் உள்ள ஐ.எட.டி.யு.சி சம்மேளனத தலைவராக இருந்தார்.[1] 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுகபட்டார். உடல் நலக்குறைவு காரணமாக 2020 சூன் 10 அன்று இறந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._காளன்&oldid=2985193" இலிருந்து மீள்விக்கப்பட்டது