ஜி. எஸ். சரத்சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. எஸ். சரத்சந்திரா (G.S. Sharat Chandra, 1935-2000) என்பவர் இந்தியாவில் பிறந்த ஆங்கிலக் கவிஞர், புதின ஆசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார். அவருடைய எழுத்தாக்கங்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் விவரிப்பனவாக அமைந்துள்ளன.

தொடக்கத்தில் இந்தியாவில் சட்டப் படிப்பு படித்துப் பின்னர் 1960 இல் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு அயோவா எழுத்தாளர்கள் பணிமனையில் கவின் கலை முதுவர் என்னும் படிப்பை முடித்தார். பின்னர் மிசவுரி கான்சாஸ் சிட்டி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி (1983-2000) ஆற்றினார். அவர் எழுதிய கவிதைத் தொகுதி பேமிலி ஆப் மிர்ரர்ஸ் புலிட்சர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

சரத் சந்திரா 10 நூல்கள் எழுதியுள்ளார். சமற்கிருதம் மற்றும் ஆங்கில நூல்களை கன்னடத்தில் மொழி பெயர்த்துள்ளார். புத்தாக்க எழுத்துப் படைப்புகளுக்காகப் பெல்லோசிப் பெற்றார். லைப்ரரி ஆப் காங்கிரஸ், ஆக்சுபோர்டு மற்றும் டப்ளின் ஆகிய இடங்களில் கவிதைகள் வாசித்தார். இவருடைய படைப்புகள் அமெரிக்கன் பொயட்ரி ரிவ்யூ, லண்டன் மேகசீன், தி நேசன் பார்டிசன் ரிவ்யூ போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. உலகத்தில் பல நாடுகளுக்குச் சென்ற அனுபவம் இவருக்கு உண்டு.

எழுதிய முக்கிய நூல்கள்[தொகு]

  • April in Nanjangud, Alan Ross Ltd., London Magazine Editions, 1971;
  • Once or Twice, Hippopotamus Press, UK, 1974;
  • The Ghost of Meaning, Lewis-Clark State College, Confluence Press, Idaho, 1976;
  • Heirloom, Oxford University Press, 1982;
  • Family of Mirrors, BkMk Press, 1993;
  • Immigrants of Loss, Hippopotamus Press, 1993–94,
  • Sari of the Gods, 1998.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._எஸ்._சரத்சந்திரா&oldid=3624016" இருந்து மீள்விக்கப்பட்டது