ஜி. எம். குமார்
ஜி. எம். குமார் | |
---|---|
பிறப்பு | கோவிந்தராஜ் மனோகரன் குமார்[1] 26 சூலை 1957[2] தமிழ்நாடு, சென்னை |
பணி | நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1986–தற்போது வரை |
ஜி. எம். குமார் (G. M. Kumar) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார்.[3][4]
தொழில்
[தொகு]குமார் சிவாஜி புரொடக்சன்சின் தயாரிப்பில், பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அறுவடை நாள் (1986) படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இது குமார் பல படங்களை உருவாக்க வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது. இருப்பினும் இளையராஜாவை இசையமைப்பாளராக நியமிக்க விரும்பாத தயாரிப்பாளர்களின் படங்கள் பலவற்றை நிராகரித்ததாக குறிப்பிட்டார். இதனால் இவரது வணிக மதிப்பு கணிசமாகக் குறைந்து. இவரது ஆரம்ப வெற்றிக்குப் பிறகு மூன்று திரைப்படங்களை மட்டுமே இயக்கினார். உருவம் படத்தை இயக்கி, தயாரிக்க எடுத்த முடிவானது இவரை திவால் நிலைக்கு தள்ளியது. பாரதிராஜாவின் கேப்டன் மகள் (1992) படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் ஆவணப்படங்களை உருவாக்குவதற்கும் மானுடவியல் குறித்து அறிவதற்குமான பணிகளில் ஈடுபட்டார். 2000 களின் முற்பகுதியில், இவர் மீண்டும் திவாலாகும் நிலையின் விளிம்பில் இருந்தார். மேலும் ராமச்சந்திரா, வெளியிடப்படாத சிவலிங்கம் ஐ. பி. எஸ் உள்ளிட்ட படங்களில், சிறு வேடங்களில் நடிக்க ராஜ்கபூர் இவரை தேர்வு செய்தார். பின்னர் ஷங்கரின் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கபட்ட வெயில் (2006) படத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.[5]
மேலும் இவரை அவன் இவானில் ஹைனெஸ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா அணுகினார். அப்படத்தில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதுக்கான பரிந்துரையைப் பெற்றுத்தந்தது. விமர்சகர்கள் இவரது நடிப்பை "ரிவெர்டிங்" என்று அழைத்தனர். இருப்பினும் படம் சராசரி விமர்சனங்களை மட்டுமே பெற்றது.[6]
திரைப்படவியல்
[தொகு]நடிகராக
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1993 | கேப்டன் மகள் | ||
2002 | காதல் வைரஸ் | அவராகவே | |
2003 | ராமச்சந்திரா | குமார் | |
2005 | தொட்டி ஜெயா | ||
2006 | வெயில் | மாயண்டி தேவர் | |
2007 | மச்சக்காரன் | ராஜங்கம் | |
மலைக்கோட்டை | |||
2008 | ஆயுதம் செய்வோம் | அண்ணாச்சி | |
குருவி | பாய் | ||
2009 | மாயாண்டி குடும்பத்தார் | விருமண்டி | |
தீ | ஜே.பி. | ||
2010 | மாத்தி யோசி | ||
மிளகா | |||
2011 | அவர்களும் இவர்களும் | சின்னசாமி | |
அவன் இவன் | ஜமீன்தார் தீர்த்தபதி (ஹைனஸ்) | பரிந்துரை, சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருது | |
வேலூர் மாவட்டம் | |||
2013 | சந்தமாமா | ||
2014 | ஜகஜால பூஜபல தெனாலிராமன் | ||
அப்புச்சி கிராமம் | |||
2015 | சண்டமாருதம் | ||
அகத்திணை | அய்யனாரின் தந்தை | ||
யட்சன் | |||
2016 | தாரை தப்பட்டை | சாமிபுலவன் | |
என்னமா கதவுடுறானுங்க | |||
2017 | சரவணன் இருக்க பயமேன் | ||
திறப்பு விழா | |||
எண்பத்தெட்டு | |||
வேலையில்லா பட்டதாரி 2 | செட்டியார் | தமிழ், தெலுங்கு இருமொழி படம் | |
கிடா விருந்து | |||
2018 | ஜருகண்டி | ||
2019 | நான் அவளை சந்தித போது | ||
2021 | சிதம்பரம் ரயில்வேகேட் | ||
கர்ணன் | துரியோதனன் |
இயக்குநராக
[தொகு]ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1986 | அறுவடை நாள் | |
1989 | பிக்பாக்கெட் | |
1991 | இரும்பு பூக்கள் | |
உருவம் |
எழுத்தாளராக
[தொகு]ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1985 | கன்னிராசி | |
1985 | காக்கிசட்டை | |
1990 | மை டியர் மார்த்தாண்டன் |
தொலைக்காட்சி
[தொகு]- தேவதையை கண்டேன் வாசுதேவனின் தாத்தாவாக (2017)
- பூவே உனக்காக சங்கரலிங்கமாக (2020)
வலைத் தொடர்
[தொகு]ஆண்டு | தலைப்பு | பங்கு (கள்) | மொழி | குறிப்புகள் | குறிப்பு. |
---|---|---|---|---|---|
2021 | நவம்பர் ஸ்டோரி | அறிவிக்கப்படும் | தமிழ் | தயாரிப்பிற்குப்பிந்தைய நிலை வலைத் தொடரில் அறிமுக |
[7][8] |
குறிப்புகள்
[தொகு]
- ↑ https://www.imdb.com/name/nm1493315/bio?ref_=nm_ov_bth_nm
- ↑ https://www.facebook.com/profile.php?id=100000934807426&sk=about
- ↑ "Archived copy". Archived from the original on 17 October 2014. பார்க்கப்பட்ட நாள் 11 October 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ http://www.thehindu.com/features/cinema/gm-kumar-teams-up-with-bala/article8077314.ece?secpage=true&secname=entertainment
- ↑ "Events - GM Kumar - Director Bala's Pick". Indiaglitz.com. 2011-04-26. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ "Movie Review : Review: Avan Ivan depends on male leads". Sify.com. Archived from the original on 2014-10-28. பார்க்கப்பட்ட நாள் 2013-09-05.
- ↑ Bhatia, Tamannaah (30 November 2019). "Wrapped up the first schedule of The November's Story, my maiden Tamil web series, eagerly looking forward to the next schedule curated by a young passionate talented lot 💃💃💃 Produced by @anandavikatan for @hotstar Directed by @ram_1825 #Ramsubramanian Director of photography @vidhu.ig #vidhuayyanna Hair @tinamukharjee Makeup @nikki_rajani Costume @nishkalulla". Instagram. பார்க்கப்பட்ட நாள் 30 November 2019.
- ↑ "November Story Teaser". YouTube. 22 October 2020. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜிஎம் குமார் Facebook இல்
- ஜிஎம் குமார் டுவிட்டர்