உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. என். சாய்பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜி. என். சாய்பாபா
Saibaba in 2017
Saibaba in 2017
பிறப்புகோகரகொண்டா நாக சாய்பாபா
1967 (1967)
அமலாபுரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு12 அக்டோபர் 2024(2024-10-12) (அகவை Expression error: Unrecognized punctuation character "–".–56–57)
ஐதராபாத்து, தெலங்காணா, இந்தியா
அடக்கத்தலம்மனித உரிமை ஆர்வலர், கல்வியாளர், எழுத்தாளர்
தொழில்ஆசிரியர்
மொழிதெலுங்கு, ஆங்கிலம், இந்தி
தேசியம்இந்தியா
கல்வி
கல்வி நிலையம்
காலம்இருபத்தியோராம் நூற்றாண்டு
வகைகள்ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்
இலக்கிய இயக்கம்மனித உரிமைகள்
செயற்பட்ட ஆண்டுகள்2003–2024
குறிப்பிடத்தக்க படைப்புகள்சாய்பாபா, ஜி. என். (2008). "Colonialist Nationalism in the Critical Practice of Indian Writing in English: A Critique". எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி 43 (23): 61–68. https://search.worldcat.org/en/title/9972284996. 
துணைவர்திருமதி வசந்த குமாரி[1][2]

கோகரகொண்டா நாக சாய்பாபா (Gokarakonda Naga Saibaba, 1967 - 12 அக்டோபர் 2024) என்பவர் ஆந்திரப் பிரதேசத்தின் அமலாபுரத்தைச் சேர்ந்த ஒரு அறிஞர், எழுத்தாளர், மனித உரிமை செயற்பாட்டாளர் ஆவார். [3]

மாவோயிச அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சாயிபாபா மீது இந்திய அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் 2017 ஆம் ஆண்டு அமர்வு நீதிமன்றத்தால் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் 14 அக்டோபர் 2022 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இவர் மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். [4]

தீர்ப்புக்குப் பிறகு, இந்திய உச்ச நீதிமன்றம் அந்த உத்தரவை நிறுத்தி வைத்து, வழக்கை மறு ஆய்வு செய்ய உயர் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது. 5 மார்ச் 2024 அன்று, சாய்பாபா (இவருடன் சேர்த்து விசாரிக்கப்பட்ட மற்ற ஐந்து பேர் ) மீண்டும் உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். பல்வேறு முட்டாள்தனமான ஆதாரங்கள் போன்ற காரணங்களால் அரசுத் தரப்பு வழக்கு செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை "நீதியின் தோல்வி" என்று கூறியது. [5] இரண்டாவது விடுதலையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கு தொடர்ந்தது. பித்தப்பைக்கல் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து, 12 அக்டோபர் 2024 அன்று இவர் இறந்தார். [6]

துவக்க வாழ்க்கையும், கல்வியும்

[தொகு]

சாய்பாபா 1967 ஆம் ஆண்டு [7] இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு கோதாவரியில் உள்ள அமலாபுரத்தில் ஒரு ஏழை வேளாண் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [8] இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கபட்ட இவர் ஐந்து வயதிலிருந்தே சக்கர நாற்காலியைப் பயன்படுத்திவந்தார்.

இலக்கியப் பங்களிப்புகள்

[தொகு]

சாய்பாபா குரஜாதா அப்பாராவ், சிறீ சிறீ, கென்யாவின் நுகுகி வா தியங்கோ ஆகியோரிடமிருந்து இலக்கிய உத்வேகம் பெற்றார். [8] தெலுங்கில் சாய்பாபாவின் ஆரம்பகால படைப்புகள் ஸ்ரீஜனா என்ற இதழில் வெளியாயின. இந்த துவக்கக் காலக் கட்டுரைகள் இந்திய இலக்கியத்தில் தலித், ஆதிவாசிகள் ஆகியோரின் பங்கேற்புக்கு எதிராகச் செயல்பட்ட ஆதிக்க அறிவு வடிவங்கள் குறித்து கவனம் செலுத்தியது. [9]

ஆய்வறிக்கை

[தொகு]
  • சாய்பாபா, ஜி. என். (2011). "6". Indian Writing in English and Nation Making: Reading the Discipline (Ph.D. thesis). Delhi University. Retrieved 13 October 2024.

நூல்கள்

[தொகு]

கட்டுரைகள்

[தொகு]

தொழில்

[தொகு]

சாய்பாபா டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் பல ஆண்டுகள் ஆங்கில ஆசிரியராக இருந்தார். [8] [10] மாவோயிஸ்டுகளுடனான தொடர்புகள் காரணமாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 2021 பிப்ரவரியில் டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம் லால் ஆனந்த் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். [11]

நோயும் இறப்பும்

[தொகு]

சாய்பாபா சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு உள்ளானார். 90% உடல் ஊனமுற்றவராக இருந்தார். [8]

ஐதராபாத்தில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சாய்பாபா அக்டோபர் 12, 2024 அன்று இறந்தார். இவருக்கு வயது 57, பித்தப்பைக் கற்களுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில். அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட சிக்கல்களைத் தொடர்ந்து பத்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு வசந்தகுமாரி என்ற மனைவியும், மஞ்சீரா என்ற மகளும் உள்ளனர். [12] [13] [14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Five years on, no relief for jailed Delhi University professor Saibaba". The Hindu (in ஆங்கிலம்). 9 May 2019. Retrieved 19 December 2020.
  2. "Court relied on deposition of semi-literate witness: Saibaba's wife". The Hindu (in ஆங்கிலம்). 4 April 2017. Retrieved 19 December 2020.
  3. Shrivastava, Amisha (5 March 2024). "Bombay High Court Acquits GN Saibaba & 5 Others In Alleged Maoist Links Case, Orders Immediate Release". www.livelaw.in (in ஆங்கிலம்). Retrieved 5 March 2024.
  4. Saigal, Sonam (14 October 2022). "Bombay High Court acquits ex-DU professor G.N. Saibaba in Maoist links case". The Hindu. https://www.thehindu.com/news/cities/mumbai/bombay-high-court-acquits-ex-du-professor-gn-saibaba-in-maoist-links-case/article66008814.ece. 
  5. "Saibaba Acquittal: From Lack of Sanction to Dodgy Evidence, High Court Judgment Tears Into State's Case". The Wire. Retrieved 6 March 2024.
  6. "Former Delhi University professor G N Saibaba passes away". The Indian Express (in ஆங்கிலம்). 12 October 2024. Retrieved 12 October 2024.
  7. "Explained: Who Is GN Saibaba, What's The Maoist-Links Case He Is In Jail For?". Outlook India (in ஆங்கிலம்). 15 October 2022. Retrieved 5 March 2024.
  8. 8.0 8.1 8.2 8.3 "GN Saibaba: The revolutionary in Delhi University". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). 23 September 2013. Retrieved 19 December 2020.
  9. "Dr. G N Saibaba". India Political Prisoners (in ஆங்கிலம்). 7 March 2017. Retrieved 19 December 2020.
  10. "Delhi University professor Saibaba, arrested for Maoist links, gets bail". India Today (in ஆங்கிலம்). 4 April 2016. Retrieved 19 December 2020.
  11. Scroll Staff (2 April 2021). "GN Saibaba removed as assistant professor from Delhi University's Ram Lal Anand College". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 11 May 2021.
  12. The Hindu (12 October 2024). "Prof. G.N. Saibaba passes away in Hyderabad" (in en-IN). https://www.thehindu.com/news/national/prof-gn-saibaba-passes-away-in-hyderabad/article68746895.ece. 
  13. The Wire (12 October 2024). "G.N. Saibaba Passes Away" (in en). https://thewire.in/news/g-n-saibaba-passes-away. 
  14. The News Minute (12 October 2024). "Seven months after his acquittal in UAPA case, human rights activist Dr GN Saibaba dies" (in en). https://www.thenewsminute.com/telangana/seven-months-after-his-acquittal-in-uapa-case-human-rights-activist-dr-gn-saibaba-dies. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._என்._சாய்பாபா&oldid=4202753" இலிருந்து மீள்விக்கப்பட்டது