ஜி. இராகவ ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி. இராகவ ரெட்டி (G. Raghava Reddy) (பிறப்பு 1928) ஓய்வுபெற்ற இந்தியக் காவல் பணி அதிகாரி, இவர் புதுமையான விவசாயத்திற்கும் பெயர் பெற்றவர். பொதுவுடைமை இயக்கத் தலைவர் டி.நாகி ரெட்டிக்கு எதிரான பிரபலமான வழக்கின் முக்கிய புலனாய்வாளராக இருந்தார். காவல் அதிகாரியாக தனது நீண்ட வாழ்க்கையில், துப்பறியும் படையினரின் தலைவர் போன்ற பல துறைகளில் பணியாற்றினார். [1]

டி.நாகி ரெட்டி வழக்கு[தொகு]

டி. நாகி ரெட்டி ஒரு பிரபலமான பொதுவுடைமை இயக்கத் தலைவராக இருந்தார். அவர் அரசுக்கு எதிராக ஒரு கிளர்ச்சியில் ஈடுபட்ட குற்றவாளியாக் இருந்தார். [2] தனது இருபத்தி இரண்டு சகாக்களுடன் பிடிபட்டார். 325 க்கும் மேற்பட்ட சாட்சிகளை உள்ளடக்கிய இந்த வழக்கின் முக்கிய விசாரணையாளராக இராகவன் இருந்தார். நாகி ரெட்டி மற்றும் பிற குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள் என உறுதியானது. நாகி ரெட்டி பிணை ஆணையில் வெளிவந்த பின்னர் இயற்கை மரணம் அடைந்தார். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்ட இருபத்தி இரண்டு பேரும் சிறைத்தண்டனை அனுபவித்தனர். [3]

விருதுகள்[தொகு]

இவரது சிறப்பான சேவைக்காக, 1982 ஆம் ஆண்டில் சிறப்பான சேவைக்காக குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கமும், 1972 இல் சிறந்த சேவைக்காக இந்திய காவலர் பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது. [4] முப்பது வருட சேவையின் பின்னர், 1986 ஆம் ஆண்டில் காவல்துறை துணை ஆய்வாளாராக பதவி யுஅர்வு பெற்று ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்கு பின்[தொகு]

இவர் நாடு முழுவதும் பல காவல் கல்விக்கூடங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறார். ஆஸ் ஐ லுக் பேக் என்ற இவரது நினைவுக் குறிப்புகள், காவல் ஆராய்ச்சி அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டுள்ளன. [5]

இவர், ஒரு வெற்றிகரமான விவசாயியாகவும் அறியப்ப்படுகிறார். [6] தரிசு நிலத்தை பசுமையான பண்ணையாக மாற்றுவது போன்ற பல்வேறு விவசாய முறைகளில் இவருக்கு ஆழ்ந்த ஆர்வம் உண்டு. [7] இந்த பண்ணை பல செய்தித்தாள்களில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. [8]

குறிப்புகள்[தொகு]

  1. Raghava, G. (2005), Raghava Reddy Gongidi, archived from the original on 2008-12-03, பார்க்கப்பட்ட நாள் 2009-06-29
  2. Raghava, G. (2005), As an officer, archived from the original on 2008-06-22, பார்க்கப்பட்ட நாள் 2009-06-29
  3. Pradesh, Andhra (2007-03-18), "Success in the face of adversity", தி இந்து, Chennai, India, archived from the original on 2012-11-04, பார்க்கப்பட்ட நாள் 2009-06-30
  4. Raghava, G. (2005), As an officer, archived from the original on 2008-06-22, பார்க்கப்பட்ட நாள் 2009-06-29Raghava, G. (2005), As an officer, archived from the original on 22 June 2008, retrieved 29 June 2009
  5. "The Hindu images". Archived from the original on 2011-07-26. பார்க்கப்பட்ட நாள் 2009-08-13.
  6. "Waking up to herbal wealth" இம் மூலத்தில் இருந்து 2003-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030901010347/http://www.hindu.com/thehindu/mp/2003/03/24/stories/2003032400720100.htm. 
  7. Maheshwari, R. Uma (2003-03-24), "Waking up to herbal wealth", தி இந்து, archived from the original on 15 February 2011, பார்க்கப்பட்ட நாள் 2009-06-29
  8. The Hindu Business Line : Herbal market poised for healthy growth
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._இராகவ_ரெட்டி&oldid=3315209" இலிருந்து மீள்விக்கப்பட்டது