ஜி.டி 61

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜி.டி 61 (GD 61) என்பது பெர்சியஸ் விண்மீன் குழாமில் காணப்படும் ஒரு வெண் குறு விண்மீன் ஆகும். இது பூமியில் இருந்து சுமார் 150 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. இது ஒரு கோள் அமைப்பிற்கு உதவுகிறது. அந்தக் கோள் அமைப்பில், அறிவியலாளர்கள் 2013ம் ஆண்டு நீரைக் கொண்ட ஒரு சிறுகோளைக் கண்டறிந்துள்ளனர். இது பற்றிய ஆய்வினை அக்டோபர் 11, 2013 அன்று சயன்சு ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.[1]

வெளிசூரிய கோள்களில் இதுவே முதல் முறையாக திடமான அல்லது திரவ நீரினை அறிவியலாளர்கள் கண்டறிந்ததாகும். செரஸ் என்ற சிறுகோளைப் போன்றே அதன் நிறையில் 26% நீரினை கொண்டுள்ளது இந்து முதல் வெளிசூரிய கோள் கண்டுபிடிப்பு.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி.டி_61&oldid=2229438" இருந்து மீள்விக்கப்பட்டது