ஜி.சுந்தரராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கல்விப் புரவலர் ஜி.சுந்தரராஜன்[தொகு]

ஜி.சுந்தரராஜன் என்பவா் திண்டுக்கல்லில் ஒரு தொழில் அதிபா் ஆவாா்.இவா் ஜி.எஸ்.என்று அனைவராலும் அழைக்கப்படுகிறாா்.இவரின் வாழ்க்கை வரலாற்று காவியத்தை "காவிரி மைந்தன்" என்ற பெயரில் பேராசிரியர் முனைவர்.இரா.அழகர்சாமி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளாா்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

ஜி.எஸ். என்று அழைக்கப்படும் சுந்தரராஜன் கோபாலகிருஷ்ணநாயுடு, காவேரியம்மாள் தம்பதியருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.இவாின் தந்தையும் வியாபாரம் செய்துவந்தாா்.

கல்வி[தொகு]

சுந்தரராஜன் பள்ளிப்படிப்பை திண்டுக்கல் நகரவைப் பள்ளியிலும்,கல்லூரிப் படிப்பை உத்தமபாளையம் கருத்தராவுத்தர் கல்லூரியிலும் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரியிலும் முடித்தார்.வணிகவியல் இவரின் விருப்பப் பாடமாக இருந்தது.பலவித வணிக முறைகளயும், நுணுக்கங்களையும் புரிந்துகொள்ள நல்ல வாய்ப்பாக இருந்தது.

தொண்டுள்ளம்[தொகு]

பாரிவள்ளளோடு ஒப்பிட்டுக் கூறும் வகையில் தம்மை நாடி வந்தவர்களுக்கு வாரி வழங்கும் வள்ளல் பெருந்தகையாக விளங்குகின்றார். இவருக்கு தெய்வத்திருப்பணிகளிலும் கல்வித்துறையிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.திண்டுக்கல் பகுதியில் உருவான பள்ளிகள், கோவில்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றில் இவரின் பங்கு குறிப்பிடத்தகுந்ததாகும்.

இவா் வகிக்கும் பொறுப்புகள்[தொகு]

திண்டுக்கல் தமிழ்ச் சங்கம் - தலைவா் திண்டுக்கல் கம்பன் கழகம் - தலைவா் திண்டுக்கல் உலகத் திருக்குறள் பேரவை - தலைவா் இராணி மங்கம்காள் அறக்கட்டளை _ தலைவா் திண்டுக்கல் மாவட்டக் கால்பந்தாட்டக் கழகம் - தலைவா்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி.சுந்தரராஜன்&oldid=2341918" இருந்து மீள்விக்கப்பட்டது