ஜில்லா
| ஜில்லா | |
|---|---|
| இயக்கம் | இரா .தி. நேசன் |
| தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
| கதை | இரா.தி. நேசன் |
| இசை | டி. இமான் |
| நடிப்பு | மோகன்லால் விஜய் காஜல் அகர்வால் |
| ஒளிப்பதிவு | கணேஷ் ராஜவேலு |
| படத்தொகுப்பு | டான் மேக்ஸ் |
| கலையகம் | சூப்பர் குட் பிலிம்ஸ் |
| வெளியீடு | 10.01.2014 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
| ஆக்கச்செலவு | ₹50 கோடி[1] |
| மொத்த வருவாய் | ₹85 கோடி[2] |
ஜில்லா (Jilla) 2014-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜய், மோகன்லால், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்த இப்படத்திற்கு[3], டி. இமான் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார்.[4] இப்படம் 2014 சனவரி 10 அன்று தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.[5]
நடிகர், நடிகையர்
[தொகு]- விஜய் - சக்தி (சிவனின் வளர்ப்பு மகன்)
- மோகன்லால் - சிவன்
- காஜல் அகர்வால் - சாந்தி (சக்தியின் மனைவி)
- மஹத் ராகவேந்திரா - விக்னேஷ் (சிவனின் மகன்)
- நிவேதா தாமஸ் - மகாலட்சுமி (சிவனின் மகள்)
- சூரி - கோபால் (சக்தியின் நண்பன்)
- சம்பத் ராஜ் - ஆதி கேசவன் (சிவனின் மற்றொரு வளர்ப்பு மகன் , அமைச்சர்)
- பிரதீப் ரவட் - உயர் காவல்துறை அதிகாரி
- பூர்ணிமா பாக்யராஜ் - சிவனின் மனைவி
- தம்பி ராமையா
- வித்யுலேகா ராமன்
- ஜீவா (சிறப்புத் தோற்றம்)
- ஸ்கார்லெட் வில்சன் (சிறப்புத் தோற்றம்)
கதைச்சுருக்கம்
[தொகு]மோகன்லால் (சிவா) மதுரையின் பெரிய தாதா (குற்றச்செயல் புரிபவர்களின் தலைவர்) விஜய்யின் (சக்தி) அப்பா அவரிடம் வேலை செய்கிறார். மோகன்லாலின் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது மோகன்லால் குடும்பத்தை கொல்ல அவரின் எதிரிகள் முயலும் போது விஜய்யின் அப்பா காவல்துறை அதிகாரி ஒருவரால் கொல்லப்படுகிறார். மோகன்லால் விஜய்யை தன் குழந்தையாக வளர்க்கிறார். அதை பார்த்ததிலிருந்து விஜய்க்கு காவல்துறை என்றாலே வெறுப்பு. அவர் சாலையில் பார்த்த பெண்ணின் (காஜல் அகர்வால்) மீது காதல் கொள்கிறார். காஜல் அகர்வால் ஒரு காவல்துறை அதிகாரி. மோகன்லாலை காவல்துறை அதிகாரி ஒருவர் அசிங்கப்படுத்தி விடுவதால் அவர் விஜயை காவல்துறை அதிகாரி ஆக்குகிறார். விஜய் மோகன்லாலின் குற்றச்செயல்களுக்கு உதவுகிறார். ஓர் குற்றச்செயலின் போது குழந்தைகள் நிறைய பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் குற்றச்செயல்களுக்கு எதிராக திரும்புகிறார். மோகன்லாலை குற்றச்செயல்கள் புரியக்கூடாது என்கிறார். அதனால் இருவருக்கும் மோதல் வருகிறது. மோகன்லாலின் கடைகளை தீவைத்து அழித்து அதை விஜய்யின் மீது ஓர் கும்பல் பழி போடுகிறது. அவர்களால் மோகன்லாலின் சொந்த மகன் கொல்லப்படுகிறார். அதை விஜய்யின் மீது சுமத்துகிறார்கள். அதை மோகன்லால் நம்பினாரா, விஜய் மோகன்லாலுடன் இணைந்தாரா? எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விஜய் அழிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார். பின்னர் அவர் அந்த நேரத்தில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "First Day Box Office Collections of Vijay and Mohanlal 'Jilla' and Ajith's 'Veeram'". Deccan Chronicle. 15 January 2014. Archived from the original on 6 October 2014. Retrieved 25 January 2014.
- ↑ "Mohanlal says 'Thalapathy' Vijay personally contacted him to play role of his father in Jilla: 'It's fortunate that he…'". இந்தியன் எக்சுபிரசு. 22 May 2024.
- ↑ "Mohanlal-Vijay team up for Tamil film 'Jilla' to be directed by Nesan". IBN Live. Archived from the original on 15 March 2013. Retrieved 24 March 2013.
- ↑ "It's challenging to work with Mohanlal,Vijay, in 'Jilla', says Nesan". IBN Live. Archived from the original on 19 June 2013. Retrieved 24 March 2013.
- ↑ "Vijay-Kajal Aggarwal join Jilla photoshoot". OneIndia. Archived from the original on 2013-05-08. Retrieved 2013-05-10.
