ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜியோப்ரி உரொனால்டு பர்பிட்ஜ் (Geoffrey Ronald Burbidge) FRS (24 செப்டம்பர் 1925 – 26 ஜனவரி 2010)ஓர் ஆங்கிலேய வானியலாளரும் பேராசிரியரும் கோட்பாட்டு வானியற்பியலாளரும் ஆவார். அண்மையில் இவர் சான் டியேகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ளார். இவர் வானியற்பியலாளரான மார்கரெட் பர்பிட்ஜை மணந்துகொண்டார்.

இளமை வாழ்க்கை[தொகு]

பர்பிட்ஜ் ஆக்சுபோர்டுசயரில் உள்ல சிப்பிங் நார்ட்டனில் பிறந்தார். இது ஆக்சுபோர்டுக்கும் சுட்டிராபோர்டுக்கும் இடையில் அமைந்த கோட்சுவோல்ட்சுவின் சிறிய வணிக நகரம் ஆகும். இங்கு இவர் இலக்கனப்பள்லியில் பயின்றார். இவரது தந்தையாரான ஜியோபிரி உரொனால்டு பர்பிட்ஜ் ஒரு கட்டுமான நிறுவனராக இருந்துள்ளார்.[1]

கல்வி[தொகு]

இவர் முதலில் வரலாறு படிக்க பிரிசுடல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பின் இயற்பியலுக்கு மாறி 1946 இல் பட்டம் பெற்றார்.இவர் 1947 இல் இலண்டன் சென்று இலண்டன் பல்கலைக்கழக்க் கல்லூரியில் 1951 இல் முனைவர் பட்டம் பெற்றார். அப்போது இவர் கணிதவியல் துறையின் தலைவராக இருந்த பேராசிரியர் மாசேவுடன் பணிபுரிந்துள்ளார்.[2]

இக்காலத்தில் இவர் மார்கரெட் பீச்சியைச் சந்தித்து 1948 இல் அவரை மண்ந்துகொண்டார்.[3]

பணி[தொகு]

இருவரும் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் மார்கரெட் சேரும் வரை ஆர்வார்டு, சிகாகோ பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் பணிபுரிந்தார். ஜியோபிரி மவுண்ட் வில்சன் வான்காணகத்திலும் பலோமார் வான்காணகத்திலும் பணிபுரிந்தார்.

இவர்கள் இருவருமே சான் டியேகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1962 இல் பணியமர்த்தப்பட்டனர்.

இவர் 1978 முதல் 1984 வரை கிட் பீக் தேசிய வான்கானகத்தின் இயக்குநராக இருந்தார்.[3]

B2FH ஆய்வு[தொகு]

அமெரிக்க இயற்பியலாளரான வில்லியம் ஆல்பிஎர்டு பவுலௌடனும் பிரித்தானிய வானியலாளரான பிரெடு ஆயிலுடனும் இணைந்து இவரும் இவரது மனைவியும் விண்மீன்களில் தனிமங்களின் தொகுப்பு (Synthesis of the Elements in Stars) எனும் ஆய்வின் இணையாசிரியர்களாக விளங்கினர். இது 1957 இல் வெளியிடப்பட்ட உடுக்கணவெளி அணுக்கருத் தொகுப்புவினைக்கான அடிப்படை ஆய்வாகும். இது பொதுவாக B2FH ஆய்வு என இந்த நான்கு ஆசிரியர்களது தலைப்பெழுத்துகளால் வழங்கப்படுகிறது. இது விண்மீன்களில் விண்வெளியில் எடைகுறைந்த தனிமங்கள் எரிந்து உயரெடைத் தனிமங்கள் உருவாகி விண்வெளியில் வீசப்படுதலையும் அவை பின்னர் புடவியின் பிற கட்டமைப்புகளின் உருவாக்கத்தில் திரள்வதையும் விவரிக்கிறது. இக்கட்டமைப்புகளில் விண்மீன்கள், கோள்கள், நிலாக்கள் ஆகிய பிற வான்பொருள்களும் அடங்கும்.[3]

மாற்று அண்டவியல்[தொகு]

அண்மைக் காலத்தில் இவர் அவரது மாற்று அண்டக் கோட்பாட்டுக்காக அறியப்படுகிறார். இது "பகுதி நிலைத்த நிலைப்பு கோட்பாடு" என அழைக்கப்படுகிறது. இதன்படி பெருவெடிப்புக் கோட்பாட்டுக்கு மாறாக அண்டம் வரம்பிலாத கால அளவில்தொடர்ந்து சுருங்கி விரிகிறது .[4]

இவர் அலையும் அண்டவியல் கோட்பாட்டளர். இவர் கோட்பாட்டின்படி அண்டம் வரம்பிலாத் காலவெளியில் அலைவுறுகிறது. இக்கோட்பாடு அதன் முரண்பாட்டுத் தன்மையால் இவருக்குப் புகழும் பெருமையும் அளித்தது.

இறப்பு[தொகு]

இவர் 2010 ஜனவரி 26 இல் கலிபோர்னியாவில் உள்ள இலா ஜோல்லாவில் இறந்தார்.[5]


விருதுகள்

இவரது பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

  1. "Geoffrey Burbidge". The Telegraph - Obituaries. Telegraph Media Group. 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-19.
  2. Geoffrey Burbidge (2007). "An Accidental Career". Annual Review of Astronomy and Astrophysics. doi:10.1146/annurev.astro.45.051806.110552. http://www.annualreviews.org/doi/full/10.1146/annurev.astro.45.051806.110552. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 3.2 Dennis Overbye (2010-02-06). "Geoffrey Burbidge, Who Traced Life to Stardust, Is Dead at 84". New York Times. http://www.nytimes.com/2010/02/07/science/space/07burbidge.html?ref=science. 
  4. Richard Panek (2005-11-22). "Two Against the Big Bang". Discover magazine. http://discovermagazine.com/2005/nov/two-against-the-big-bang. 
  5. Childs, Martin (2010-04-24). "Geoffrey Burbidge: Astrophysicist notorious for his rejection of the Big Bang theory". The Independent - Obituaries. independent.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2012-03-19.
  6. "Grants, Prizes, and Awards". American Astronomical Society. Archived from the original on 2010-12-22. பார்க்கப்பட்ட நாள் 2017-01-21.
  7. "The Bruce Medallists: Geoffrey Burbidge". பார்க்கப்பட்ட நாள் 2010-01-27.
  8. "NAS Award for Scientific Reviewing". National Academy of Sciences. Archived from the original on 18 March 2011. பார்க்கப்பட்ட நாள் 27 February 2011.
  9. "Academy honors 18 for major contributions to science". 2007-01-17.

வெளி இணைப்புகள்[தொகு]