ஜியோஃபிஸ்கா இண்டர்நேஷனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியோஃபிஸ்கா இண்டர்நேசனல்  
துறை புவியியற்பியல்
மொழி ஆங்கிலம், எசுபானியம்
பொறுப்பாசிரியர்: ஜோஸ் எப். வால்டஸ் காலிசியா

சின்னா லோமின்ட்ஸ் .ஏ

வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் ஜியோஃபிசிகா நிறுவனம் (மெக்சிகோ)
வெளியீட்டு இடைவெளி: காலாண்டு இதழ்

ஜியோஃபிசிகா இன்டர்நேஷனல்(Geofísica Internacional), என்பது மெக்சிக்கோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகத்தின் ஜியோஃபிசிகா நிறுவனத்தால் வெளியிடப்பட்ட காலாண்டு சக மதிப்பாய்வு செய்யப்பட்ட திறந்த அணுகல் கொண்ட ஆய்விதழ். இலத்தீன் அமெரிக்க புவியியற்பியல் சமூகத்திற்கான ஆர்வமுள்ள தலைப்புகள்மீது இந்த இதழ் கவனம் செலுத்துகிறது. செர்வாண்டோ டி லா குரூஸ் ரெய்னா (மெக்ஸிகோவின் தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம்) என்பவரை தலைமை தொகுப்பாசிரியராகக் கொண்டு இது 1961 இல் நிறுவப்பட்டது.

இரசாயன சுருக்கங்கள் சேவை,[1] ஜியோபேஸ்,[2] அறிவியல் மேற்கோள் குறியீட்டு விரிவாக்கம்,[3] மற்றும் இசுகோபசு[4] ஆகியவற்றில் இதழ் சுருக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைககளின்படி, இந்த இதழ் 2018 இன் தாக்கக் காரணி 0.826 ஐக் கொண்டுள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]