ஜிம் ரோஜர்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிம் ரோஜர்சு
Jim Rogers
2010 இல் ஜிம் ரோஜர்சு
பிறப்புJames Beeland Rogers, Jr.
அக்டோபர் 19, 1942 (1942-10-19) (அகவை 81)
பால்ட்டிமோர், ஐக்கிய அமெரிக்கா[1]
குடியுரிமைஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்பாலியோன்ல் கல்லூரி, ஆக்சுபோர்டு (இளங்கலை)
யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை)
பணிதொழிலதிபர்
வாழ்க்கைத்
துணை
லூயிசு பியேனர் (தி. 1966-69)
ஜெனிபர் இசுக்கோல்னிக் (தி. 1974-77)
பேயிச் பார்க்கர் (தி. 2000)
வலைத்தளம்
www.jimrogers.com

ஜிம் ரோஜர்ஸ் ( James Beeland "Jim" Rogers, Jr. அக்டோபர் 19, 1942) என்பவர் அமெரிக்கத் தொழில் அதிபர், பெரும் முதலீட்டாளர், நிதி ஆலோசகர், நூலாசிரியர் மற்றும் உலகம் சுற்றுபவர் ஆவார்.[2] ரோஜர்ஸ் ஹோல்டிங்ஸ் அண்ட்  பீலான்ட் என்ற குழுமத்தின் தலைவர். குவாண்டம் பண்ட் பிறருடன் சேர்ந்து தொடங்கியவர். ரோஜர்ஸ் இண்டர்நேஷனல் கம்மாடிடீஸ் இன்டெக்ஸ் என்ற குழுமத்தையும் நடத்தி வருகிறார். இவர் சிங்கப்பூரைத் தலைமையகமாக வைத்து தொழில்கள் நடத்தி வருகிறார்.

பிறப்பும் படிப்பும்[தொகு]

ரோஜர்ஸ் மேரிலாந்தில் பால்ட்டிமோர் என்னும் ஊரில் பிறந்தார். அலபாமா டெமோபோலிசில் வளர்ந்தார். 1964 இல் யேல் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வால் ஸ்ட்ரீட்டில் பணி செய்தார். 1966 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் மெய்யியல், அரசியல், பொருளாதாரம் பயின்று மீண்டும் இளங்கலைப் பட்டம் பெற்றார் படகு போட்டியில் இவர் தலைமையேற்று வழி நடத்தி ஆக்சுபோர்டு வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.[1]

தொழிலதிபராக[தொகு]

1966 முதல் 1968 வரை வியட்நாம் போரின்போது அமெரிக்கப் படையில் எழுத்தராக இருந்து சேவை செய்தார். 1970 இல்  ஆரன்கோல்டு அண்ட் பிளிச்ரோடேர் என்னும்  ஒரு முதலீட்டு வங்கியில் பணி புரிந்தார். 1973 இல் சோரோஸ் என்பவருடன் கூட்டு சேர்ந்து குவாண்டம் பண்ட் என்னும் நிதி நிறுவனத்தைத்  தொடங்கினார். 1998 இல் இவர் ரோஜர்ஸ் பன்னாட்டு கம்மாடிட்டி இன்டெக்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார்.

உலகச் சுற்றுப்பயணம்[தொகு]

1990 முதல் 1992 வரை சீனா முழுவதும் தம் மோட்டார் சைக்கிளில் 10000 மைல்கள் தொலைவுப் பயணம் செய்தார். இது கின்னஸ் உலகப் பதிவில் இடம் பெற்றது.  தம் பயண அனுபவங்களை இன்வெஸ்ட்மென்ட் பர்கர் என்னும் பெயரில் நூலெழுதி வெளியிட்டார். 1999 ஆம் ஆண்டு சனவரி முதல் நாளில் தம் உலகப் பயணத்தைத் தம் மனைவியுடன் தொடங்கினார். 116 நாடுகளில் தமது மெர்சிடஸ் மகிழுந்தில் பயணம் செய்து கின்னஸ் உலகப் பதிவில் இடம் பெற்றார். அப்பயணம் 2002 சனவரி 5இல் நிறைவுற்றது. அதனைத் தொடர்ந்து ஒரு நூலையும் எழுதினார். அந்த நூல் நன்றாக விற்பனை ஆனது. கொலம்பியா வணிகப் பள்ளியில் வருகை தரு பேராசிரியராக இருந்தார்.

எழுதிய நூல்கள்[தொகு]

  • ஹாட் கம்மாடிட்டிஸ் 
  • அட்வென்சர் கேப்பிடலிஸ்ட் 
  • எ புல்  இன் சைனா 
  • இன்வெஸ்ட்மென்ட் பைக்கர் 
  • கான்ட்ராரியன் இன்வெஸ்டிங் [3]

சான்றாவணம்[தொகு]

  1. 1.0 1.1 Vetter, Jason (January 18, 1998). – "Adventurer from Marengo Wanders into the Big Money: Jim Rogers started out selling peanuts at Little League games, then made a bonanza on Wall Street". – Mobile Register.
  2. http://www.financialexpress.com/economy/jim-rogers-i-wanted-to-invest-in-india-but-demonetisation-happened/503957/
  3. https://www.goodreads.com/author/list/41344.Jim_Rogers
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_ரோஜர்ஸ்&oldid=2896175" இலிருந்து மீள்விக்கப்பட்டது