ஜிம்மி ஏஞ்செல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜிம்மி ஏஞ்செல் (James Crawford "Jimmie" Angel, 1899 ஆகத்து 1 - 1956 திசம்பர் 8) அமெரிக்க வானூர்தி வலவன் ஆவார். வெனிசுலாவில் உள்ள உலகிலேயே உயரமான அருவிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு ஏஞ்சல் அருவி என அழைக்கிறார்கள்.[1][2] அமெரிக்காவில் மிசூரி மாநிலத்தில் உள்ள செடார் பள்ளத்தாக்கில் பிறந்தார். 1920 களில் இவரை ஜிம்மி என்று செல்லமாக அழைத்தனர்.

வெனிசுலாவில் கிரான் சபானாவில் அவுயன்டிபு மலையின் உச்சியிலிருந்து விழும் அருவியை இவர் தாதுப் பொருள் இடத்தைத் தேடி வானூர்தியில் பறக்கும்போது 1933 நவம்பர் 18 இல் கண்டுபிடித்தார். வெளி உலகிற்கு இத்தகைய அருவி ஒன்று இருப்பது தெரியாமல் இருந்தது. ஜிம்மி ஏஞ்செல் இந்த அருவியைக் கண்டுபிடித்ததால் ஏஞ்சல் அருவி எனப் பெயர் ஏற்பட்டது.

இறப்பு[தொகு]

1956 ஏப்பிரல் 17 இல் பனாமாவில் வானூர்தியைத் தரையில் இறக்கும்போது, ஜிம்மி ஏஞ்சல் தலையில் அடிபட்டுக் காயமடைந்தார். அந்த நிகழ்வுக்குப் பின்னர் மாரடைப்பு நோயினாலும் நிமோனியாவினாலும் பாதிக்கப்பட்டு பனாமா நகரில் மருத்துவமனையில் காலமானார். இவருடைய இரண்டு மகன்கள் ஏஞ்சல் அருவிக்குச் சென்று ஜிம்மி ஏஞ்செல்லின் உடலின் சாம்பலை அவருடைய விருப்பத்தின் பேரில் அருவியில் தூவினார்கள்.[3]

மேற்கோள்[தொகு]

  1. "Plane Pilot Sights Highest Waterfall in World." Popular Science, April 1938, p. 37.
  2. Angel, Karen (2012). "Why the World’s Tallest Waterfall is Named Angel Falls". Terrae Incognitae 44 (1): 16–42. doi:10.1179/0082288412Z.0000000003. 
  3. https://web.archive.org/web/20100316040209/http://www.jimmieangel.org/history.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_ஏஞ்செல்&oldid=3095062" இருந்து மீள்விக்கப்பட்டது