உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிமுதவாகனன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிமுதவாகனன் (Jīmūtavāhana), பண்டைய இந்தியாவின் (சுமார் 12ஆம் நூற்றாண்டில்) வங்காளப் பிரதேசத்தைச் சேர்ந்த சமசுகிருதம் மொழி அறிஞரும், இந்து சமய ஸ்மிருதிகளையும், சமய ஆய்வுக் கடடுரைகளையும் எழுதியவர். 1956 இந்து வாரிசுரிமைச் சட்டம் இயற்றப்படும் வரை, ஜிமுதவாகனன் எழுதிய தாயபாகம் எனும் நூலின் அடிப்படையில் இந்து சமயத்தினர், சீக்கியர், பௌத்தர் மற்றும் சமணர்களின் வாரிசுரிமை மற்றும் சொத்துரிமை நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய படைப்புகள்

[தொகு]

ஜிமுதவாகனன் தனது மூன்று முக்கிய படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். அவைகள் பின்வருமாறு:

  • காலவிவேகம் - இந்து சமயச் சடங்குகளைச் செய்வதற்கான மங்களகரமான காலம் மற்றும் நேரம் பற்றிய முழுமையான பகுப்பாய்வாகும்.
  • நியாயரத்தின-மாத்திரிகா அல்லது வியாவகாரம் (vyavahāra)- இந்து சமயத்தின் கடைபிடிக்கப்பட்ட வேண்டிய விவகாரங்களை (நீதித் துறை நடைமுறைகளஈ) எடுத்துரைக்கிறது. இந்த நடைமுறை ஐந்தாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்: வியாவகாரிகமுகம், பாஷபதம், உத்தரபதம், கிரியாபதம் மற்றும் நிர்ணயபதம்.

தாயபாகத்திற்கு கீழ்கண்ட விளக்க உரைகள் எழுதப்பட்டுள்ளது. ஸ்ரீநாத் ஆச்சார்யசூடாமணியின் தயாபாகாதிப்பனி (கிபி. 16ம் நூற்றாண்டு), இரகுநந்தன் பட்டாச்சார்யாவின் தயாபாகாதிகா (16ம் நூற்றாண்டு) மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தர்கலாங்கர் (18 ஆம் நூற்றாண்டு) தாயபாகா குறித்து 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதிய விளக்கவுரை.

தாயபாகம்

[தொகு]

இந்தியாவில் இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 இயற்றப்படுவதற்கு முன்னர் வரை, ஜிமுதவாகனன் எழுதிய தாயபாகம் நூலின் அடிப்படையில் இந்துக்கள் தங்கள் பரம்பரை சொத்துக்களை பிரித்துக்கொண்டனர். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் இருந்த வங்காளப் பகுதியில் இருந்த நீதிமன்றங்களில் தயாபாகச் சட்டம் கடைப்பிடிக்கப்பட்டது.[1] . மேதாதிதி எழுதிய மிதாச்சாரம் பற்றிய விமர்சனங்களின் அடிப்படையில், ஜிமுதவாகனின் பணி மிதாச்சாரத்தால் தடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kane, P. V., History of Dharmaśāstra, (Poona: Bhandarkar Oriental Research Institute, 1975), Volume I, Part II, 703.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிமுதவாகனன்&oldid=4473326" இலிருந்து மீள்விக்கப்பட்டது