ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையம்

வடக்கு முனை வானூர்தி நிலையம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைராணுவம்/பாெது
உரிமையாளர்பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு
இயக்குனர்ஜிப்ரால்டர் அரசு
சேவை புரிவதுஜிப்ரால்ட்டர் (பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்) மற்றும் காம்போ த ஜிப்ரால்ட்டர் (எசுப்பானியா)[1]
உயரம் AMSL12 ft / 4 m
ஆள்கூறுகள்36°9′4″N 5°20′59″W / 36.15111°N 5.34972°W / 36.15111; -5.34972
இணையத்தளம்https://www.gibraltarairport.gi/
நிலப்படம்
GIB is located in எசுப்பானியா
GIB
GIB
ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் அமைவிடம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
09/27 1,777 5,864 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2022)
பயணிகள்446,187
பயணிகள் மாற்றம் 21-2270%
வானூர்தி இயக்கம்3,868
இயக்க மாற்றம் 21-2218.3%
மூலம்: வானூர்தி நிலையத் தரவுகள்[2]

ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையம் அல்லது ஜிப்ரால்டர் சர்வதேச விமான நிலையம் அல்லது நார்த் ஃப்ரண்ட் வானூர்தி நிலையம் (வடக்கு முனை வானூர்தி நிலையம்) (IATA: GIB, ICAO: LXGB) (ஐஏடிஏ: GIBஐசிஏஓ: LXGB) என்பது பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்களுள் ஒன்றான ஜிப்ரால்டரில் சேவை செய்யும் குடிசார் வானூர்தி நிலையமாகும். அவாப (RAF) ஜிப்ரால்டர் என்று வழங்கப்படும் இதன் வானூர்தி ஓடுபாதை அரச வான் படையின் பயன்பாட்டுக்கென உள்ளது. இது ஐக்கிய இராச்சியத்தின் பாதுகாப்பு அமைச்சுக்குச் சொந்தமானது. குடிசார் வினைஞர்களால் இயக்கப்படும் முனையத்தைக் குடிசார் வானூர்திச்சேவை வழங்குநர்கள் பயன்படுத்துகின்றனர். நாட்டு வானூர்திப் போக்குவரத்துச் சேவைகள் நிறுவனம் (NATS) இதன் வானூர்தி வழிநடத்துதல் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தந்தைப் பெற்றுள்ளது.

இந்தப் பன்னாட்டு வானூர்தி நிலையம், 2022-ஆம் ஆண்டில், 4,46,187 பயணிகள் மற்றும் 121 டன் சரக்குகளை 3,868 வானூர்தி இயக்கங்கள் மூலம் கையாண்டது.[3] ஸ்பெயினுடனான நிலப்பகுதி நோக்கிச் செல்லும் முதன்மைப் பாதையான வின்ஸ்டன் சர்ச்சில் நிழற்சாலை, வானூர்தி ஓடுபாதையைப் பிரிக்கிறது. இதனால் ஒவ்வொரு முறையும் ஒரு வானூர்தி புறப்படும் போது சாலை மூடப்படவேண்டியுள்ளது. ஜிப்ரால்ட்டர் விரிகுடாவுக்கும் அங்கிருக்கும் பாறைகளுக்கும் பக்கவாட்டில் வலுவான காற்று வீசுவதால் குளிர்காலங்களில் வானூர்தியைத் தரையிறக்குவது கடினமாக இருக்கிறது. எனவே, அமெரிக்கத் தொலைக்காட்சி நிறுவனமான ஹிஸ்டரி சேனல் அதன் மிகக் கடுமுனைப்பான வானிலையங்கள் பட்டியலில் இந்த வானிலையத்துக்கு ஐந்தாவது இடத்தை வழங்கியது.[4]

வரலாறு[தொகு]

ஜிப்ரால்டரைப் பிற ஐபீரிய தீபகற்பத்தோடு இணைக்கும் நிலச்சந்தியில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. வானூர்தி நிலையம் அமைந்துள்ள நிலப்பகுதி உத்ரெக்ட் உடன்பாட்டின்படி விட்டுக்கொடுக்கப்பட்டதா என்பதில் ஸ்பெயினுக்கும் பிரிட்டனுக்கும் இடையே பூசல் உள்ளது.[5] இந்நிலப்பகுதி கைப்பற்றப்படவில்லை எனக் கூறி, இங்குள்ள பிரிட்டானிய நிர்வாகத்தை ஸ்பெயின் ஏற்கவில்லை. பின்னர், 02 திசம்பர் 1987-இல் பிரிட்டனும் ஸ்பெயினும் இந்த வானூர்தி நிலையத்தைக் குடிசார் பயன்களுக்கு மட்டும் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன.[6] இருப்பினும் 1988-ஆம் ஆண்டு ஜோ பொஸ்ஸானோ தலைமையிலான ஜிப்ரால்ட்டர் அரசு இந்த ஒப்பந்தத்தை மறித்தது. இதன் விளைவாக, அந்த ஒப்பந்தம் முழுவதுமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.

முனையம்[தொகு]

ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் ஒரு முனையம் உள்ளது.[7]

பழைய முனையம் 1939-ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1990-களில் புதுப்பிக்கப்பட்டது. 20,000 ச.மீ பரப்பளவு கொண்டிருந்த அந்த முனையம் இந்த வானூர்தி நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைக்குப் போதுமானதாக இல்லை.[8] எனவே, புதிய முனையத்துக்கான திட்டம் 2007-ஆம் ஆண்டு வகுக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு கட்டுமானப்பணி தொடங்கி 2011-ஆம் ஆண்டு நிறைவுற்றது.

புதிய முனையத்தின் முதற்பிரிவு 26 நவம்பர் 2011-இல் பயணிகள் வருகைகளுக்கு மட்டும் செயல்படத்தொடங்கியது. 26 செப்டம்பர் 2012-இல் இரண்டாம் பிரிவும் திறக்கப்பட்டு பயணிகள் புறப்பாடுகளுக்கும் செயல்படத்தொடங்கியது. புதிய முனையத்தின் பரப்பளவு 35,000 ச.மீ ஆகும். பழைய முனையம் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இடிக்கப்பட்டது.

ஜிப்ரால்டர் பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் அகலப்பரப்புக் காட்சி.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Maps". Google Maps. Archived from the original on 6 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2018.
  2. "GIBRALTAR". Airport Data. airportdata.com. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Gibraltar International Airport Traffic Statistics 2022" (PDF). Gibraltar International Airport. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  4. Most Extreme Airports; The History Channel; 26 August 2010.
  5. Duarte, Esteban; Penty, Charles (5 July 2018). "Why Brexit Poses an Existential Issue for Gibraltar". Bloomberg News. பார்க்கப்பட்ட நாள் 2018-09-13. The airport is located on the border and has been long been the subject of competing claims. Spain says the land wasn't ceded under the Utrecht Treaty of 1713
  6. "Joint Civil Use of the Airport". Archived from the original on 12 திசம்பர் 2005. பார்க்கப்பட்ட நாள் 15 ஆகத்து 2004.
  7. Gibraltar Office of the Deputy Chief Minister(24 September 2012). "Move of departure operations to New Air Terminal". செய்திக் குறிப்பு.
  8. "Gibraltar Airport - Visitors Guide". Gibraltar Airport. பார்க்கப்பட்ட நாள் 20 November 2013.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளியிணைப்புகள்[தொகு]