ஜிப்ரால்டர்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிப்ரால்டர்பீடியா (Gibraltarpedia), ஜிப்ரால்டர் நாட்டைப் பற்றிய அதிக தகவல்களை விக்கிப்பீடியாவில் எழுத தொடங்கப்பட்ட துணைத் திட்டமாகும். இது ஜிப்ரால்டர் அரசால் ஜூலை 2012 இன் போது அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில், ஜிப்ரால்டர் தொடர்பான வரலாறு, பண்பாடு, புவியியல் பற்றிய கட்டுரைகள் அதிகம் எழுதப்படுவது குறிக்கோளாக முன்னிறுத்தப்பட்டது. விக்கிமீடிய நிறுவன அறக்கட்டளை நபர் ஒருவர் ஜிப்ரால்டர் அரசின் சுற்றுலாத் துறையிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு சுற்றுலாவை வளர்க்க விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாயின. விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஒரே மாதத்தில் ஆறு கட்டுரைகள் ஜிப்ரால்டர் பற்றிய கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன என குற்றம் சாட்டப்பட்டது. விக்கிப்பீடியாவைப் பற்றிய சர்ச்சையான செய்திகளும் வெளியாயின.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிப்ரால்டர்பீடியா&oldid=1405922" இலிருந்து மீள்விக்கப்பட்டது