ஜிபின் கோஷல்

ஜிபன் கோஷல் (Jiban Ghoshal) (26 சூன் 1912 - 1 செப்டம்பர் 1930) மக்கன்லால் என்றும் அழைக்கப்படும் இவர் ஓர் இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார். 1930 ஆம் ஆண்டில் சிட்டகொங் ஆயுதத் தாக்குதலை நடத்திய சூர்யா சென் தலைமையிலான ஆயுத எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்தார். [1]
புரட்சிகர நடவடிக்கைகள்
[தொகு]இவர் பிரித்தானிய இந்தியாவில் சிட்டகொங்கில் உள்ள சதர்காட்டில் பிறந்தார். இவர் பிரபலமாக மக்கன்லால் என்று அழைக்கப்பட்டார். மாணவ வாழ்க்கையில் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இவர் சிட்டகொங் ஆயுதக் கொள்ளையில் தீவிரமாக பங்கேற்றனர். இந்த நடவடிக்கைக்குப் பிறகு இவர் சிட்டகொங்கிலிருந்து மற்றொரு இளம் புரட்சியாளரான ஆனந்த குப்தாவுடன் கொல்கத்தாவை நோக்கி தப்பி ஓடினார். குழுவின் இரண்டு மூத்த உறுப்பினர்கள், கணேஷ் கோசும், அனந்தா சிங்கும் இவருடன் பயணத்தில் சென்றனர். பெனி இரயில் நிலையத்தில் காவல்துறையினருக்கு சவால் விடுத்தனர். ஆனால் இறுதியாக இவரும் மற்றவர்களும் ஒரு சிறு துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு தப்பிக்க முடிந்தது. இவர் கொல்கத்தா, மிர்சாபூர் தெரு மற்றும் ஹூக்லி மாவட்டத்தின் சந்தன்நகர் ஆகிய இடங்களில் தங்கினார். [2] [3]
இறப்பு
[தொகு]காவலர்களிடமிருந்து தப்பித்த இவர் சிலகாலம் மறைந்து வாழ்ந்தார். காவல் ஆணையர் சார்லஸ் டெகார்ட் என்பவர் 1930 செப்டம்பர் 1 ஆம் தேதி சந்தன்நகரில் இவரது மறைவிடத்தைத் தாக்கினார், பின்னர் நடந்த போரில் இவர் கொல்லப்பட்டார். [4] [5]
பிரசித்தி பெற்ற கலாச்சாரம்
[தொகு]இவரது பாத்திரத்தை ஸ்மித் சேத் என்ற இயக்குநர் தனது பிரபல பாலிவுட் திரைப்படமான கெலின் ஹம் ஜீ ஜான் சேவில் 2010 இல் சித்தரித்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Remembering the Legendary Heroes of Chittagong". pib.nic.in. Retrieved December 2, 2017.
- ↑ Arun Chandra Guha. Indias Struggle Quarter of Century 1921 to 1946. Vol. Part I. Publications Division Ministry of Information & Broadcasting. pp. 217-. ISBN 978-81-230-2274-1. Retrieved December 2, 2017.
- ↑ Subodh C. Sengupta & Anjali Basu (2002). Sansab Bangali Charitavidhan. Vol. Vol. I. Sahitya Sansad. p. 178. ISBN 81-85626-65-0.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ Subodh C. Sengupta & Anjali Basu (2002). Sansab Bangali Charitavidhan (in Bengali). Vol. Vol. I. Kolkata: Sahitya Sansad. p. 178. ISBN 81-85626-65-0.
{{cite book}}
:|volume=
has extra text (help) - ↑ P. N. Chopra. Who's Who of Indian Martyrs. Vol. Vol. I. Ministry of Education and Youth Services, Government of India. pp. 1936-. ISBN 978-81-230-2180-5.
{{cite book}}
:|volume=
has extra text (help)