உள்ளடக்கத்துக்குச் செல்

ஜித்பூர் சிமாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜித்பூர் சிமாரா தெற்கு நேபாளத்தின் மாகாண எண் 2 இல் உள்ள பரா மாவட்டத்தில் உள்ள ஒரு துணை பெரு நகரமாகும். இது காதிமாய் நகராட்சி, இன்னர்வாசிரா, அம்லேகாஞ்ச்ற, மன்ஹர்வா, ஹரையா மற்றும் ராம்பூர் டோகானி ஆகிய பகுதிகளை ஒன்றிணைத்து புதிதாய் 2017 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று உருவாக்கப்பட்ட பெருநகர நகரம் ஆகும்.[1]  2011 ஆம் ஆண்டின் நேபாள மக்கட் தொகை கணக்கெடுப்பின் போது இந்த துணை பெருநகர நகரமானது 21,670 தனிப்பட்ட வீடுகளில் வசிக்கும் 117,094 மக்கட் தொகையை கொண்டிருந்தது.[2]

புவியியல்

[தொகு]

ஜித்பூர் சிமாரா நேபாளத்தின் தெராய் பகுதியில் அமைந்துள்ளது. வடக்கே, இது ஹெட்டாடா துணை பெருநகர நகரத்திற்கும், தெற்கு மற்றும் மேற்கு பிர்குஞ்ச் பெருநகர நகரத்திற்கும், கிழக்கு கலையா துணை பெருநகர நகரத்திற்கும் எல்லையாக உள்ளது. இது நாட்டின் இளைய துணை பெருநகரமாக கருதப்படுகிறது.[3]

காலநிலை

[தொகு]

சிமாராவில் இதுவரை பதிவான மிக உயர்ந்த வெப்பநிலை 42.8 (C (109.0 °F) ஆகும். இந்த வெப்பநிலை 1979 ஆம் ஆண்டு சூன் 6 அன்று பதிவாகியது. மேலும் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த வெப்பநிலை 1.0 °C (33.8 °F) ஆகும். இவ் வெப்பநிலை 1985 ஆம் ஆண்டு சனவரி 23 அன்று பதிவு செய்யப்பட்டது.[4]

உட்கட்டமைப்புகள்

[தொகு]

சிமாரா விமான நிலையம் ஓல்ட்-பிபாரா சிமாராவில் அமைந்துள்ளது. இது காத்மாண்டுவிற்கு விமான சேவைகளை வழங்குகின்றது. இந்த விமான நிலையம் காத்மாண்டுவிற்கு அருகில் உள்ள விமான நிலையமாகும்.[5] மகேந்திர நெடுஞ்சாலை மற்றும் திரிபுவன் நெடுஞ்சாலை என்பன ஜித்பூர் சிமாராவை நேபாளத்தின் பல்வேறு பகுதிகளுடனும் இந்திய எல்லையுடனும் இணைக்கின்றன.

அம்லேக்குஞ்ச் ரக்சால் ரயில் பாதை

[தொகு]

இந்தியா பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்த காலம் தொடக்கம் அம்லேக்குஞ்ச் ரக்ஸால் ரயில் பாதை அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று நினைவுச் சின்னமாகும். தண்டவாள கட்டைகளையும், ஏனைய போக்குவரத்து தேவைகளுக்காகவும் இது கட்டப்பட்டது.

மேலும் இது முக்கிய சாலைகள் திறக்க மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு வழிவகுத்தது. நிலங்கள் / கட்டிடங்கள் சட்டவிரோதமாக அத்துமீறல் மற்றும் காடழிப்பு என்பவற்றின் காரணமாக இந்த ரயில் பாதை அழிவின் விளிம்பில் உள்ளது.[6]

வசதிகள்

[தொகு]

இப்பகுதியின் 60% வீதமான நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.[7]

பார்சா தேசிய பூங்கா

[தொகு]

பார்சா தேசிய பூங்கா தென் மத்திய நேபாளத்தின் உள் டெராய் தாழ்நிலப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். இந்த தேசிய பூங்கா 627.39 கிமீ 2(242.24 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த தேசிய பூங்காவில் யானைகள், ஒரு கொம்பு காண்டாமிருகம், பலவிதமான பறவைகள், மலைப்பாம்பு என்பன காணப்படுகின்றன.[8]

டுமர்பனா

[தொகு]

டுமர்பானா பெருநகரப் பகுதியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது விவசாயத்தின் மையமாக அறியப்படுகின்றது. சிறப்பு பொருளாதார வளர்ச்சியில் உள்ளது. அரசாங்க நிலங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பது உள்ளூர் பகுதியின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தது. இதனால் குறிப்பிடத்தக்க விவசாய பணிகள் இழக்கப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நிலங்களை மீட்டு விவசாயிகளுக்காக பிர்குஞ்ச் சர்க்கரை ஆலையை மீண்டும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்நாட்டு மற்றும் எல்லை தாண்டிய கும்பல்களால் இயற்கை வனங்களும், நதிகளும் அழிக்கப்பட்டமையானது வெள்ளம் மற்றும் பாலைவனமாக்கலை உருவாக்கியது.[9]

டுமர்பானாவுக்கு சொந்தமாக கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கூட்டுறவு உள்ளது. இது பரா மாவட்டத்தில் கல்வி, விவசாய, சமூக பொருளாதார மையமாக வளர்ந்து வருகிறது. டுமர்வானாவில் டான்ஃப் யூத் கிளப் (பவானிபூர்), சுந்தர்பஸ்தி இளைஞர் கழகம் (சுந்தர்பஸ்தி), ராஜ்கட்டா இளைஞர் கழகம் (ராஜ்கட்டா) என பல கால்பந்து அணிகள் உள்ளன.

சான்றுகள்

[தொகு]
  1. Republica. "Kalaiya residents agitate demanding sub metropolitan city". My Republica (in ஆங்கிலம்). Retrieved 2019-11-27.
  2. ""National Population and Housing Census 2011"" (PDF). Archived from the original (PDF) on 2018-01-27.
  3. "Nepal Census 2001". web.archive.org. Archived from the original on 2008-10-12. Retrieved 2019-11-27.
  4. "Climate" (PDF). Archived from the original on 2016-03-04.
  5. "Simara Airport" (PDF). Archived from the original (PDF) on 2018-09-07.
  6. Yadav, Upendra. "Land of Nepal Railway in Raxaul remains unutilized". My Republica (in ஆங்கிலம்). Retrieved 2019-11-27.
  7. "Rising demand gives boost to fish farming". kathmandupost.com (in English). Retrieved 2019-11-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Parsa National Park welcomes baby elephant". kathmandupost.com (in English). Retrieved 2019-11-27.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  9. "Early sowing of maize seeds blamed for repeated crop failures". kathmandupost.com. Retrieved 2019-11-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜித்பூர்_சிமாரா&oldid=3588275" இலிருந்து மீள்விக்கப்பட்டது