ஜிதேஷ் சர்மா
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜிதேஷ் மோகன் சர்மா | |||||||||||||||||||||||||||||||||||
| பிறப்பு | 22 அக்டோபர் 1993 அமராவதி, மகாராட்டிரம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||
| பங்கு | இலக்குக் கவனிப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி |
| |||||||||||||||||||||||||||||||||||
| இ20ப அறிமுகம் (தொப்பி 109) | 3 அக்டோபர் 2023 எ. நேபாளம் | |||||||||||||||||||||||||||||||||||
| கடைசி இ20ப | 19 டிசம்பர் 2025 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||
| இ20ப சட்டை எண் | 6 | |||||||||||||||||||||||||||||||||||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
| 2013–2025 | விதர்பா | |||||||||||||||||||||||||||||||||||
| 2026-தற்போது | பரோடா | |||||||||||||||||||||||||||||||||||
| 2022–2024 | பஞ்சாப் கிங்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||
| 2025–தற்போது | ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | |||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ஈஎஸ்பிஎன்கிரிக்கின்ஃபோ, 20 டிசம்பர் 2025 | ||||||||||||||||||||||||||||||||||||
ஜிதேஷ் மோகன் ஷர்மா (பிறப்பு: அக்டோபர் 22,1993) ஓர் இந்திய பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர் ஆவார். அவர் இலக்குக் காப்பாளர்-மட்டையாளராக விளையாடுகிறார்.[1] அவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் விதர்பா அணிக்காகவும் இந்தியன் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரிற்காகவும் விளையாடுகிறார். ஏ. சி. சி வளர்ந்துவரும் ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும் ஜிதேஷ் இருந்தார்.
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]இவர் 27 பிப்ரவரி 2014 அன்று விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணிக்காக பட்டியல் அ போட்டிகளில் அறிமுகமானார்.[2] அக்டோபர் 1, 2015 அன்று ரஞ்சிக் கோப்பையில், முதல் தரப் போட்டிகளில் அறிமுகமானார்.[3] 2018-19 விஜய் ஹசாரே கோப்பையில் விதர்பா அணிக்காக ஏழு போட்டிகளில் 298 ஓட்டங்களுடன் அந்தப் பருவத்தில் அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக இருந்தார். ஜிதேஷ் ஷர்மா சிறந்த 2023 ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்டதன்மூலம் பன்னாட்டுப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்புகள் அதிகமாயின.[4]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]சனவரி 2023இல் இலங்கைக்கு எதிரான பன்னாட்டு இருபது20 தொடருக்காக இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்றார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது, அக்டோபர் 3, 2023 அன்று நேபாளத்திற்கு எதிராக இவர் தனது பன்னாட்டுப் போட்டி அறிமுகத்தை மேற்கொண்டார். 2023இல் ஆஸ்திரேலியா இ20ப தொடருக்கான அணியில் இடம்பெற்ற பிறகு அவரது துடுப்பாட்ட வாழ்க்கை மேலும் சிறப்படையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தத் தொடரின் நான்காவது இ20ப போட்டியில், அவர் 19 பந்துகளில் 35 ஓட்ட்ங்கள் எடுத்தார். இது இன்றுவரை அவரது அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும் [5] மேலும் ஐந்தாவது மற்றும் இறுதி இ20ப போட்டியில், இவர் 16 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்தார். [6] 2024இல், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இ20ப தொடருக்கு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் போட்டியில், இவர் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அடுத்த போட்டியில் 2 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஓட்டமேதும் பெறாமல் ஆட்டமிழந்தார். 2025ஆம் ஆண்டில் அவர் ஆசியக் கோப்பை 2025 அணியில் இடம்பெற்றிருந்தார். வளர்ந்து வரும் இந்திய அணியின் ஆசியக் கோப்பை அணித்தலைவராகவும் இருந்தார் [7] . ஆஸ்திரேலியாவுக்கான இந்தியச் சுற்றுப்பயணத்தில் இவர் விளையாடினார். சஞ்சு சாம்சன் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு மூன்றாவது இ20ப போட்டியில் 13 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்தார். [8] இவர் இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் விளையாடினார். முதல் இ20ப போட்டியில் 5 பந்துகளில் 10 ஓட்டங்களும்,[9] 2ஆவது இ20ப போட்டியில் 17 பந்துகளில் 27 ஓட்டங்களும் எடுத்தார் [10] இந்த அனைத்து செயல்திறன்களுக்குப் பிறகும், துரதிர்ஷ்டவசமாக தேர்வாளர்களால் அணி சேர்க்கைகளில் மாற்றம் செய்யப்பட்டதால், அவர் 2026 இ20ப உலகக் கோப்பை அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. [11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Jitesh Sharma". ESPNcricinfo. Retrieved 6 October 2015.
- ↑ "Central Zone, Jaipur, Feb 27 2014, Vijay Hazare Trophy". ESPNcricinfo. Retrieved 14 November 2020.
- ↑ "Ranji Trophy, Group A: Vidarbha v Odisha at Nagpur, Oct 1-4, 2015". ESPNcricinfo. Retrieved 6 October 2015.
- ↑ "Vijay Hazare Trophy, 2016/17 — Vidarbha: Batting and bowling averages". ESPNcricinfo. Retrieved 9 October 2018.
- ↑ "IND vs AUS, Australia in India 2023/24, 4th T20I at Raipur, December 01, 2023 - Full Scorecard". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2023-12-06.
- ↑ "IND vs AUS, Australia in India 2023/24, 5th T20I at Bengaluru, December 03, 2023 - Full Scorecard". ESPNcricinfo (in ஆங்கிலம்). Retrieved 2023-12-06.
- ↑ "India squadfor emerging asia cup".
- ↑ "AUS vs IND Cricket Scorecard, 3rd T20I at Hobart, November 02, 2025". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 5 November 2025. Retrieved 2026-01-20.
- ↑ "India vs South Africa, 1st T20I at Cuttack, IND vs SA, Dec 09 2025 - Full Scorecard". ESPNcricinfo. https://www.espncricinfo.com/series/south-africa-in-india-2025-26-1479563/india-vs-south-africa-1st-t20i-1479576/full-scorecard.
- ↑ "IND vs SA Cricket Scorecard, 2nd T20I at New Chandigarh, December 11, 2025". ESPNcricinfo (in ஆங்கிலம்). Archived from the original on 11 December 2025. Retrieved 2026-01-20.
- ↑ "'I found out only after the squad was announced': 'Heartbroken' Jitesh Sharma opens up on T20 World Cup snub". The Times of India. https://timesofindia.indiatimes.com/sports/cricket/icc-mens-t20-world-cup/i-found-out-only-after-the-squad-was-announced-heartbroken-jitesh-sharma-opens-up-on-t20-world-cup-snub/articleshow/126521722.cms.