உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிதேந்திர நாத் கோசுவாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிதேந்திர நாத் கோசுவாமி
Jitendra Nath Goswami
ஜிதேந்திர நாத் கோசுவாமி (இடது) இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ச்சியிடமிருந்து பத்மசிறீ விருதினைப் பெறுகிறார்.
பிறப்பு18 நவம்பர் 1950 (1950-11-18) (அகவை 75)[1]
இயோகார்ட்டு, அசாம், இந்தியா
துறைவானியற்பியல்
பணியிடங்கள்இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்காட்டன் பல்கைலக்கழகம்
குவகாத்தி பல்கலைக்கழகம்
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம்
குசராத் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசந்திராயன்-1
சந்திராயன்-2
விருதுகள்நாசாவின் பொது சேவை குழு சாதைன விருது (1986)
சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (1994)
கமல் குமாரி தேசிய விருது (2003)
அசோம் ரத்னா (2015)
பத்மசிறீ (2017)

சிதேந்திர நாத் கோசுவாமி (Jitendra Nath Goswami) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் இயோர்காட்டு நகரத்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் ஆவார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சந்திராயன் -1 திட்டத்தின் தலைமை அறிவியல் அறிஞராகவும் இந்த திட்டத்தை உருவாக்கியவராகவும் இருந்தார்.[2] குசராத்தின் அகமதாபாத்தில் அமைந்துள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். சந்திராயன்-2 மற்றும் மங்கள்யான் திட்டங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார்.

கல்வி

[தொகு]

கோசுவாமி இயோர்காட்டில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கினார். 1965 ஆம் ஆண்டு அசாம் உயர் நிலைக் கல்வி கவுன்சில் நடத்திய மேல்நிலைத் தேர்வில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். அதன் பிறகு இயற்பியல் படிக்க காட்டன் கல்லூரியில் சேர்ந்து இளநிலை அறிவியல் படிப்பை முடித்தார்.[3] பின்னர் முதுகலை அறிவியல் படிப்பை குவகாத்தி பல்கலைக்கழகத்தில் முடித்தார். தனது முனைவர் படிப்பை டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் முடித்தார்.[4] இந்த நேரத்தில் அவர் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி அறிஞராக பணியாற்றினார். 1978 ஆம் ஆண்டு குசராத் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சி

[தொகு]

தனது முனைவர் பட்டத்தைத் தொடர்ந்து, கோசுவாமி பெர்க்லி பல்கலைக்கழகம், செயின்ட் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகம், சந்திரன் மற்றும் கோள் நிறுவனம் மற்றும் மேக்சு பிளாங்க் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவரது ஆராய்ச்சியானது சூரிய குடும்பம் மற்றும் வானியற்பியலைக் மையமாகக் கொண்டிருந்தது. கூட்டு முயற்சிகள் மூலம் சூரிய குடும்பம் உருவாகும் போது அதன் முக்கிய ஆற்றல் ஆதாரம் 26 ஏஐ நியூக்ளைடு என்று கூறுவதற்கான சான்றுகள் வழங்கப்பட்டன. இவர் அண்டக் கதிர்கள் மற்றும் டெக்டோனிக் தகடுகள் பற்றிய ஆய்வுகளுக்கும் பங்களித்துள்ளார். இதன் விளைவாக பல்வேறு கண்டுபிடிப்புகள் மற்றும் முடிவுகள் கிடைத்தன. இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் இவர் ஆய்வுத் திட்டங்களில் பங்கேற்றார். மேலும் அதன் ஆரம்ப கட்டங்களில் இசுரோவிற்கும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார். அண்டக் கதிர் பரிசோதனைக்கான, இணை அறிவியல் அறிஞராகவும் விண்வெளி ஆய்வகம்-3 விண்கலத்தில், சந்திராயன் திட்ட மாதிரிகளுக்கான முன்னணி அறிவியல் அறிஞராகவும் இருந்தார்.[4][5] கூடுதலாக 2016 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இன்ஃபோசிசு பரிசுக்கான அறிவியலின் ஒரு பிரிவான இயற்பியல் அறிவியல் நடுவர் மன்றத்தில் உறுப்பினராக இருந்துள்ளார்.[6]

விருதுகள்

[தொகு]
  • இந்திய தேசிய அறிவியல் சங்கத்தின் இளைஞர் அறிவியல் அறிஞர் விருது (1978)
  • நாசாவின் பொத சேவை குழு சாதனை விருது (1986)
  • சாந்தி சுவரூப் பட்நாகர் விருது (1994)
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கமல் குமாரி தேசிய விருது (2003)
  • ஆசியா ஓசியானியா புவி அறிவியல் சங்கத்தின் ஆக்சுஃப்போர்டு விருது ( 2014)[7]
  • அசாம் ரத்னா (2015) அசாம் அரசின் மிக உயர்ந்த குடிமகன் விருது [8]
  • இந்திய அரசின் பத்மசிறீ விருது (20170[9]
  • ஆசிய அறிவியல் அறிஞர் 100 ஆசிய அறிவியலாளர் (2018)

கோசுவாமி 2007 ஆம் ஆண்டு இந்திய வானியல் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் உலக அறிவியல் அகாடமி இந்திய அறிவியல் அகாடமி ஐரோப்பிய புவி வேதியியல் சங்கம் மற்றும் பல தேசிய சர்வதேச வானியல் சங்கங்களில் உறுப்பினராகவும் உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "JN Goswami Profile". Indian Academy of Sciences. Retrieved 18 September 2016.
  2. "The Chandrayaan Team". Zee News. Archived from the original on 6 August 2012. Retrieved 18 September 2016.
  3. "Chandrayaan scientist on Cotton mission". The Telegraph (India). 10 December 2008 இம் மூலத்தில் இருந்து 8 September 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230908054302/https://www.telegraphindia.com/north-east/chandrayaan-scientist-on-cotton-mission-aiming-for-the-moon/cid/519048. 
  4. 4.0 4.1 "Indian Fellow". Indian National Science Academy. Archived from the original on 24 July 2013. Retrieved 18 September 2016.
  5. "The Principal Scientist of Chandrayaan-1". north east india.com. Archived from the original on 2 August 2013. Retrieved 18 September 2016.
  6. "Infosys Prize - Jury 2018". Infosys Science Foundation. Retrieved 19 April 2021.
  7. "AOGS Axford Medal Award Recipient". Asia Oceania Geosciences Society. Retrieved April 28, 2023.
  8. "Dr Jiten Goswami awarded Asom Ratna". Assam Tribune இம் மூலத்தில் இருந்து 11 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161011200315/http://www.assamtribune.com/scripts/detailsnew.asp?id=feb2916%2Fat050. 
  9. "Padma Awards 2017 announced".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிதேந்திர_நாத்_கோசுவாமி&oldid=4427320" இலிருந்து மீள்விக்கப்பட்டது