உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம்

ஆள்கூறுகள்: 3°12′34.39″N 101°39′21.83″E / 3.2095528°N 101.6560639°E / 3.2095528; 101.6560639
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 PY11  ஜிஞ்சாங்
Rapid_KL_Logo | எம்ஆர்டி நிலையம்
ஜிஞ்சாங் நிலையம்
பொது தகவல்கள்
வேறு பெயர்கள்Jinjang MRT Station Stesen MRT Jinjang சீனம்: 增江站
அமைவிடம்ஜிஞ்சாங் கோலாலம்பூர்
 மலேசியா
ஆள்கூறுகள்3°12′34.39″N 101°39′21.83″E / 3.2095528°N 101.6560639°E / 3.2095528; 101.6560639
உரிமம் எம்ஆர்டி நிறுவனம்
இயக்குபவர்Rapid_KL_Logo ரேபிட் ரெயில்
தடங்கள்12  புத்ராஜெயா 
நடைமேடை1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்மட்ட நிலை
தரிப்பிடம்Parking உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு PY11 
வரலாறு
திறக்கப்பட்டது PY11  16 சூன் 2022
சேவைகள்
முந்தைய நிலையம்   ரேபிட் கேஎல்   அடுத்த நிலையம்
   
கெப்போங் பாரு
குவாசா டாமன்சாரா
 

புத்ராஜெயா வழித்தடம்
 
செரி டெலிமா
புத்ராஜெயா சென்ட்ரல்
அமைவிடம்
Map

ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Jinjang MRT station; மலாய்: Stesen MRT Jinjang) என்பது மலேசியா, கோலாலம்பூர், ஜிஞ்சாங் பகுதியில் அமைந்துள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.

இந்த நிலையம், கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT); புத்ராஜெயா எம்ஆர்டி வழித்தடத்தின் முதலாம் கட்ட கட்டுமானத்தின் கீழ் 2022 சூன் 16 அன்று திறக்கப்பட்டது.[1]  PY10  கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையத்திற்கும்;  PY12  செரி டெலிமா எம்ஆர்டி நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள இந்த நிலையத்தின் அடையாளக் குறியீடு  PY11  ஆகும்.[2] கிள்ளான் பள்ளத்தாக்கிலுள்ள பெரும்பாலான எம்ஆர்டி நிலையங்களைப் போலவே, இந்த நிலையமும் அடுக்குமாடி அமைப்பைக் கொண்டது.[3]

வரலாறு

[தொகு]

இந்த நிலையம் கட்டப்படுவதற்கு முன்பு சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தட அமைப்பில் (தற்போது புத்ராஜெயா வழித்தடம்) இந்த ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையமும் ஒரு பகுதியாக அமையும் என 2016 செப்டம்பர் 15-ஆம் தேதி எம்ஆர்டி நிறுவனம் அறிவித்தது. அதன் பின்னர் இந்த ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம்; புத்ராஜெயா வழித்தடத்தின் வடக்குப் பகுதியில் ஓர் உயர்ம்ட்ட நிலையமாக உருவாக்கப்பட்டது.

ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் சூன் 16, 2022-இல் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு, செயல்பாடுகளைத் தொடங்கியது.[4][5] மேலும் அதே காலக்கட்டத்தில்,  PY01  குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையம் தொடங்கி  PY13  கம்போங் பத்து எம்ஆர்டி நிலையம் வரையிலான 12 புத்ராஜெயா வழித்தடத்தின் பிற நிலையங்களும் செயல்படத் தொடங்கின.

நிலைய அமைவு

[தொகு]

இந்த நிலையம் கெப்போங் ஜாலான் பெசார் சாலையில், (54 மலேசிய கூட்டரசு சாலை 54) அமைந்துள்ளது. இந்த நிலையத்திற்கு அருகில் எனஸ்தா கெப்போங் குடியிருப்பு (Enesta Kepong Residence), பெட்ரோனாஸ் கெப்போங் (Petronas Kepong), தாமான் முத்தியாரா படாசன் (Taman Mutiara Fadason), கெப்போங் தொழில்துறை பகுதி (Kepong Industrial Area), வடக்கு ஜிஞ்சாங் தீயணைப்பு மீட்பு நிலையம் (North Jinjang Fire and Rescue Station) போன்றவை உள்ளன.

நிலைய அமைவிடம்

[தொகு]

ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் அடுக்கு மாடி அமைப்பைக் கொண்ட ஒரு நிலையமாகும். தரை மட்டத்திலிருந்து இரண்டு நிலைகளைக் கொண்டு உயர்த்தப்பட்ட நிலைய வடிவமைப்பைக் கொண்டது. முதல் நிலை இணைப்புவழி (Concourse) தளமாகும்; இரண்டாம் நிலையின் மேல் தளத்தில் இரட்டை வழித்தடங்களும்; ஒரு தீவு மேடையில் இரண்டு நடைமேடைகளும் உள்ளன.

ஜிஞ்சாங் நிலைய வழித்தடத்தின் முனையத்திற்குச் செல்ல இரண்டு நடைமேடைகள் உள்ளன; நடைமேடை 1 புத்ராஜெயா சென்ட்ரலுக்கும், நடைமேடை 2 குவாசா டாமன்சாரா எம்ஆர்டி நிலையத்திற்கும் பயன்படுத்தப் படுகின்றன.

நிலைய அமைப்பு

[தொகு]
L2
எம்ஆர்டி நடைமேடை
PY தெற்கு திசை 12  புத்ராஜெயா  PY41  புத்ராஜெயா சென்ட்ரல் (செரி டெலிமா எம்ஆர்டி நிலையம்)
 PY41  மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
 PY04  மத்திய நடைபாதை, தொடருந்து கதவு வலதுபுறம் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
PY வடக்கு திசை 12  புத்ராஜெயா  PY04  குவாசா டாமன்சாரா (கெப்போங் பாரு எம்ஆர்டி நிலையம்)
L1 இணைப்புவழி கட்டணப் பகுதி, பயணச்சீட்டு இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை அலுவலகம் ஊனமுற்றவர் அணுகல்
G தரை நிலை நுழைவு/வெளியேறும் வழி, பேருந்து நிறுத்தம், வாடகை தனியார் வாகனங்கள் ஊனமுற்றவர் அணுகல்

நிலையத்தின் மேல் பகுதியில் 1 தீவு மேடையில் 2 நடைமேடைகள் உள்ளன.

வெளியேறும் வழிகள் - நுழைவாயில்கள்

[தொகு]
 புத்ராஜெயா  — ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையம் Rapid_KL_Logo
நுழைவாயில் இலக்கு தோற்றம்
A வடக்கு பகுதி ஊனமுற்றவர் அணுகல்
ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) ஜிஞ்சாங் (→) கெப்போங் தொழில்துறை பகுதி (→) வடக்கு ஜிஞ்சாங்
B தெற்கு பகுதி ஊனமுற்றவர் அணுகல் பேருந்து போக்குவரத்து
ஊட்டி பேருந்து நிறுத்தம் (→) வாடகை தனியார் வாகனங்கள் நிறுத்தம் (→) எனஸ்தா கெப்போங் குடியிருப்பு வீடுகள் (→) ஜிஞ்சாங் எம்ஆர்டி பேருந்து நிலையம்

பேருந்து சேவைகள்

[தொகு]
பேருந்து தொடக்கம் இலக்கு பயணவழி இணைப்பு
T117   PY11  ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் B தாமான் செரி சிகாம்புட் 1/32A சாலை; 5/32A சாலை; 4/40 சாலை; மர்காசுதுவா சாலை; சிகாம்புட் புறவழிச்சாலை முடிவிடம்
GOKL 13   PY11  ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலைய நுழைவாயில் B மெட்ராட் கண்காட்சி மாநாட்டு மையம் 1/32A சாலை; 5/32A சாலை; 4/40 சாலை; சிகாம்புட் புறவழிச்சாலை
 KA05  சிகாம்புட் கொமுட்டர் நிலையம்; சிகாம்புட் சாலை; பெர்சியாரான் டூத்தாமாஸ்; கூட்டரசுபிரதேச பள்ளிவாசல்
முடிவிடம்

காட்சியகம்

[தொகு]

ஜிஞ்சாங் எம்ஆர்டி நிலையக் காட்சிப் படங்கள் (2022)

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Wahab, Farid (16 June 2022). "First Putrajaya MRT stretch opens today". The Star. https://www.thestar.com.my/metro/metro-news/2022/06/16/first-putrajaya-mrt-stretch-opens-today. 
  2. Wahab, Farid (16 June 2022). "First Putrajaya MRT stretch opens today". The Star. https://www.thestar.com.my/metro/metro-news/2022/06/16/first-putrajaya-mrt-stretch-opens-today. 
  3. "MRT Putrajaya Line Phase 1 | ONG&ONG". Archello. Retrieved 2025-08-27.
  4. "Suncon bags RM661m new jobs". The Malaysia Reserve (in ஆங்கிலம்). 3 April 2017. Retrieved 29 November 2022.
  5. "Awarded Contracts for MRT Putrajaya Line". mymrt.com.my (in ஆங்கிலம்). Malaysia: MRT Corp. Retrieved 29 November 2022.

வெளி இணைப்புகள்

[தொகு]