ஜிகேர்சினுசிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜிகேர்சினுசிடே
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
துணைத்தொகுதி: ஓடுடைய கணுக்காலி
வகுப்பு: மலக்கோசிடுரக்கா
வரிசை: பத்துக்காலிகள்
உள்வரிசை: பிராக்கியூரா
குடும்பம்: ஜிகேர்சினுசிடே
பேரினம்

பேரினத்தை காண்க

ஜிகேர்சினுசிடே (Gecarcinucidae) நன்னீர் நண்டுகளின் குடும்பம் ஆகும்.[1] பாராதெல்பூசிடே (Parathelphusidae) குடும்பம் தற்போது ஜிகேர்சினுசிடேவுக்குள் பாராதெல்பூசினே என்ற துணைக் குடும்பத்தின் தரத்திற்குத் தரம் தாழ்த்தப்பட்டுள்ளது.[2] "குடும்பம்" பாராதெல்பூசிடே இப்போது ஒரு இளநிலையில் ஒத்ததாக உயிரலகாக கருதப்படுகிறது.[3]

வகைப்பாட்டியல்[தொகு]

பழங்கால கோண்ட்வானா பிறப்பிடமாக இல்லாவிட்டாலும் (இன்சுலார் இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படும் பிற பரம்பரைகளைப் போலல்லாமல்) பேலியோஜினில் ஒரு தீவுக் கண்டமாக இருந்தபோது, இந்தியத் துணைக்கண்டத்தில் ஜிகேர்சினுசிடே தோன்றியதாகக் கருதப்படுகிறது. தென்கிழக்கு ஆசிய மூதாதையர்களிடமிருந்து ஜிகேர்சினுசிடே தோன்றியதாக வேறுபாடு மதிப்பீடுகள் குறிப்பிடுகின்றன. இது இந்தியா ஆசியாவுடன் இணைவதற்கு முன்பு, மத்திய இயோசீன் காலத்தில் இந்தியாவிற்குப் பரவியது. இரு பிராந்தியங்களுக்கிடையில் உயிரியல் பரிமாற்றத்தை அனுமதிக்கும் வகையில் இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்கு அருகில் சென்றதால் இது நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது. ஜிகேர்சினுசிடே ஒரு நன்னீர் வாழ் குழுவாக இருப்பதால், கடல் வாழ்விடங்கள் வழியாகப் பரவ முடியாது. இது இந்தியாவிற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான இயோசின் தற்காலிக தரைப்பாலங்கள் உருவாகியிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது. இந்தியா-ஆசியா தட்டு மோதலைத் தொடர்ந்து, ஜிகேர்சினுசிடே மீண்டும் ஆசியாவின் பிரதான நிலப்பரப்பில் பரவியிருக்கலாம்.[4]

ஜிகேர்சினுசிடே, பொட்டாமோயிடேயின் சகோதர குழுவாகக் கருதப்படுகிறது (பொடாமிடே மற்றும் பொடாமோனாடிடேஐ உள்ளடக்கிய மீப்பெரும் குடும்பம்).[4]

பேரினங்கள்[தொகு]

  • அட்லீனா பாட், 1969
  • அராக்னோதெல்புசா என்ஜி, 1991
  • ஆஸ்ட்ரோதெல்பூசா பாட், 1969
  • பகூசா Ng, 1995
  • பால்சியாதெல்பூசா பாட், 1969
  • பரதா பாஹிர் & யோ, 2007
  • பாரிடெல்பூசா அல்காக், 1909
  • சிலோன்தெல்பூசா பாட், 1969
  • கிளினோதெல்புசா என்ஜி & டே, 2001
  • கொக்குசா தேன் & என்ஜி, 1998
  • குரோதெல்புசா என்ஜி, 1990
  • சிலிண்ட்ரோடெல்பூசா அல்காக், 1909
  • எசன்தெல்புசா நயினார், 1994
  • ஜிகார்சினசு மில்னே எட்வர்டுசு, 1844
  • ஜீல்விங்கியா பாட், 1974
  • கீதுசா என்ஜி, 1989
  • காடியானா பதி & சர்மா, 2014
  • குளோபிடெல்பூசா அல்காக், 1909
  • குபர்னடோரியானா பாட், 1970
  • கினோதுசா இயோ & என்ஜி, 2010
  • கெட்ரோதெல்பூசா என்ஜி & லிம், 1986
  • ஹோல்துயிசானா பாட், 1969
  • இங்க்லெதெல்புசா பாட், 1970
  • இர்மென்கார்டியா பாட், 1969
  • கனி குமார், ராஜ் & என்ஜி, 2017
  • லமெல்லா பாகிர் & யோ, 2007
  • லெபிடோப்தெல்புசா கோலோசி, 1920
  • லியோடெல்பூசா அல்காக், 1909
  • மகதா எங் & டே, 2001
  • மைனிஷியா பாட், 1969
  • மேடெல்லியாதெல்பூசா பாட், 1969
  • மெக்காங்தெல்பூசா நையானெட்ர், 1985
  • மிக்மாதெல்பூசா சியா & என்ஜி, 2006
  • நாடிலோதெல்புசா பால்சு, 1933
  • நியாசதெல்புசா என்ஜி, 1991
  • ஓசியோடெல்பூசா முல்லர், 1887
  • பரதெல்பூசா எச். மில்னே எட்வர்ட்ஸ், 1853
  • பாஸ்டில்லா என்ஜி & டே, 2001
  • பெர்பிரின்கியா பாட், 1969
  • பெரிதெல்புசா மேன், 1899
  • பிரிகோடெல்பூசா அல்காக், 1909
  • பிலார்டா பாஹிர் & இயோ, 2007
  • ரூக்ஸானா பாட், 1969
  • சலங்கதெல்புசா பாட், 1968
  • சர்டோரியானா பாட், 1969
  • சயாமியா நயினார், 1994
  • செண்ட்லேரியா பாட், 1969
  • சியாம்தெல்பூசா பாட், 1968
  • ஸ்னாஹா பாகிர் & யோ, 2007
  • சோதியானா இயோ & என்ஜி, 2012
  • சோமன்னியாதெல்பூசா பாட், 1968
  • ஸ்பிரலோதெல்புசா பாட், 1968
  • ஸ்டைகோதெல்பூசா என்ஜி, 1989
  • சுண்டதெல்பூசா பாட், 1969
  • சின்ட்ரிப்சா சியா & என்ஜி, 2006
  • தெரதெல்பூசா என்ஜி, 1989
  • தக்சிந்தெல்புசா என்ஜி & நையநேத்ர், 1993
  • தெல்புசுலா பாட், 1969
  • தோர்கூசா என்ஜி, 1997
  • திருவாங்கோரியானா பாட், 1969
  • வன்னி பாகிர் & யோ, 2007
  • வேலா பாகிர் & யோ, 2007 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிகேர்சினுசிடே&oldid=3596034" இருந்து மீள்விக்கப்பட்டது