உள்ளடக்கத்துக்குச் செல்

ஜிஆர்எக்சு 810

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜிஆர்எக்சு 80 (GRX 810) என்பது தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பினால் கண்டறியப்பட்டுள்ள ஒரு கலப்புலோகம் அல்லது உலோகக்கவலவை ஆகும்.[1] இந்தக் கலப்புலோகமானது நிக்கல், கோபால்ட்டு மற்றும் குரோமியம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு புதிய கலப்புலோக வடிவமைக்கும் மாதிரி முன்னெடுக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்தி ஆக்சைடு விரவுகை முறையினால் வலுவாக்கப்பட்டதாகும். இக்கலப்புலோகம் 1093° செல்சியசு வெப்பநிலை வரை தாங்கக்கூடியதாகும். இவ்விதக் கலப்புலோகமானது நிக்கலை அடிப்படையாகக் கொண்ட சிறப்பு வகை கலப்புலே்ாகங்களை விட (Ni based Super alloy) மிக அதிக வெப்பநிலையைத் தாங்கும் திறனைக் கொண்டவையாக உள்ளது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smith, Timothy M.; Kantzos, Christopher A.; Zarkevich, Nikolai A.; Harder, Bryan J.; Heczko, Milan; Gradl, Paul R.; Thompson, Aaron C.; Mills, Michael J. et al. (2023-05). "A 3D printable alloy designed for extreme environments" (in en). Nature 617 (7961): 513–518. doi:10.1038/s41586-023-05893-0. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. https://www.nature.com/articles/s41586-023-05893-0.
  2. Smith, Tim (2022-08-31) (in en). GRX-810: NASA High Temperature Alloy Development for Additive Manufacturing. https://ntrs.nasa.gov/citations/20220013032.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிஆர்எக்சு_810&oldid=4270410" இலிருந்து மீள்விக்கப்பட்டது