ஜாஸ்மா ஓடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜஸ்மா ஓடன் (ஜாஸ்மா ஓடன்) என்பது இடைக்காலத்திய குஜராத்தில் இருந்து வழங்கப்பட்டுவரும் ஒரு நாட்டுப்புற தெய்வம் ஆகும். ஜஸ்மா ஓடன் என்ற பெண், சோலாங்கிப் பேரரசைச் சேர்ந்த மன்னன் செயசிம்ம சித்தராசனால் தன் கணவன் கொல்லப்பட்டதால் உடன்கட்டை ஏறினார்.

புராணம்[தொகு]

ஜாஸ்மா குளம் தோண்டும் தொழிலாளியான ரூடாவின் மனைவியாவார். அவர்கள் குஜராத், கத்தியவார் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் உள்ள ஒட் ராஜ்புத பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். [1] அவர்கள் அன்ஹில்வாட் பதானில்,ஒரு சஹஸ்ரலிங்க குளம், ஒரு ஏரி மற்றும் லிங்கத்துடன் கூடிய ஆயிரம் சன்னதிகள் ஆகியவற்றைத் தோண்டுவதற்காக இருந்தனர். சோலாங்கிப் பேரரசைச் அரசரானசெயசிம்ம சித்தராசன்ஜாஸ்மாவின் அழகில் மயங்கி, திருமணம் செய்துகொள்ளுமாய் முன்மொழிந்தார். அவர் அவளை குஜராத் ராணியாக்க முன்வந்தார். ஆனால் அதை ஜஸ்மா மறுத்துவிட்டார். ஜெய்சிம்மன் ஜஸ்மாவின் கணவனைக் கொன்றான். அவர் தன் மானத்தைக் காக்க, உடன்கட்டை ஏறி, சதியைச் செய்தார். அவர்டைய சாபத்தால் சஹஸ்ரலிங்கத் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் போனது. சித்தராசனின் வன்சம் வழி குசராத்திற்கு வாரிசு இல்லாமல் போனது.

12 ஆம் நூற்றாண்டில் ஓத் ராஜ்புத பழங்குடியினரால் ஜஸ்மாதேவி கோயில் கட்டப்பட்டது. இது குஜராத்தின் பதானில் சஹஸ்ரலிங்கத் தொட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.

பிரசித்தி பெற்ற கலாச்சாரம்[தொகு]

இந்த குசராத்திய பழங்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாட்டுப்புற நாடக வடிவமான பாவாய் வேஷா, பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. [2] [3] இது 1982 இல் சாந்தா காந்தி என்பவரால் ஜாஸ்மா ஓடன் என்ற மேடை நிகழ்ச்சிக்காக மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டது [4] 1926 ஆம் ஆண்டு இந்த நாட்டுப்புற தெய்வத்தைப் பற்றிய இந்திய மௌனத் திரைப்படமான சதி ஜாஸ்மா ஹோமி மாஸ்டர் என்பவரால் உருவாக்கப்பட்டது. இதில் கோஹர் மாமாஜிவாலா மற்றும் கலீல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். [5] சதி ஜஸ்மா ஓடன் என்ற குஜராத்தி திரைப்படம் 1976 இல் சந்திரகாந்த் சங்கனியால் இயக்கப்பட்டது. இப்படத்தின் பாடல்களை காந்தி அசோக் எழுத, மகேஷ் நரேஷ் இசையமைத்துள்ளார். [5]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாஸ்மா_ஓடன்&oldid=3664059" இலிருந்து மீள்விக்கப்பட்டது