உள்ளடக்கத்துக்குச் செல்

ஜால் மாக்சி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜால் மாக்சி மாவட்டம்
ضلع جھل مگسی
மாவட்டம்
ஜால் மாக்சி மாவட்டத்தின் அகலப்பரப்புக் காட்சி
ஜால் மாக்சி மாவட்டத்தின் அகலப்பரப்புக் காட்சி
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜால் மாக்சி மாவட்டத்தின் அமைவிடம்
பாக்கித்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஜால் மாக்சி மாவட்டத்தின் அமைவிடம்
Country பாக்கித்தான்
மாகாணம் பலூசிஸ்தான்
கோட்டம்நசீராபாத்
தலைமையிடம்காந்தாவா
அரசு
  வகைமாவட்டம் (நிரவாகி - துணை ஆணையாளர்)
பரப்பளவு
  மாவட்டம்3,615 km2 (1,396 sq mi)
மக்கள்தொகை
 (2023)
  மாவட்டம்2,03,368
  அடர்த்தி56.3/km2 (146/sq mi)
  நகர்ப்புறம்
24,130
  நாட்டுப்புறம்
1,79,238
சராசரி எழுத்தறிவு
  எழுத்தறிவு
  • மொத்தம்:
    (30.14%)
  • ஆண்:
    (37.89%)
  • பெண்:
    (22.09%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
வருவாய் வட்ட்டங்கள்2

ஜால் மாக்சி மாவட்டம் (Jhal Magsi District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பலூசிஸ்தான் மாகாணத்தின் 37 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2][3] மத்திய பலூசிஸ்தானில் அமைந்த இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் காந்தாவா நகரம் ஆகும். மற்றொரு நகரம் ஜால் மாக்சி ஆகும். காந்தாவா நகரம் மாகாணத் தலைநகரான குவெட்டாவிற்கு தென்கிழக்கில் 343.4 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கில் 1,168. கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

ஜால் மாக்சி மாவட்டத்தின் வடக்கில் சிபி மாவட்டம், கிழக்கில் உஸ்தா முகமது மாவட்டம் & சிந்து மாகாணம், தெற்கில் குஸ்தர் மாவட்டம் மற்றும் மேற்கில் கச்சி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 30,953 குடியிருப்புகள் கொண்ட ஜால் மாக்சி மாவட்ட மக்கள் தொகை 2, 03,368. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 103.49% ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 30.14% ஆகும். [4][5]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 73,676 (36.23%) ஆக உள்ளனர்.[6] நகர்புறங்களில் 24,130 (11.87%) மக்கள் வாழ்கின்றனர்.[4]

சமயம்

[தொகு]

ஜால் மாக்சி மாவட்டத்தில் இசுலாம் 99.19%, இந்து சமயம் 0.80% மற்றும் பிற சமயங்கள் 0.01% மக்கள் பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் பலூச்சி மொழியை 75.46%, சிந்தி மொழியை 16.33%, சராய்கி மொழியை 5.76% மற்றும் பிராகுயி மொழியை 2.09% மக்கள் பேசுகின்றனர்.[7]

மாவட்ட நிர்வாகம்

[தொகு]
பலூசிஸ்தான் மாகாணத்தின் மாவட்டங்கள்

ஜால் மாக்சி மாவட்டம் 3 வருவாய் வட்டங்களையும், 15 ஒன்றியக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வருவாய் வட்டம் பரப்பளவு

(km²)[8]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[9]

ஒன்றியக் குழுக்கள்
காந்தவா வட்டம் 1,344 71,230 53.00 36.35%
  • காந்தவா
  • காரி
  • பத்ரி
ஜால் மாக்சி வட்டம் 1,679 116,528 69.40 26.82%
  • ஜால் மாக்சி
  • ஹதித்யாரி
  • பஞ்சூக்
  • கோட் மாக்சி
  • பாரிஜா
  • சிந்தூர்
  • சஃப்ரானி
  • சைபாபாத்
  • அக்பரபாத்
மிர்பூர் வட்டம் 592 15,610 26.37 24.86%
  • மிர்பூர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  2. PCO 2000, ப. 6.
  3. Ansari, Sheikh Sadik Ali Sher Ali (1901). The Musalman Races found in Sind, Baluchistan and Afghanistan (in English). pp. 61–113.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  4. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census: Population by Mother Tongue, Sex and Rural/Urban" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. https://www.pbs.gov.pk/sites/default/files/population/2023/tables/balochistan/dcr/table_11.pdf [bare URL PDF]
  8. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
  9. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023, BALOCHISTAN" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜால்_மாக்சி_மாவட்டம்&oldid=4307118" இலிருந்து மீள்விக்கப்பட்டது