உள்ளடக்கத்துக்குச் செல்

ஜால்னா

ஆள்கூறுகள்: 19°50′28″N 75°53′11″E / 19.8410°N 75.8864°E / 19.8410; 75.8864
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜால்னா
நகரம்
ஜால்னா is located in மகாராட்டிரம்
ஜால்னா
ஜால்னா
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் ஜால்னா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°50′28″N 75°53′11″E / 19.8410°N 75.8864°E / 19.8410; 75.8864
நாடு India
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்ஜால்னா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜால்னா நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்81.6 km2 (31.5 sq mi)
ஏற்றம்508 m (1,667 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,85,577
 • அடர்த்தி3,500/km2 (9,100/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
431203, 431213
தொலைபேசி குறியீடு எண்02482
வாகனப் பதிவுMH-21

ஜால்னா (Jalna) ஒலிப்பு, இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் நடுவில் அமைந்த மராத்வாடா பிரதேசத்தில் உள்ள ஜால்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். ஜால்னா நகரம் குண்டலிகா ஆற்றின் கரையில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 508 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 54 வார்டுகளும், 53,730 வீடுகளும் கொண்ட ஜால்னா நகரத்தின் மக்கள் தொகை 2,85,577 ஆகும். அதில் ஆண்கள் 1,47,092 மற்றும் பெண்கள் 1,38,485 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.6% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.67% ஆகவுள்ளது.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 60.73%, இசுலாமியர் 27.34%, பௌத்தர்கள் 6.75%, சமணர்கள் 1.67%, சீக்கியர்கள் 0.26%, கிறித்தவர்கள் 2.81% மற்றும் பிறர் 0.43% ஆகவுள்ளனர்.[3][4]

பொருளாதாரம்[தொகு]

பருத்தி ஆலைகள், பருத்தித் துணி நெசவு ஆலைகள், பருத்தியிலிருந்து கொட்டை பிரிக்கும் ஆலைகள் மற்றும் பருத்திக் கொட்டை எண்ணெய் பிழியும் ஆலைகளுக்கு ஜால்னா நகரம் பெயர் பெற்றது.

போக்குவரத்து[தொகு]

ஜால்னா தொடருந்து நிலையம்[5]மாநிலத்தின் மும்பை, நாக்பூர், புனே போன்ற பிற பகுதிகளை இணைக்கிறது. [6]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜால்னா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29
(84)
32
(90)
36
(97)
39
(102)
39
(102)
34
(93)
30
(86)
29
(84)
30
(86)
32
(90)
30
(86)
29
(84)
32.4
(90.4)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
14
(57)
19
(66)
23
(73)
25
(77)
24
(75)
22
(72)
22
(72)
21
(70)
19
(66)
15
(59)
12
(54)
18.8
(65.9)
பொழிவு mm (inches) 1.8
(0.071)
1.1
(0.043)
6.6
(0.26)
3.1
(0.122)
28.6
(1.126)
150.1
(5.909)
152.5
(6.004)
182.3
(7.177)
156.8
(6.173)
75.2
(2.961)
13
(0.51)
12.5
(0.492)
783.6
(30.85)
ஆதாரம்: Jalna Weather

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census Handbook – Jalna" (PDF). Census of India. The Registrar General & Census Commissioner. 2011. p. 22. Archived from the original (PDF) on 14 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 May 2020.
  2. "Maps, Weather, and Airports for Jalna, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 8 April 2017.
  3. Jalna City Population - Jalna, Maharashtra
  4. Jalna City Population 2011
  5. Jalna railway station
  6. "Mumbai-Nagpur Bullet Train Project: Overview". 13 February 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜால்னா&oldid=3863579" இலிருந்து மீள்விக்கப்பட்டது