உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் வில்லியம் ரஸ்ஸல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் வில்லியம் ரஸ்ஸல்
பிறப்பு(1867-04-10)10 ஏப்ரல் 1867
லுர்கன், கவுண்டி அர்மக், அயர்லாந்து
இறப்பு17 சூலை 1935(1935-07-17) (அகவை 68)
போர்ன்மௌத், இங்கிலாந்து
மற்ற பெயர்கள்Æ, AE, A.E.
கல்விரெவரன்ட் எட்வர்ட் பவர் பள்ளி, 3 ஹாரிங்டன் தெரு, டப்லின்
படித்த கல்வி நிறுவனங்கள்மெட்ரோபாலிட்டன் கலைப்பள்ளி
பணிஎழுத்தாளர், கவிஞர், புத்தக ஆசிரியர், விமர்சகர், ஓவியர்
அறியப்படுவதுகவிதை, ஓவியம்

ஜார்ஜ் வில்லியம் ரஸ்ஸல் (George William Russell) (ஏப்ரல் 10,1867-சூலை 17,1935) என்பவர் ஒரு ஐரிஷ் எழுத்தாளர், தொகுப்பாசிரியர், விமர்சகர், கவிஞர், ஓவியர் மற்றும் ஐரிஷ் தேசியவாதி ஆவார். இவர் பெரும்பாலும் AE அல்லது A. E. என்ற புனைப்பெயருடன் எழுதி வந்தார். இவர் மாயமந்திரவாதம் குறித்த எழுத்தாளராகவும், பல ஆண்டுகளாக டப்ளினில் சந்தித்த பிரம்மஞானசபை பக்தர்களின் குழுவில் ஒரு மைய நபராகவும் இருந்தார்.

தொடக்க கால வாழ்க்கை

[தொகு]

அர்மக் கவுண்டியின் லுர்கனில் தாமஸ் ரஸ்ஸல் மற்றும் மேரி ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் இரண்டாவது மகனாக ரஸ்ஸல் பிறந்தார். ஒரு சிறு விவசாயியின் மகனான இவரின் தந்தை, தாமஸ் பெல் அண்ட் நிறுவனத்தில் ஒரு பணியாளராக ஆனார். ஜார்ஜ் பதினொரு வயதாக இருந்தபோது, அவரின் தந்தைக்கு ஒரு புதிய வேலை வாய்ப்பு கிடைத்து டப்ளினுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. 18 வயதேயான இவரது அன்பான சகோதரி மேரியின் மரணத் துயர் இவரை மிகவும் பாதித்தது. இப்பாதிப்பிலிருந்து விடுபட இவருக்கு நீண்ட காலம் ஆனது.

இவர் ரத்மெய்ன்ஸ் பள்ளி, மெட்ரோபொலிட்டன் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் ஆகிய நிறுவனங்களில் கல்வி பயின்றார், அங்கு இவர் தனது வாழ்நாள் முழுவதும், சில நேரங்களில் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், டபிள்யூ. பி. யேட்ஸுடன் நட்பு கொண்டார்.[1] இவர் 1880 களில், 3, அப்பர் எலி பிளேஸில் உள்ள பிரம்மஞானசபையின் விடுதியில் வசித்து வந்தார், வில்லியம் கிர்க்பாட்ரிக் மாகியின் சகோதரர் எச். எம். மாகியுடன் அறைகளைப் பகிர்ந்து கொண்டார்.[2]

ரஸ்ஸல் ஒரு துணி வணிகரிடம் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார், பின்னர் 1894 ஆம் ஆண்டில் ஹொரேஸ் பிளங்கெட் தொடங்கிய விவசாய கூட்டுறவு சங்கமான ஐரிஷ் வேளாண் அமைப்பு சங்கத்தில் பல ஆண்டுகள் பணியாற்றினார். 1897 ஆம் ஆண்டில், பிளங்கெட்டுக்கு ஒரு திறமையான அமைப்பாளர் தேவைப்பட்டார், அப்போது டபிள்யூ. பி. யேட்ஸ் ரஸ்ஸலை பரிந்துரைத்தார், ரஸ்ஸல் ஐ. ஏ. ஓ. எஸ் இன் உதவி செயலாளரானார்.

குடும்பம்

[தொகு]

1898 ஆம் ஆண்டில், இவர் வயலட் நார்த்தை மணந்தார், இத்தம்பதியினருக்கு பிரையன் மற்றும் டயர்முயிட் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். மூன்றாவதாகப் பிறந்த ஆண் குழந்தை பிறந்த உடனேயே இறந்தது. பிற்காலங்களில் ரஸ்ஸலின் நெருங்கிய நண்பராக இருந்த ஃபிராங்க் ஓ 'கானர், “ரஸ்ஸலின் குடும்ப வாழ்க்கை அவரை நன்கு அறிந்தவர்களுக்கு கூட மர்மமான ஒன்றாக இருந்தது” என்று குறிப்பிட்டார். ஓ' கான்னர் ரஸ்ஸல் ஒருபோதும் தனது மனைவியைப் பற்றி பேசியதில்லை என்றும் அவரது மகன்களுடன் முரண்படுவதாகத் தோன்றியதாகவும் கூறியிருந்தார்.[3] இவரது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருந்தது என்பதாக வதந்தி பரவியிருந்தது. 1932-ஆம் ஆண்டில் வயலட் இறந்தபோது அது ரஸ்ஸலுக்கு மிகப்பெரிய துயராக அமைந்தது என்பதை அவரது நண்பர்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனர்.[3]

டப்ளினில் உள்ள 84 மெரியன் சதுக்கத்தில் உள்ள பலகையில் ரஸ்ஸல் அங்கு பணிபுரிந்ததைத் தெரிவிக்கும் பலகை

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Boylan, Henry (1998). A Dictionary of Irish Biography (3rd ed.). Gill & Macmillan. p. 384. ISBN 0-7171-2507-6.
  2. ↑ Ross, David A. (2009). "Eglinton, John". Critical Companion to William Butler Yeats: A Literary Reference to His Life. pp. 461-462.
  3. 1 2 O'Connor (1971).
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_வில்லியம்_ரஸ்ஸல்&oldid=4461975" இலிருந்து மீள்விக்கப்பட்டது