ஜார்ஜ் வில்லியம் கில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் வில்லியம் கில்
ஜார்ஜ் வில்லியம் கில்லின் உருவப்படம்
ஜார்ஜ் வில்லியம் கில்
பிறப்புமார்ச்சு 3, 1838(1838-03-03)
நியூ யார்க் மாநகரம், ஐக்கிய அமெரிக்கா.
இறப்புஏப்ரல் 16, 1914(1914-04-16) (அகவை 76)
வெசுட்டு நியாக், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா.
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல், கணிதவியல்
பணியிடங்கள்கொலம்பியா பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்க நாவாய் வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்உருட்செர்சு பல்கலைக்கழகம்
Academic advisorsதியோடோர் சுட்டிராங்கு
அறியப்படுவது
  • கில் வகைநுண் சமன்பாடு
  • கில் கோளம்
  • நிலாக் கோட்பாடு
தாக்கம் 
செலுத்தியோர்
சார்லசு இயூகின் தெலவுனே, பீட்டர் ஆந்திரியாசு ஏன்சன்
பின்பற்றுவோர்என்றி பாயின்கேர், ஜார்ஜ் டார்வின்
விருதுகள்

ஜார்ஜ் வில்லியம் கில் (George William Hill) (மார்ச்சு 3, 1838 – ஏப்பிரல் 16, 1914) ஓர் அமெரிக்க வானியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் பொது அறிவியல் சமுதாயத்துடன் இணையாமல் விலகித் தனித்தே பணிபுரிகிறார், இவர் வான்கோள இயக்கவியலுக்கும் எளிய வகைநுண் கணிதக் கோட்பாட்டுக்கும் பல பங்களிப்புகளைச் (பெறுமதிகளைச்) செய்துள்ளார். இவரது பங்களிப்புகளின் முதன்மையை 1905 இல் பாயின்கேர் பாராட்டியுள்ளார். இவருக்கு 1909 இல் அரசு கழகத்தின் கோப்ளே பதக்கம், "கணித வானியல் ஆய்வுகளுக்காக", வழங்கப்பட்டது,இன்று இவர் கில் வகைநுண் சமன்பாட்டுக்காக நினைவுகூரப்படுகிறார்.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் நியூயார்க் மாநகரில் பிறந்தார். இவரது பெற்றோர் ஓவியரும் பொறிப்புப் பணியாளருமாகிய ஜான் வில்லியம் கில் ஆவார்; இவரது தாயார் காத்தரைன் சுமித் ஆவார். இவர்த ன எட்டாம் அகவையில் நியூ யார்க்கின் வெசுட்டு நியாக் பகுதிக்குக் குடும்பத்தோடு இடம்பெயர்ந்துள்ளார். இவர் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்ததும் உருட்செர்சு பல்கலைக்கழகத்தின் உருட்செர்சு கல்லுரியில் சேர்ந்து கல்வி பயிலும்போது இவருக்கு கணிதத்தில் ஆர்வம் முகிழ்த்துள்ளது.

இவர் உருட்செர்சில் படிக்கும்போது இவருக்கு பேரா. தியோடோர் சுட்டிராங்கின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. சுட்டிராங்கு அமெரிக்க முன்னோடி கணிதவியலாளரும் வானியலாளருமான நாத்தேனியேல் போடிட்சின் நண்பர் ஆவார்.. சுட்டிராங்கு கில்லுக்கு சில்வெசுத்திரே இலாக்கிரோயிக்சு, அதிரியான் மேரி இலெகெந்திரே இருவரின் பெயர்பெற்ற கணிதப் பகுப்பாய்வு நூல்களையும் யோசப்பு உலூயிசு இலாகிரேஞ்சுவும்பியேர் சைமன் இலாப்பிளாசும் சிமேயந்தெனிசு பாய்சானும் கசுத்தாவ் தெ பொந்தேகவுலண்ட்டும் எழுதிய கணித இயக்கவியல், கணித வானியல் ஆகிய நூல்களயும் படிக்க ஊக்கமூட்டியுள்ளார்.

கில் 1860 களின் தொடக்கத்தில், சார்லசு இயூகின் தெலவுனேவும் பீட்டர் ஆந்திரியாசு ஏன்சனும் எழுதிய நிலாக் கோட்பாட்டுப் பணிகளை ஆர்வமுடன் படித்தார். இப்படிப்பு கில்லின் பின்வந்த ஆய்வுகளுக்கு ஆர்வமும் ஊக்கமும் ததுள்ளது. ஜான் தானியேல் இரங்கிள் 1861 இல் இவரை கேம்பிரிட்ஜிலும் மசாசூசட்சிலும் உள்ள அமெரிக்க அரசு நாவாய் வான்காணக வழிகாட்டி அலுவலகத்தில்பணிபுரிய அழைத்தார்.[1]

உருட்செர்சு கல்லூரி 1862 இல் முதுகலை பட்டத்தை கில்லுக்கு வழங்கியது. கில் சில காலம் கேம்பிரிட்ஜில் இருந்துவிட்டுப் பிறகு வாசிங்டன் டி. சி. இருந்தார். என்றாலும், இவர் வெசுட்டு நியாக்கில் உள்ள குடும்பப் பண்ணையிலே கணிதவியலில் பணிசெய்யவே விரும்பி 1892 ஓய்வும் பெற்றார்.

கணித வானியற்பணி[தொகு]

கில்லின் முதிர்நிலை ஆர்வு முப்பொருள் சிக்கல் சார்ந்த கணிதவியலில் கவனம் குவித்தது,[2] பிறகு இவர் நாற்பொருள் சிக்கல் சார்ந்த ஆய்விலும் சூரியக் கோள்களின் வட்டணைகளைக் கண்க்கிடவும் புவியின் நிலா வட்டணையைக் கணக்கிடவும் ஈடுபட்டார். இவர் உயர்பொருண்மை வான்பொருட்களின் தாக்கமுள்ள ஒரு வான்பொருளின் இயக்கத்தை ஆய்வு செய்ய, சுழி விரைவு(திசைவேக) மேற்பரப்பு எனும் கருத்தினத்தை அறிமுகப்படுத்தினார். இவ்வகை வான்பொருள் மேற்பரப்பைச் சூழ்ந்த வெளி இப்போது கில் கோளம் என வழங்குகிறது. இந்த கோளம், குறிப்பிட்ட வாபொருளைச் சுற்றியமைந்த, துணைக்கோள்களை கைப்பற்றவல்ல கோளப்பகுதியைக் குறிக்கிறது.

இவர் 1878 இல் புவியைச் சுற்றிவரும் நிலாவின் அறுதிலைகளின்(அண்மை, சேய்மை நிலைகளின்) தலையாட்டச் சிக்கலுக்கான தீர்வை முதன்முதலாக முடித்துவைத்தார். இது நிலாக் கோட்பாட்டில் அய்சக் நியூட்டனின் இயற்கை மெய்யியலின் நெறிமுறைகள் எனும் நூல் 1687 இல் எழுப்பிய அரிய சிக்கலாகும். of 1687.[3] இத்தீர்வு இன்று இயற்பியலிலும் கணிதவியலிலும் "கில் வகைநுண் சமன்பாடு" என வழங்கும் சமன்பாட்டையும் அறிமுகப்படுத்தியது. மேலும், இது செவ்வியல் புளோக்குவெட் கோட்பாட்டையும் ஈந்தது .

தாக்கமும் ஏற்பும்[தொகு]

கில்லின் பணிகள் பன்னாட்டு அறிவியல் சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்தன. 1894 இல் இவர் அமெரிக்கக் கணிதவியல் கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் 1898 முதல் 1901 வரை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றினார். என்றாலும் இவர்பால் சில மாணவர்கள் ஈர்ப்புற்றதால் அறுதியாக, தன் சம்பளத்தைப் பல்கலைக்கழகத்திடம் திருப்பித் தந்துவிட்டு, கல்வியகங்களில் பணி செய்வதைத் தவிர்த்து, தனியாக வெசுட்டு நியாக்கில் உள்ள தன் வீட்டில் பணிபுரியலானார்.[4]

கில்லின் ஆய்வுப்பணித் திரட்டை 1905-07 களில் கார்னிகி அறிவியல் நிறுவனம் பெயர் பெற்ற பிரெஞ்சு கணிதவியலாளரும் கோட்பாட்டு இயற்பியலாளருமான என்றி பாயின்கேரின் 12 பக்க அறிமுகத்துடன் வெளியிட்டது. இதில் 1878 ஆம் ஆண்டைய கட்டுரையான நிலாக் கோட்பாட்டு ஆய்வுகள் அதுவரை வான்கோள இயக்கவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் சுருக்கமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது என விளக்குகிறார். [3] கல்வியியல் சமுதாயத்தை விட்டுப் பிரிந்து தனியாக கில் பணிசெய்வதைப் ப்ற்றி பாயின்கேர் பினருமாறு பாராட்டுகிறார்.

இவரது பேய்த்தனமான பணி ஈடுபாடு அறிவியல் சூழலுக்கான மகிழ்ச்சிதரும் வடிகாலாகியது. ஏனெனில், இந்த வெறிதான் தன் அறிவாண்மை வாய்ந்த ஆய்வுகளைப் பொறுமையோடும் முனைப்பாகவும் முடிக்கவைத்தது.[3]

இவர் 1902 இல் அரசு கழக அயல்நாட்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் 1908 இல் எடின்பர்கு அரசு வானியல் கழக உறுப்பினர் ஆனார். இவர் பெல்ஜியம், நார்வே, சுவீடன் அறிவியல் கல்விக்கழகங்களில் முறையே 1909 இலும் 1910 இலும் (1913 இலும் உறுப்பினர் ஆனார். இவர் 1914 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினர் ஆனார்.[5] இவர் கடைசி வாழ்நாளில் உடல் நலிவோடே காலம் கழித்தார். இவர் 1914 இல் வெசுட்டு நியாக்கில் இறந்தார்.இவர் திருமணமும் செய்யவில்லை; இவருக்குக் குழந்தைகளும் இல்லை.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கம் (1887)
  • தாமோயிசெயா பரிசு, பிரான்சு கல்வி நிறுவனம் (1898)
  • கோப்ளி பதக்கம் அரசு கழகம், இலண்டன் (1909)
  • புரூசு பதக்கம், பசிபிக் வானியல் கழகம் (1909)
  • நிலாவின் கில் குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • சிறுகோள் 1642 கில் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.
  • கில் கணித அறிவியல் மையம், புசுச்சு வளாகம், உருட்செர்சு பல்கலைக்கழகம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

நூல்தொகை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]