உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் விட்டெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1878
இறப்பு1926 (47–48 வயதில்)
பணி
கட்டிடங்கள்

ஜார்ஜ் விட்டெட் (George Wittet, 1878-1926) என்பவர் ஒரு இசுகொட்டிய கட்டிடக் கலைஞர் ஆவார். இவர் பெரும்பாலும் பிரித்தானிய இந்தியாவின் பம்பாயில் பணிபுரிந்தார்.

வாழ்கை வரலாறு

[தொகு]
விட்டெட் வடிவமைத்த கராச்சி துறைமுகக் கழக கட்டடம்.

ஜார்ஜ் விட்டெட் 1878 இல் இசுகொட்லாந்தின் பிளேர் அத்தோலில் பிறந்தார். இவர் இசுகொட்லாந்தின் பெர்த்தின் திரு எய்ட்டனிடம் கட்டிடக்கலை பயின்றார். மேலும் இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்பு எடின்பரோ, யார்க் ஆகிய இடங்களில் பணியாற்றினார்.

விட்டெட் 1904 இல் இந்தியாவிற்கு வந்து ஜான் பெக்கின் உதவியாளரானார். பின்னர் மும்பையின் கட்டிடக்கலை ஆலோசகராக இருந்தார். இந்தோ-சராசெனிக் கட்டிடக்கலை பாணியின் பரிணாம வளர்ச்சிக்கும் அதன்பின் அது பிரபலமடைந்ததற்கும் இந்த இருவரும் காரணமாக இருந்தனர்.

மும்பை அரசாங்கத்தின் கட்டிடக் கலை ஆலோசகராக இருந்த விட்டெட், 1917 ஆம் ஆண்டு மே 12 அன்று இந்திய கட்டிடக் கலைஞர் கழகத்தின் முதல் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

விட்டெட் மும்பையின் மிகவும் பிரபலமான அடையாளங்களாக உள்ள சில கட்டிமானங்களை வடிவமைத்தார். இவை பின்வருமாறு: சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம், இந்தியாவின் நுழைவாயில், அறிவியல் நிறுவனம், தோபிதாலாவில் உள்ள சிறிய வழக்குகளுக்கான நீதிமன்றம், வாடியா மகப்பேறு மருத்துவமனை, பாம்பே இல்லம், கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை, கிராண்ட் ஓட்டல், பல்லார்ட் தோட்டத்தில் உள்ள கட்டடங்கள் போன்றவை ஆகும்.

கராச்சியில், கராச்சி துறைமுகப் கழகக் கட்டடத்தை வடிவமைத்தார். [2]

ஜான் பெக்குடன் இணைந்து கட்டிடக்கலையில் இந்தோ சரசனிக் பாணியை உருவாக்கிப் பிரபலப்படுத்தினார். [3]

இவர் 1926 இல் மும்பையில் கடுமையான வயிற்றுப்போக்கால் இறந்தார். இவரது உடல் செவ்ரி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Presidents". Indian Institute of Architects. Archived from the original on 30 July 2012. பார்க்கப்பட்ட நாள் 16 August 2012.
  2. History பரணிடப்பட்டது 31 ஆகத்து 2018 at the வந்தவழி இயந்திரம் KPT official website Retrieved 5 August 2013
  3. "George Wittet". The Mumbai Pages. பார்க்கப்பட்ட நாள் 16 August 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_விட்டெட்&oldid=3683227" இலிருந்து மீள்விக்கப்பட்டது