ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்)
ஜார்ஜ் வாஷிங்டன் | |
---|---|
பிறப்பு | 20 மே 1871 Kortrijk |
இறப்பு | 29 மார்ச்சு 1946 (அகவை 74) நியூ செர்சி |
பணி | வணிகர் |
குழந்தைகள் | George Washington, Jr. |
ஜார்ஜ் கான்ஸ்டன்ட் லூயிஸ் வாஷிங்டன்[I] (1871 மே - மார்ச் 29, 1946) ஒரு அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆங்கிலோ-பெல்ஜிய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர். இவருடைய கண்டுபிடிப்பான ஆரம்ப உடனடி காபி மற்றும் அதை பெரியளவில் உற்பத்தி செய்வதற்கு அவர் நிறுவிய ஜி.வாஷிங்டன் காபி நிறுவனத்திற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
தனது சொந்த இருப்பிடமான பெல்ஜியத்திலிருந்து குடிபெயர்ந்த இவர் 1987 ஆம் ஆண்டு நியூ யோர்க்கை அடைந்தார். அத்துடன் சிறு காலத்துக்கு முன்னதாக மத்திய அமெரிக்காவில் 1906 ஆம் ஆண்டு அல்லது 1907 ஆம் ஆண்டு, உடனடி காபி உற்பத்தி தொடங்குமுன் பல தொழில்நுட்ப துறைகளில் கைதேர்ச்சியடைந்துள்ளார். 1909 ல் அவர் தனது காபி விற்பனை தொடங்கியதுடன் 1910 ல் அதை உற்பத்தி செய்ய நிறுவனம் ஒன்றை நிறுவினார். முதலாம் உலகப் போரின் போது நியூயார்க் மற்றும் நியூ செர்சி நகரங்களை அடித்தளங்களாகக் கொண்டு, அவரது நிறுவனம் முக்கிய இராணுவ வழங்குநராக முன்னேற்றம் அடைந்திருந்தது. அவரது நிறுவனத்தின் உற்பத்திகள் செய்தித்தாள்கள் மற்றும் வானொலி விளம்பரப்படுத்தப்பட்டது. அவரது நிறுவனத்தின் வெற்றியானது வாஷிங்டனை பணக்காரனாக்கியது, புரூக்ளினில் பெரிய ஒரு மாளிகையில் வசித்தார் அதற்கு பின் 1927 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் ஒரு எஸ்டேட்டில் வாழ்ந்தார். அதே ஆண்டு, வரி அதிகாரிகள் மூலம் சர்ச்சைக்கு இலக்காகினர். வாஷிங்டன் திருமணம் முடித்து மூன்று குழந்தைகளுடன் தனது வாழ்க்கையை நடத்தினார்.
வாஷிங்டன் இறப்பதற்கு முன், 1943 ல் வாஷிங்டனின் நிறுவனம் அமெரிக்க வீட்டு உற்பத்திக்கு விற்கப்பட்டது. வாஷிங்டனின் காபி வியாபாரக் குறியானது 1961ல் கைவிடப்பட்டது, என்றாலும் வாஷிங்டனின் பெயர் இன்னும் G. Washington's Seasoning & Broth என்ற பெயரில் விளங்குகிறது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் குடும்பம்
[தொகு]ஜார்ஜ் வாஷிங்டன் பெல்ஜியத்திலுள்ள[1][II] கொர்த்ரிஜ்க் என்ற ஊரில் 1871 ஆம் ஆண்டு, மே மாதம்,[2] ஆங்கில தந்தைக்கும் பெல்ஜியத்தை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தார்.[2][3] மே மாதம் 1918 ஆம் ஆண்டு வாஷிங்டன் அமெரிக்கராகக் கருதப்படும் வரை, அவர் தற்போதைய தேசிய சட்டம் அடிப்படையில் பிரித்தானியராகக் கருதப்பட்டார்.[4] அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (குறைந்தது ஆறுபேர்) அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் குடியேறினர்[1]. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டனுக்கு இவர் உறவினர் என்று சில குறிப்புகளில் கூறப்பட்டாலும் இது தெளிவாக விளக்கப்படவில்லை.[5]
வாஷிங்டன் ஜெர்மனியின் பிரஸ்ஸல்சுக்குச் சென்று வசித்தார். அங்கு அவர் இரசாயனவியல் பட்ட படிப்பை ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[3] அவர் டிசம்பர் மாதம் 1895 ஆண்டு ஏஞ்சலின் செலின் விர்கினியை (அமெரிக்காவில் செலின் தன்னை "லினா" என்று அழைப்பார்) திருமணம் செய்தார். அவரது மனைவியும் பெல்ஜியத்தில் பிறந்தவராவார் (1876).[2][6] 1900 ஆம் ஆண்டின் அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் லினாவின் தந்தை பெல்ஜியத்தைச் சேர்ந்தவர்; தாய் ஆங்கிலேயர் எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.[2] அக்டோபர் 6, 1896 அன்று வாஷிங்டன் கப்பலில் அமெரிக்காவுக்கு ஆண்ட்வெர்ப் பெல்ஜியத்திற்கு வருகை தந்ததாக எல்லிஸ் தீவில் பதிவு செய்யப்பட்டது என்றாலும், 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, அவர்கள் 1897 ஆம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினார்கள் என்று கூறுகிறது[2]. வாஷிங்டன் மற்றும் அவரது மனைவியும் தங்களது மூன்று குழந்தைகளுடன்[2][7] நியூயார்க் பகுதியில் குடியேறினர். லூயிசா வாஷிங்டன் (1897 மே பிறந்தார்)[2], ஐரீன் வாஷிங்டன் (1898 மே பிறந்தார்)[2], மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஜூனியர் (ஆகஸ்ட் 1899 பிறந்தார்)[2][8] .
வாஷிங்டன் நியூயார்க் பகுதிக்கு வந்த பின்னர் மண்ணெண்ணெய் எரிவாயு சுடர்வலை[1] உற்பத்தி நிறுவனம் ஒன்றை நிறுவினார். இந்த நேரத்தில், அவர்கள் ஸ்டேட்டன் தீவின் நியூ பிரைட்டனில் வசித்தார். ஆனால் அவரது நிறுவனமான ஜார்ஜ் வாஷிங்டன் விளக்கு நிறுவனம், அருகில் உள்ள ஜெர்ஸி சிட்டியை அடிப்படையாக கொண்டிருந்தது. இந்த வணிகமானது வெள்ளொளிர்வு விளக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் கைவிடப்பட்டது.[3] ஒரு நேரத்தில் வாஷிங்டனிடம் நிழற்படக் கருவி நிறுவனம் இருந்தது. 1900 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு, 29 வயதாகிய வாஷிங்டன் ஒரு கண்டுபிடிப்பாளர் என்றும் அவருடன் அவரது 23 வயதாகிய மனைவி, மூன்று குழந்தைகள், 25 வயதாகிய அவரது இளைய சகோதரி, மூன்று வேலையாட்கள் மற்றும் இரண்டு வேலையாட்களின் ஒரு குழந்தை ஆகியோர் புரூக்ளினில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்ததாக பதிவு செய்திருந்தது.[2]
வாஷிங்டன் 1906[9][10] அல்லது 1907[3] ஆம் ஆண்டு குவாத்தமாலாவில் கால்நடை பண்ணை[3] வைப்பதற்கு முயற்சி செய்தார். இதற்கிடையில், அவரது உடனடி காபி உற்பத்தி முயற்சியையும் மேம்படுத்தினார்.. வாஷிங்டன் ஓராண்டு காலம்[1] குவாதமாலாவில் இருந்த பின் நியூயார்க் நகரம் திரும்பி காபி உற்பத்தியை முக்கிய தொழிலாகத் தொடங்கினார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]1910 இல் காபி வர்த்தகம் நிறுவப்பட்ட பின்னர் வாஷிங்டன், 47, பிராஸ்பெக்ட் பார்க் மேற்கு[4] ப்ரூக்ளின் நகர் வீட்டில் வசித்தார். 287, சவுத் கன்ட்ரி ரோட், சஃபோல்க், பெல்போர்டில் அவருக்கு இரண்டாவதாக மற்றொரு வீடும் இருந்தது.[11][IV] வாஷிங்டன் 1926 க்கும் 1927 க்குமிடையில் தனது இரண்டு வீட்டையும் ஒரு சமூக சங்கம் அமைக்கும் நோக்கமுடைய புரூக்ளின் பணக்காரர்களுக்கு விற்றார் ($1 மில்லியனுக்கு மேல்).[12][13] அதன் பின் அவர் 1927 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் நிலம் வாங்கி அங்கு தனது நிறுவனத்தை இடமாற்றினார். மற்றும் அவர் மேந்தமிலுள்ள "ஃபிராக்ளின் பண்ணைத் தோட்டத்துக்கு" குடிபெயர்ந்தார்.[14] வாஷிங்டன் விலங்குப் பிரியரும் தோட்டப் பிரியருமாவார்.[11] தனது கிராமப்புற இடங்களில் (முதலில் பெல்போர்ட்டிலும் பிறகு மேந்தமிலும்) விலங்குக் காட்சிசாலைகளை அமைத்துப் பராமரித்தார். லாங் தீவில், அடிக்கடி தனது தோளில் ஒரு பறவை அல்லது குரங்குடன் அவர் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.[11] வாஷிங்டன், அவரது விலங்குக் காட்சியங்களில், அரியவகைப் பறவைகளை பராமரித்து வந்தார். மேலும் மான், செம்மறி, வெள்ளாடுகள், மற்றும் மறிமான் போன்ற விலங்குகள் பெல்போர்ட்டிலும். மேந்தமிலில் பெரிய இடத்தில் நூற்றுக்கணக்கான மான், லாமாக்கள் மற்றும் வரிக்குதிரைகளும் வளர்க்கப்பட்டன. சமூகளவில், அவர் நியூயார்க் நகரின் லோட்டோஸ் சங்க (Lotos Club) உறுப்பினராக இருந்தார்.[1]
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், "அமெரிக்க கட்சி” சார்பில் டகோட்டா மாகாணத்தின் வேட்பாளராக வாஷிங்டனை முன்னிறுத்த முயற்சிக்கப்பட்டதாகவும் ஆனால் ஆவணங்கள் மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.[4].உண்மையில் அவர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. ஜார்ஜ் வாஷிங்டன் வெளிநாட்டில் பிறந்தமையால் ஜனாதிபதி வேட்பாளராகத் தகுதி கிடையாது. வரலாற்றில் பல "அமெரிக்க கட்சி" கள் இருந்தமையால் இவரது பெயரின் முன்மொழிவு ஒரு நையாண்டியா என்பது குறித்தும் தெளிவான கருத்துக்கள் இல்லை[III]
கண்டுபிடிப்பு மற்றும் வணிகம்
[தொகு]ஜார்ஜ் வாஷிங்டன் ஹைட்ரோகார்பன் விளக்குகள், ஒளிப்படக்கருவிகள் மற்றும் உணவு பதப்படுத்தல் போன்ற களங்களில் இரண்டு டஜன் காப்புரிமைகள் வைத்திருந்தார். உடனடி காபி செயல்முறையை முதலில் கண்டுபிடித்தவர் வாஷிங்டன் இல்லை. உடனடி காபி செயல்முறைகளில் சடோரி கரோவினுடைய செயல்முறை ஒரு முன்னோடியாக இருந்தது. எனினும் வாஷிங்டனின் கண்டுபிடிப்பு வணிக உற்பத்திக்கு வழிவகுப்பதில் முதல் முயற்சியாக இருந்தது. அவர் ஒரு வெள்ளி காபி பாத்திரத்தின் விளிம்பில் உலர்ந்த தூளைப் பார்த்து வாஷிங்டன் உந்துதல் அடைந்தார் என்ற கருத்தும் நிலவுகிறது.[15] இதே சமயத்தில்,[10] ஒரு ஜெர்மன்- குவாத்திமாலனியரான, ஃபெடரிகோ லேஹ்ன்ஹோப்ப்வயலட் (Federico Lehnhoff Wyld) என்பவரால் உடனடி காபி செய்முறை உருவாக்கப்பட்டது. அது ஐரோப்பாவில் சந்தைப்படுத்தப்பட்டது.
வாஷிங்டனின் தயாரிப்பு முதன் முறையாக 1909 ஆம் ஆண்டு Red E Coffee ("ready" -ஒரு சொல்விளையாட்டாக) என விற்பனை செய்யப்பட்டது. ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனம் 1910 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[9] 147, 41வது தெரு, புரூக்ளின் புஷ் முனைய தொழிற்துறை வளாகத்தில் இருந்தது. பின்னர் 1927 ல் 45, கிழக்கு ஹனோவர் அவென்யூ, மோரிஸ் சமவெளிகளில் அமைக்கப்பட்ட புதிய உற்பத்தி நிலையத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி அவரது நிறுவனச் செயற்பாடுகளை, நியூ ஜெர்சிக்கு மாற்றினார்.[14][IV]
நிறுவனத்தின் தயாரிப்பு, பயன்படுத்தும் வசதி, நவீன மாற்றம் மற்றும் தூய்மை என்பன விளம்பரம் மூலம் அடிக்கடி வலியுறுத்தப்பட்டது. காபி சமிபாட்டுக்கு நல்லது என்றும் விளம்பரப்படுத்தப்பட்டது. முதலாம் உலக போர் முடிவுக்கு வந்த பின்னர், அமெரிக்க இராணுவம் காபியை பாவிக்கத் தொடங்கியதால் விற்பனை பெருகியது. இந்த நிறுவனம் 1930 இல்லிருந்து 1935 வரை "செர்லக் ஓம்சு" வானொலி தொடரை வழங்கிய பின் இதன் விற்பனை வளர்ச்சி மேலும் பெருகியது[16]
ஆனால் ஆரம்ப உடனடி காபியானது பெரும்பாலும் தரமற்ற, சுவையற்ற, சற்றே புதுமையான தயாரிப்பாகக் கருதப்பட்டது.[17]
மத்திய அதிகாரிகளினால் இவருக்கும் இவரது குடும்பத்தினருக்கும் இடையேயான நிதியுறவு தொடர்பாக வரி சிக்கல்களுக்கு ஆளானார். நவம்பர் 1918 இல், தனது வர்த்தக ரகசியங்களை காபி உற்பத்திக்கு பயன்படுத்துவதற்கு ஒப்பந்தம் ஒன்றை நிறுவனத்தில் முன்வைத்தார் மற்றும் ஒரு மாதம் கழித்து 4/5 பங்குகளை அவரது குடும்பத்தினருக்கு கொடுத்தார். வாஷிங்டன் குடும்பத்தினர் குடும்ப வருமானத்தின்மீது வரிகட்டத் தேவையில்லை என்று வலியுறுத்தினர். இந்த வழக்கின் பலகட்டங்களிலும் இவர்களுக்கு எதிரான தீர்ப்பே கிட்டியது.[18]
வாஷிங்டன் மகன் தந்தையின் நிறுவனத்தில் பொருளாளராக பணியாற்றினார். தந்தையைப் போல் கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் போன்றவற்றில் ஈடுபட்டார்.[19]
இராணுவ ஒப்பந்தங்கள்
[தொகு]முதலாம் உலக போரில் வாஷிங்டனின் அந்த நேர தயாரிப்பான உடனடி காப்பி உணவிற்கு முக்கிய பயன்பாடாக இருந்தது. காபியின் நுகர்வானது இராணுவ வீரர்களுக்கு காஃபின் ஊக்கத்தை கொடுத்தமையால் போர்க்களத்தில் பெறுமதிமிக்கதாகக் கருதப்பட்டது.[17] அந்த நேரத்தில், அமெரிக்கப் போர் துறையில், காபி பிரிவின் தலைவராக இருந்த இ.எஃப்.ஹோல்புரோக், கடுகு வாயுவிலிருந்து மீட்படைவதற்கு காபி முக்கிய உதவியாக உள்ளதாகக் கருதினார்.[9] முதல் 1914ல் கனடிய படையால் இது பயன்படுத்தப்பட்டது. பின்னர் 1917 இல் அமெரிக்கப் படை போரில் நுழைந்த பின் அமெரிக்க இராணுவப் பயன்பாட்டிற்காக எல்லா உற்பத்தியும் கொடுக்கப்பட்டது.[5] தேசிய உற்பத்தி விநியோகமானது ஆறு முறை யுத்தத்தின் இறுதி காலத்திலிருந்தது மற்றும் புதிய சிறிய தயாரிப்பாளர்கள் கூட நம்பமுடியாத அளவு தேவைக்கு இராணுவத்தை சந்திக்க வேண்டியிருந்தது.[10]
"ஜார்ஜ் கப்" என்ற புனைப் பெயருடன் உடனடி காபி இராணுவத்தினர் மத்தியில் புகழ் பெற்றது. காபியானது அதன் மணத்தைவிட, காஃபின் ஊக்கத்தினால் பிரதான ஈர்ப்பாக இருந்தது, அது சில நேரங்களில் குளிர்நிலையிலும் அருந்தப்பட்டது.[10]
“ | எலிகள், மழை, மண், வரைவுகள் [sic], பீரங்கி கர்ஜனை, மற்றும் குண்டுகள் அலறல் போன்றன இருந்த போதிலும் நான் மிகவும் சந்தோஷமாக உள்ளேன். சிறிய எண்ணெய் சூடாக்கியை ஒளி ஏற்றுவதற்கும் ஜார்ஜ் வாஷிங்டனின் காபி செய்வதற்கும் ஒரு நிமிடம் தான் எடுக்கும். ஒவ்வொரு இரவும், நான் வாஷிங்டனின் சுகாதாரத்திற்கும் நல்வாழ்விற்கும் விசேட மனு ஒன்றை வழங்குகின்றேன். | ” |
— அமெரிக்க படையினர், 1918 அகழிகளிடமிருந்து பெறப்பட்ட கடிதம்[10] |
முதலாம் உலகப்போரில் அமெரிக்க இராணுவத்தில் அவசரகால பங்கீடாக ஒரு கால் அவுன்சு (7 கிராம்) இரட்டை வலிமையுடைய உடனடி காபி பாக்கெட் ஒரு நபருக்கு ஒன்றாக, இருபத்தி நான்கு பேருக்கான அளவில் வெவ்வேறு உணவுகள் அடைக்கப்பட்ட பெட்டிகளில் சேர்க்கப்பட்டிருந்தன.[5] உடனடி காபியானது சேமிக்கப்பட்ட இருப்புகளிலும் மற்றும் அகழிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலக போரின் போதும் அமெரிக்க இராணுவம் மீண்டும் வாஷிங்டனை நம்பியிருந்தது. எனினும் இரு உலகப் போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பல உடனடி காபி வகைகள் (மிக குறிப்பாக நெஸ்கபே) சந்தையில் அறிமுகமாயிருந்தன. அவை அதிகரித்த இராணுவ தேவையைப் பூர்த்தி செய்தன.[17]
வாஷிங்டன் மற்றும் நிறுவனத்தின் இறுதிநிலை
[தொகு]1943 ஆம் ஆண்டு ஜி.வாஷிங்டனின் காபி சுத்திகரிப்பு நிறுவனமானது அமெரிக்க வீட்டு தயாரிப்பு உற்பத்தி மூலதனமாக வாங்கப்பட்டது மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் ஓய்வு பெற்றார். வாங்கப்பட்ட நிறுவனமானது பெரும்பாலும் குடும்பத்தால் நடத்தப்பட்டது. அத்துடன் அமெரிக்க வீட்டு தயாரிப்பின் 29,860 பங்குகளுக்காக (அண்ணளவாக $ 1.7 மில்லியன்) இது மாற்றப்பட்டது. ஒரு நேரத்தில் அமெரிக்க வீட்டு தயாரிப்புகள் தீவிர கொள்முதலாகவும், எட்டு வருடமாக 34 பங்குகளை நிறுவனங்கள் வாங்குவதாகவும் இருந்தது. ஜி .வாஷிங்டனின் பொது முகாமையாளர் கிளாரன்ஸ் மார்க், வாஷிங்டனுடன் இணைக்கப்பட்ட அலகில் இயங்கி வெற்றி கண்டார்.[20][21]
வாஷிங்டனுடைய இறுதிக் காலங்களில், அவர் "பிராங்கிளின் பண்ணைத் தோட்டம்" சொத்தை விற்பனை செய்துவிட்டு புதிய வெர்னான் சாலை, மேந்தமிலுள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவரது நிறுவனம் விற்பனை செய்யப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின் மார்ச் 29, 1946 ஆம் ஆண்டு, தனது 74 ஆவது வயதில் மரணமடைந்தார்.[1][3][22]
வாஷிங்டனின் நியூ ஜெர்சி உற்பத்திநிலையம் கோ-கோலா நிறுவனத்தின் பிரிவான தென்கோவிற்கு விற்கப்பட்டதிலிருந்து வாஷிங்டனின் காபி உற்பத்தியானது 1961 இல் கைவிடப்பட்டது. 1938ல் தொடங்கப்பட்ட ’G. Washington's Seasoning & Broth’ நிறுவனம் வாஷிங்டனின் இறுதிச் சொத்தாக இருந்தது.[17] இதன் உற்பத்தி 2000 ஆம் ஆண்டு அமெரிக்க வீட்டு தயாரிப்பு நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் இரு நிறுவனங்களிடம் கைமாறிய பின் 2001 ஆம் ஆண்டு ஹோம்ஸ்டேட் ஃபார்ம் லிமிட்டடு ஆல் நடாத்தப்பட்டது.[23]
காப்புரிமை
[தொகு]- U.S. Patent 5,76,523
- U.S. Patent 5,76,524
- U.S. Patent 5,84,569
- U.S. Patent 5,89,051
- U.S. Patent 5,93,257
- U.S. Patent 6,07,974
- U.S. Patent 6,19,059
- U.S. Patent 7,06,504
- U.S. Patent 7,06,505
- U.S. Patent 7,30,498
- U.S. Patent 7,45,698
- U.S. Patent 7,60,670
- U.S. Patent 7,60,671
- U.S. Patent 7,60,672
- U.S. Patent 7,70,135
- U.S. Patent 7,70,836
- U.S. Patent 7,77,871
- U.S. Patent 7,78,518
- U.S. Patent 7,81,317
- U.S. Patent 15,04,459
- U.S. Patent 15,12,730
- U.S. Patent 15,12,731
- U.S. Patent 16,31,298
- U.S. Patent 16,31,299
- U.S. Patent 16,31,302
- U.S. Patent 16,31,303
குறிப்புகள்
[தொகு]- I^ : He does not appear to have used his full name while in the United States—it is absent from census and immigration records, his patent applications and contemporary news articles about him.
- II^ : The New York Times gives the place of birth as Kortrijk, while The New York Herald Tribune gives Brussels. It is presumed that the more obscure city would be the less likely error. Belgian records clearly indicate that he was at least married in Kortrijk.
- III^ : In 1920, former Texas governor James E. Ferguson actually ran under an "American Party" label.
- IV^ : The Bellport home is currently known as "Washington Lodge". The Morris Plains address at 45 Hanover Avenue is given in a 1928 ad;[24] the plant is described in the New York Times as adjoining the Morristown Line, so the address must be 45 East Hanover Avenue.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "G. Washington, 74; Began Coffee Firm. Head of Refining Company for 33 Years Dies in Jersey. Founded Business in 1910". New York Times. March 30, 1946.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 Image of census page containing George Washington; 1900 US Census; Staten Island; New York City
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "G. Washington Is Dead, Made Instant Coffee", The New York Herald Tribune, March 29, 1946.
- ↑ 4.0 4.1 4.2 "Presidency Candidate Found in Brooklyn", The New York Times, January 4, 1920.
- ↑ 5.0 5.1 5.2 The Story of a Pantry Shelf: An Outline History of Grocery Specialties. New York: Butterick Publishing Company. 1925.
- ↑ "Mrs. George Washington" (1876–1952), obituary, The New York Times, October 30, 1952.
- ↑ The birthplace of the Washingtons' eldest daughter (born May 1897) is given in the 1900 US Census as Belgium, despite the Washingtons arriving at Ellis Island in October 1896. The US Census also records the year of their emigration to the USA as 1897. The other two children are recorded in the census as being born in New York.
- ↑ George Washington, Jr. was born on August 6, 1899 and died on December 1, 1966 in Morristown, New Jersey; Social Security Death Index.
- ↑ 9.0 9.1 9.2 Ukers, William H. (1922). All about Coffee. The Tea and Coffee Trade Journal Co.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 Pendergrast, Mark (1999). Uncommon Grounds: The history of coffee and how it transformed our world. Basic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-465-05467-6.
- ↑ 11.0 11.1 11.2 Principe, Victor (2002). Bellport Village & Brookhaven Hamlet, NY. Arcadia Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7385-0968-X.
- ↑ "Big Bellport Sale", The New York Times, May 23, 1926.
- ↑ "Brooklyn Club Buys", The New York Times, February 25, 1927.
- ↑ 14.0 14.1 "Coffee Company Builds New Plant", The New York Times, May 26, 1927.
- ↑ History of Instant Coffee. Nestlé UK. Retrieved on March 31, 2007. பரணிடப்பட்டது சனவரி 28, 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Haendiges, Jerry. "Sherlock Holmes episodic log". The Vintage Radio Place. Retrieved on March 27, 2007.
- ↑ 17.0 17.1 17.2 17.3 Talbot, John M. (1997). "The Struggle for Control of a Commodity Chain: Instant Coffee from Latin America". Latin American Research Review 32 (2), 117–135.
- ↑ "George Washington Sues", The New York Times, May 26, 1927.
- ↑ "George Washington Jr. is Dead; Invented an Engraving Device", The New York Times, December 27, 1966.
- ↑ "To Buy Coffee Company", The New York Times, April 8, 1943.
- ↑ "Buy, Buy, Buy" பரணிடப்பட்டது 2012-01-05 at the வந்தவழி இயந்திரம், Time, December 6, 1943.
- ↑ "Deaths", The New York Times, March 30, 1946.
- ↑ "History – G. Washington's Seasoning & Broth". Homestatfarm.com. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
- ↑ "George Washington's Instant Coffee - picture of advert". Archived from the original on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2012-06-10.
வெளி இணைப்புகள்
[தொகு]- Coffee on the Instant - chapter in The Story of a Pantry Shelf: An Outline History of Grocery Specialties
- Official site of G. Washington's Seasoning & Broth