ஜார்ஜ் ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் ரெட்டி
இறப்பு(1972-04-14)ஏப்ரல் 14, 1972
உசுமானியா பல்கலைக்கழகம்
இறப்பிற்கான
காரணம்
கொலை
தேசியம்இந்தியன்

ஜார்ஜ் ரெட்டி (George Reddy, இறப்பு: ஏப்ரல் 14, 1972), ஹைதராபாத் உசுமானியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆராய்ச்சி மாணவர். இவர் தனது 25 ஆவது வயதில் (14 ஏப்ரல் 1972) மாணவர் விடுதியில் வலதுசாரி அமைப்புகளால் கொலை செய்யப்பட்டார்.[1] இடதுசாரி இயக்கத்தினுடனான அவரது சர்ச்சைக்குரிய ஈடுபாட்டினால் கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு அந்த பல்கலைக்கழகத்தில் PDSU எனப்படும் "முற்போக்கு ஜனநாயக மாணவர்கள் சங்கம்" உருவாவதற்கு வழிவகுத்தது.[1][2]

ரெட்டி தன் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவராக வெளிவந்தார். மேலும் குத்துச்சண்டையில் ஆர்வம் உள்ளவர்.[3] அவர், மார்க்சிய தத்துவங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கும், சமத்துவமின்மையை எதிர்ப்பதிலும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர் அமெரிக்காவின் வளரும் கருஞ்சிறுத்தை இயக்கத்தையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வியட்நாம் மக்களின் போராட்டத்தையும், நக்சல்பாரி மற்றும் ஸ்ரீகாகுலத்தில் விவசாயிகள் எழுச்சிகளைப் கண்டு ஈர்க்கப்பட்டதாக அவருடைய நண்பர் கூறினார்.

ரெட்டியை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட படம் தான் மணிரத்னத்தின் ஆய்த எழுத்து திரைப்படம். அவரது 40ஆம் நினைவாண்டில் Crisis on the Campus எனப்படும் ஆவணப்படம் மற்றும் Reminiscences of George Reddy என்கிற புத்தகமும் வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ரெட்டி&oldid=3441761" இலிருந்து மீள்விக்கப்பட்டது