ஜார்ஜ் மெக்சுவெல்
ஜார்ஜ் மெக்சுவெல் George Maxwell | |
|---|---|
சர் ஜார்ஜ் மெக்சுவெல் | |
| மலாயா கூட்டமைப்பு மாநிலங்கள் தலைமைச் செயலாளர் | |
| பதவியில் 1920–1926 | |
| முன்னையவர் | சர் எட்வர்ட் லூயிஸ் பிரோக்மேன் |
| பின்னவர் | சர் வில்லியம் பீல் |
| பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் | |
| பதவியில் 1919–1920 | |
| முன்னையவர் | சர் ரெஜினால்ட் ஜார்ஜ் வாட்சன் |
| பின்னவர் | சர் வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம் |
| கெடா மாநிலத்தின் பிரித்தானிய அறிவுரைஞர் | |
| பதவியில் 1909–1915 | |
| முன்னையவர் | (புதிய பதவி) |
| பின்னவர் | இலிட்டில்டன் எட்வர்ட் பைப் |
| பதவியில் 1918–1919 | |
| முன்னையவர் | ஜி.ஏ. ஆல் |
| பின்னவர் | மால்கம் அன்னிபால் மெக்ஆர்தர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 9 சூன் 1871 மலாக்கா, நீரிணைக் குடியேற்றங்கள் |
| இறப்பு | 22 ஆகத்து 1959 சோர்காம், சசெக்ஸ், இங்கிலாந்து |
| துணைவர் | லேடி இவ்லின் மெக்சுவெல் |
| பெற்றோர் |
|
| பணி | குடியேற்ற நிர்வாகி |
சர் ஜார்ஜ் மெக்சுவெல் அல்லது வில்லியம் ஜார்ஜ் மெக்சுவெல் (ஆங்கிலம்; மலாய்: Sir William George Maxwell); KBE[1]; CMG[2] (9 சூன் 1871 – 22 ஆகத்து 1959) என்பவர் பிரித்தானிய மலாயா; மற்றும் நீரிணைக் குடியேற்றங்களின் பிரித்தானிய குடியேற்ற நிர்வாகி ஆவார். மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் வளர்ச்சியில் இவரின் பங்களிப்புகளுக்காகவும்; மலாய் மொழிக் கல்விக்கு ஆதரவு வழங்கியதற்காகவும் நன்கு அறியப்படுகிறார்.[3][4]
மலாயா குடிமைப் பணிக்காலத்தில் பல உயரிய அரசு பதவிகளை வகித்த இவரின் அரிய சேவைகளுக்காக, பேராக், தைப்பிங்கில் உள்ள மெக்சுவெல் மலை (Bukit Larut); இவரின் பெயரால் பெயரிடப்பட்டது.[5] அத்துடன் மலாயா கல்வித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், கோலாலம்பூரில் உள்ள மெக்சுவெல் உயர்நிலப்பள்ளிக்கும் (Maxwell School) இவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.[6][7]
வாழ்க்கை
[தொகு]1908-ஆம் ஆண்டில் இருந்து 1911-ஆம் ஆன்டு வரை மலாயா கூட்டமைப்பு ஆளுநராகப் பதவி வகித்த சர் வில்லியம் எட்வர்ட் மெக்சுவெல் (William Edward Maxwell); மற்றும் லிலியாஸ் கிராண்ட் மெக்கே (Lilias Grant Mackay) ஆகியோரின் மூத்த மகனாவார்.
பதவிகள்
[தொகு]ஜார்ஜ் மெக்சுவெல் 1891-ஆம் ஆண்டு பேராக் அரசாங்கத்தில் ஓர் இளைய அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் கிந்தா பள்ளத்தாக்கில் (பேராக்) உதவி மாவட்ட நீதிபதி மற்றும் நீதிமன்றப் பதிவாளராகப் (Registrar of Courts) பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் அவர் பேராக் அரசாங்கத்தின் உதவிச் செயலாளராகவும்; லாருட்டில் நில வருவாய்க்கான தற்காலிக ஆட்சியராகவும் (Acting Collector of Land Revenue); வடக்கு பேராக்கில் நில உரிமை பதிவாளராகவும், சுரங்கத் துறைப் பொறுப்பாளராகவும் (Registrar of Titles and Warden of Mines); சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் பேராக் மாநிலங்களுகான தற்காலிக மூத்த நீதிபதியாகவும் பணியில் அமர்த்தப்பட்டார்.[8]
1904-ஆம் ஆண்டில், அவர் நீரிணைக் குடியேற்றங்களின் அரசு பொதுச் சேவைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூரில் உள்ள மனுத்தாக்கல் நீதிமன்றத்தின் (Court of Requests) தற்காலிக ஆணையராகப் பதவி உயர்வு பெற்றார்.
கெடா மாநிலத்தின் பிரித்தானிய அறிவுரைஞர்
[தொகு]1906-ஆம் ஆண்டில் பேராக், டிண்டிங் மாவட்ட ஆட்சியராக (District Officer of Dinding) ஜார்ஜ் மெக்சுவெல் நியமிக்கப்பட்டார். சூலை 9, 1909 அன்று பிரித்தானியர் மற்றும் சயாமியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாங்காக் உடன்படிக்கை, கெடா மாநிலத்தை பிரித்தானிய பேரரசின் ஒரு பகுதியாக மாற்றியது. பின்னர் அவர் கெடாவின் பிரித்தானிய அறிவுரைஞராக (1909–1915); (1918–1919) (British Adviser to Kedah) நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அவர் பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வராகவும் (1919–1920); மலாயா கூட்டமைப்பு தலைமைச் செயலாளராகவும் (1920–1926) பொறுப்புகள் வகித்தார். அன்றைய பிரித்தானிய ரெசிடென்ட் (British Resident) எனும் பிரித்தானிய முதல்வர் பதவி, இன்றைய மாநில மாநில முதல்வர் (Menteri Besar) பதவிக்குச் சமமானது.
இறுதியாக அவர் 1934 முதல் 1939 வரை உலக நாடுகள் சங்கத்தில் அடிமைத்தனம் குறித்த வல்லுநர்களின் பரிந்துரைக் குழுவின் (Advisory Committee of Experts on Slavery) ஏழு உறுப்பினர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.[9]
நினைவிடங்கள்
[தொகு]பேராக், தைப்பிங்கில் உள்ள மெக்சுவெல் மலை (Bukit Larut); இவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது. 1929 நவம்பர் 29 அன்று, அவர் பேராக்கில் சுல்தான் இட்ரிஸ் கல்விப் பல்கலைக்கழகத் திறந்து, அதை மலாய்க்காரர்களுக்கான மிக உயர்ந்த கல்வி நிறுவனமாக மாற்றினார். மலாயா கல்வித் துறையில் இவரின் சீரிய பணிகளை நினைவுகூரும் வகையில், கோலாலம்பூர் மெக்சுவெல் உயர்நிலப்பள்ளிக்கு (Maxwell School) இவரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
விருதுகள்
[தொகு]
ஐக்கிய இராச்சியம்
- பிரித்தானிய பேரரசு விருது (KBE) – Sir (1924)
- செயிண்ட் மைக்கெல் செயிண்ட் ஜார்ஜ் விருது (CMG) (1915)
மேலும் காண்க
[தொகு]- வில்லியம் ஜேம்ஸ் பார்க் இயூம்
- ஜான் பிக்கர்சிகில் ரோட்ஜர்
- வில்லியம் எட்வர்ட் மெக்சுவெல்
- ஆலிவர் மார்க்ஸ்
- என்றி கான்வே பெல்பீல்ட்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "No. 32941". இலண்டன் கசெட். 30 May 1924. p. 4418.
- ↑ "No. 29180". இலண்டன் கசெட் (Supplement). 1 June 1915. p. 5328.
- ↑ OxfordDNB: Entry for Maxwell, Sir (William) George. Retrieved 9 January 2014
- ↑ "Sir William George Maxwell (1871 - 1959) was the first British Adviser for Kedah following the Anglo-Siamese Treaty of 1909". History Insights - Malaysia's post. Retrieved 24 December 2025.
- ↑ Malaysia Handbook: The Travel Guide By Joshua Eliot, Jane Bickersteth Published by Footprint Travel Guides, 2002; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-903471-27-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-903471-27-2
- ↑ Bernama (2018-11-04). "Maxwell school in KL now a national heritage | New Straits Times". NST Online (in ஆங்கிலம்). Retrieved 2024-02-03.
- ↑ Bernama (2018-11-04). "SMK Maxwell in KL given national heritage status". Free Malaysia Today (FMT) (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-02-03.
- ↑ "Sir George Maxwell papers, 1920 - 1963; ArchiveSearch". archivesearch.lib.cam.ac.uk. Retrieved 24 December 2025.
- ↑ Miers, S. (2003). Slavery in the Twentieth Century: The Evolution of a Global Problem. USA: AltaMira Press.
கூடுதல் சான்றுகள்
[தொகு]- Wright, Arnold, Twentieth Century Impressions of British Malaya: Its history, people, commerce, industries and resources, 1908