உள்ளடக்கத்துக்குச் செல்

ஜார்ஜ் ஆடம்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்ஜ் ஆடம்சன்
ஆடம்சன் (இடது) 1968 இல்
பிறப்புஜார்ஜ் அலெக்சாந்தர் கிரகாம் ஆடம்சன்
(1906-02-03)3 பெப்ரவரி 1906
இட்டாவா, இந்தியா
இறப்பு20 ஆகத்து 1989(1989-08-20) (அகவை 83)
கோரா தேசிய பூங்கா, கடற்கரை மாகாணம், கென்யா
இறப்பிற்கான
காரணம்
கொலை
கல்லறைகோரா தேசிய பூங்கா
மற்ற பெயர்கள்புவானா கேம், பாபா யா சிம்பா
பணி
  • Wildlife conservationist
  • author
வாழ்க்கைத்
துணை
ஜாய் ஆடம்சன்
(தி. 1944; பிரிவு 1970)
வலைத்தளம்
www.georgeadamson.org

ஜார்ஜ் அலெக்சாந்தர் கிரஹாம் ஆடம்சன் (George Alexander Graham Adamson, 3 பிப்ரவரி 1906 - 20 ஆகத்து 1989), பாபா யா சிம்பா ( சுவாகிலி மொழியில் "சிங்கங்களின் தந்தை") என்றும் அழைக்கப்படுபவர் [1] கென்யாவைத் தளமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு பிரித்தானிய வனவிலங்கு பாதுகாவலரும், எழுத்தாளரும் ஆவார். இவரின் மனைவி ஜாய் ஆடம்சன், எழுதி 1960 ஆம் ஆண்டு வெளியாகி அதிகம் விற்பனையான புத்தகமான பார்ன் ஃப்ரீ (Born Free ) இல் (1966 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுக்கப்பட்டது) இந்த இணையரின் வாழ்க்கையைப் பற்றி விவரித்தார். அதில் அவர்கள் வளர்த்து பின்னர் காட்டுக்குள் விட்ட ஒரு அநாதை சிங்கக் குட்டியான எல்சா என்னும் சிங்கம் குறித்து எழுதியிருந்தார்.

வாழ்க்கை

[தொகு]

ஜார்ஜ் அலெக்சாந்தர் கிரஹாம் ஆடம்சன் 1906 பிப்ரவரி 3 அன்று இந்தியாவின் இட்டாவாவில்[2] ஆங்கிலேய மற்றும் ஐரிய பெற்றோருக்குப் பிறந்தார். இவர் இங்கிலாந்தின் செல்டென்ஹாமில் உள்ள டீன் க்ளோஸ் பள்ளியில் கல்வி பயின்றார். மேலும் 1924 இல் கென்யாவில் உள்ள தன் தந்தையின் காபி தோட்டத்தைப் பராமரிக்க அங்கு குடிபெயர்ந்தார். இவர் தன் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு, தங்க வேட்டைக்காரர், ஆட்டு வணிகம், தொழில்முறை சஃபாரி வேட்டைக்காரர் உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டார்.[3] பின்னர் 1938 இல் கென்யாவின் வனவிலங்குத் துறையில் பணிக்குச் சேர்ந்தார்.[3] அதில் வேட்டைக் காப்பாளராகப் பணியாற்றினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் பிரீடெரிக் விக்டோரியா "ஜாய்" கெஸ்னரை மணந்தார்.[3] (அதிக விற்பனையான நூலின் எழுத்தாளரான ஜாய் ஆடம்சன் ஆவார்). 1956 ஆம் ஆண்டில் தான் இவர் எல்சா என்ற அதரவற்ற சிங்கக்குட்டியை வளர்த்தார். வளர்ந்த பின்னர் அதை இவர் காட்டுக்குள் விட்டார். இந்த சாகசப் பணி இவரின் மனைவியின் அதிகம் விற்பனையான புத்தகமான பார்ன் ஃப்ரீ (1960) இன் கருப்பொருளாக மாறியது. பின்னர் 1966 இல் பார்ன் ஃப்ரீ என்ற பெயரிலேயே அது திரைப்படமாக உருவாக்கப்பட்டது.

1961 ஆம் ஆண்டு கென்யாவின் வடக்கு எல்லைப்புற மாவட்ட மாகாணத்தின் ( மேரு தேசிய பூங்கா பகுதி) மூத்த வனவிலங்கு காப்பாளராக இருந்து ஆடம்சன் ஓய்வு பெற்றார், மேலும் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள முடியாத சிங்கங்களை வளர்ப்பதிலும், காடுகளில் தானே உயிர்வாழ அவற்றைப் பயிற்றுவிப்பதிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டில், வடக்கு கென்யாவில் உள்ள கோரா தேசிய காட்டுப் பகுதிக்குச் சென்று, பிடிக்கபட்ட அல்லது அனாதையான பெரிய சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட பூனை உயிரினங்களை மீண்டும் காட்டுக்குள் வாழவைத்து மறுவாழ்வு அளிக்கத் தொடங்கினார். ஜார்ஜும், ஜாய்யும் 1970 இல் பிரிந்தனர், ஆனால் 1980 சனவரி 3 அன்று ஜாய் ஆடம்சன் கொல்லப்படும் வரை கிறித்துமசு விடுமுறை நாட்களை ஒன்றாகக் கழித்தனர்.

இறப்பு

[தொகு]

1989 ஆம் ஆண்டு ஆகத்து 20 ஆம் நாள், கோரா தேசிய பூங்காவில் தன் உதவியாளருடன் ஒரு இளம் ஐரோப்பிய சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றச் சென்ற ஜார்ஜ் ஆடம்சன், கோரா தேசிய பூங்காவில் உள்ள தனது முகாமுக்கு அருகில் சோமாலிய கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அவருக்கு அப்போது 83 வயது. ஜார்ஜின் உடல் இவரது சகோதரர் டெரன்சுக்கும், சூப்பர் கப் மற்றும் முகி என்ற இரண்டு சிங்கங்களுக்கும் அடுத்ததாக கோரா தேசிய பூங்காவில் அடக்கம் செய்யப்பட்டது.[2]

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி

[தொகு]
  • பார்ன் ஃபிரீ (1966), எல்சா என்ற சிக்கத்தைப் பற்றிய ஜாய் ஆடம்சனின் அதே பெயரிலான புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. அந்த அநாதைச் சிங்கம் காட்டுக்குள் மறுவாழ்வு பெற்றது, ஆனால் ஆடம்சன்சுடன் நட்புறவில் இருந்தது. இந்த படத்தில் ஜாய் ஆடம்சனாக வர்ஜீனியா மெக்கென்னாவும், ஜார்ஜ் ஆடம்சனாக பில் டிராவர்ஸ் நடித்தனர். படத்தில் ஜார்ஜ் ஆடம்சன் தலைமை தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றினார்.
  • தி லயன்ஸ் ஆர் ஃப்ரீ (1967) என்பது பார்ன் ஃப்ரீ படத்தில் நடித்த பாய், கேர்ள், உகாஸ், மாரா, ஹென்றிட்டா, லிட்டில் எல்சா மற்றும் பிற சிங்கங்களுக்கு என்ன நடந்தது என்பதற்கான உண்மைக் கதை. பார்ன் ஃப்ரீ முடிந்ததும் ஜார்ஜ் ஆடம்சன் இந்த சிங்கங்களில் பலவற்றுக்கு மறுவாழ்வு அளித்ததார். இது ஜார்ஜ் ஆடம்சன் மற்றும் அவரது சிங்கங்களைப் பற்றிய ஆவணப்பட பாணி படமாகும்.
  • ஆன் எலிஃபண்ட் கால்டு ஸ்லோ (1969) என்பது ஜார்ஜ் ஆடம்சன், பில் டிராவர்ஸ், வர்ஜீனியா மெக்கென்னா ஆகியோரைக் கொண்ட ஒரு பயணக் குறிப்பு படமாகும்.
  • லார்ட் ஆப் தி லயன்ஸ்...ஆடம்சன் ஆப் ஆப்பிரிக்கா ஜார்ஜ் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு (சுமார் 53 நிமிடங்கள்) கென்யாவில் உள்ள கோரா ரிசர்வ் பகுதியில் படமாக்கப்பட்டது.
  • லிவிங் ஃப்ரீ (1972) என்பது பார்ன் ஃப்ரீ படத்தின் தொடர்ச்சியாகும்; இதில் நிகல் டேவன்போர்ட் ஜார்ஜ் ஆடம்சனாகவும் சூசன் ஹாம்ப்ஷயர் ஜாய் ஆடம்சனாகவும் நடித்தனர்.
  • கிறிஸ்டியன் தி லயன் (1972) என்பது கிறிஸ்டியன் தி லயன் மற்றும் ஜார்ஜ் ஆடம்சனுக்கு அவர் மேற்கொண்ட பயணம் பற்றிய ஆவணப்படமாகும்; இது பில் டிராவர்ஸ் மற்றும் பார்ன் ஃப்ரீ படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் ஹில் ஆகியோரால் எழுதி, தயாரித்து இயக்கப்பட்டது.
  • பார்ன் ஃப்ரீ (1974 தொலைக்காட்சித் தொடர்) என்பது கேரி காலின்ஸ் மற்றும் டயானா முல்டோர் நடித்த ஒரு தொடராகும்.
  • டு வாக் வித் லயன்ஸ் (1999), என்ற திரைப்படத்தில், ரிச்சர்ட் ஹாரிஸ் ஜார்ஜ் ஆடம்சனாக நடித்தார்.[4]
  • "தி பார்ன் ஃப்ரீ லெகசி" ​​என்பது 2010 ஆம் ஆண்டு வெளியான பிபிசி ஆவணப்படமாகும்.
  • "எல்சா'ஸ் லெகசி: தி பார்ன் ஃப்ரீ ஸ்டோரி" என்பது 2011 ஆம் ஆண்டு வெளியான நேச்சர் பிபிஎஸ் ஆவணப்பட அத்தியாயமாகும்.

நூல் பட்டியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "George Adamson, Friend of lions... Father of Lions". Retrieved 2008-05-05.
  2. 1 2 "WildlifeNOW | Home". wildlifenow.com. Archived from the original on 1 November 2016. Retrieved 2017-02-03.
  3. 1 2 3 "Obituaries: Adamson, George". 1990 Britannica Book of the Year. Chicago: Encyclopædia Britannica, Inc. 1990. p. 103. ISBN 0-85229-522-7.
  4. Eisner, Ken (14 June 1999). "To Walk with Lions Review". Variety. https://www.variety.com/review/VE1117914317.html?categoryid=31&cs=1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜ்_ஆடம்சன்&oldid=4494292" இலிருந்து மீள்விக்கப்பட்டது