ஜார்ஜி யபேர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜார்ஜி யபேர் அல்லது யார்கி யபேர் (பிரெஞ்சு: Georges Hébert, ஏப்ரல் 27, 1875 - ஆகத்து 2, 1957) என்பவர் பிரெஞ்சு உடல் கல்வி பயிற்சியாளர், ஆசிரியர், கோட்பாட்டாளர் மற்றும் தாவல் கலை எனப்படும் தற்காப்புக் கலையில் மிகவும் புகழ்பெற்ற ஒருவர்.

வாழ்க்கை[தொகு]

ஜார்ஜி யபேர் பாரி நகரத்தில் பிறந்தவர். முதலாம் உலகப் போரின் போது பிரஞ்சு கடற்படை அதிகாரியாக பணியாற்றியவர். 1902-ஆம் ஆண்டு மர்தினி நகரத்தில் பெரும் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த எழுநூறு பேரை பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்தார். அந்த நிகழ்வின் போது அவர் பட்டறிந்தவைகளைக் கொண்டே வாழ்க்கைக்கு தன்னலமின்மையும், கட்டுக்கோப்பான உடல் வலிமையும் மிக மிக தேவையான என்ற ஒன்று என அறிந்து கொண்டார். 

அதன் பின் அவர் உலகின் பல பாகங்களுக்கு பயணங்களை மேற்கொண்டு ஆப்பிரிக்கா உட்பட பல ஆதிவாசி சமூகங்களிடையே காணப்படும் உடல் பயிற்சி நெறிகளையும், நடமாடும் பயிற்சிகளையும் ஆழமாக அறிந்து கொண்டார்.

இவற்றைப் பின்புலமாக கொண்டு பிற்காலத்தில் அவர் தனக்கான ஒரு பாணியில் உடற்பயிற்சி முறைகளை உருவாக்கத் தொடங்கினார். அந்த உடற்பயிற்சி முறைகளை இயல்பான முறையில் பலருக்கும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். "வலிமையாக இரு, மற்றவருக்கு பயன்படு" என்ற தாரக மந்திரத்தை பரப்பினார்.

இவருடைய பயிற்சி நெறிமுறைகளை பின்பற்றி கடந்த நூற்றண்டின் நடுக்காலப் பகுதியில் தாவல் கலை (Parkour) என்ற ஒரு உடல் பயிற்சிக் கலை தோற்றம் கண்டது. .[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Georges Hébert - la methode naturelle" (French). INSEP - Musée de la Marine. பார்த்த நாள் 2007-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்ஜி_யபேர்&oldid=2193216" இருந்து மீள்விக்கப்பட்டது