ஜார்ஜியோ நபோலிடானோ
ஜார்ஜியோ நபோலிடானோ | |
---|---|
![]() | |
11வது இத்தாலியக் குடியரசுத்தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 15 மே 2006 | |
பிரதமர் | ரோமனோ பிராடி சில்வியோ பெர்லுஸ்கோனி மார்யோ மோன்டி |
முன்னவர் | கார்லோ அசுக்லியோ சியாம்பி |
இத்தாலிய உள்துறை அமைச்சர் | |
பதவியில் 17 மே 1996 – 21 அக்டோபர் 1998 | |
பிரதமர் | ரோமனோ பிராடி |
முன்னவர் | கியோவன்னி ரினால்டோ கோரோனாசு |
பின்வந்தவர் | ரோசா ரஸ்ஸோலெவோலினோ |
இத்தாலிய கீழவைத் தலைவர் | |
பதவியில் 3 சூன் 1992 – 14 ஏப்ரல் 1994 | |
முன்னவர் | ஆஸ்கார் லூய்கி ஸ்கால்பெரோ |
பின்வந்தவர் | இரீன் பைவெட்டி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 29 சூன் 1925 நேப்பிள்ஸ், இத்தாலி |
அரசியல் கட்சி | இடது சனநாயகவாதிகள் (1991–2007) |
பிற அரசியல் சார்புகள் |
இத்தாலியப் பொதுவுடமைக் கட்சி (1945–1991) |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிளியோ மாரியா பிட்டோனி |
பிள்ளைகள் | கியுலியோGiulio கியோவன்னி |
இருப்பிடம் | குயிரினல் அரண்மனை |
படித்த கல்வி நிறுவனங்கள் | நேப்பிள்ஸ் பெடெரிக்கோ II பல்கலைக்கழகம் |
சமயம் | இறைமறுப்பு |
கையொப்பம் | ![]() |
ஜார்ஜ் நபோலிடானோ (Giorgio Napolitano, பிறப்பு: சூன் 29, 1925) 2006ஆம் ஆண்டு முதல் இத்தாலியின் 11வது குடியரசுத் தலைவராக இருந்துவரும் அரசியல்வாதி ஆவார். இத்தாலியப் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக நெடுங்காலம் இருந்த நபோலிடானோ இடது சனநாயகவாதிகள் கட்சிக்கு மாறினார். 1992 முதல் 1994 வரை இத்தாலிய கீழவை (சாம்பர் ஆஃப் டெபுடீஸ்) அவைத்தலைவராகவும் 1996 முதல் 1998 வரை இத்தாலியின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
2005இல் வாழ்நாள் செனடராக நியமிக்கப்பட்டபின் 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார். மே15, 2006 அன்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டதிலிருந்து இப்பதவியில் உள்ளார். இத்தாலியப் பொதுவுடமைக் கட்சி உறுப்பினராக இருந்த ஒருவர் அந்நாட்டு குடியரசுத்தலைவராக ஆனது இவர் மட்டுமே.
குறிப்புகள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
- BBC News (10th May 2006). "Napolitano elected Italy's leader". http://news.bbc.co.uk/2/hi/europe/4757895.stm. பார்த்த நாள்: 10 May 2006.