ஜாரி மாவட்டம்
தோற்றம்
ஜாரி
ژړۍ | |
|---|---|
மாவட்டம் | |
| ஆள்கூறுகள்: 31°34′33″N 65°25′36″E / 31.57583°N 65.42667°E | |
| நாடு | |
| மாகாணம் | கந்தகார் மாகாணம் |
| தலைமையிடம் | பசப் |
| அரசு | |
| • மாவட்ட நிர்வாகி | ஜமால் அஹா |
| மக்கள்தொகை (2010) | |
| • மொத்தம் | 80,700 |
| நேர வலயம் | UTC+4:30 |

ஜாரி மாவட்டம் (Zhari District), ஆப்கானித்தான் நாட்டின் கந்தகார் மாகாணத்தின் 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பசப் நகரம் ஆகும். மேவந்த் மாவட்டம் மற்றும் பஞ்ச்வாய் மாவட்டங்களின் சில பகுதிகளைக் கொண்டு ஜாரி மாவட்டம் 2004ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்டது. 2010ஆம் ஆண்டில் இம்மாவட்ட மக்கள் தொகை 80,700 என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.[1]
புவியியல் & வேளாண்மை
[தொகு]அர்கந்தாப் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்த ஜாரி மாவட்டத்தில் திராட்சைத் தோட்டங்கள் அதிகம் உள்ளது. முன்னர் போதை தரும் கஞ்சா செடிகள் அதிகம் பயிரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Estimated population of Afghanistan 2010/2011. Kabul: Central Statistics Organization, 2010. p. 32